May 10, 2026 - 12:48 PM -
0
தெற்கு அதிவேக வீதியின் பெலியத்த மற்றும் கசாகல ஆகிய பகுதிகளுக்கு இடைப்பட்ட 154 ஆவது கிலோமீற்றர் மைல்கல்லுக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் 10 பேர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் அனைவரும் தற்போது தங்காலை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாணந்துறை பகுதியைச் சேர்ந்த மின்சார சபை ஊழியர்களை ஏற்றிக்கொண்டு கதிர்காமம் நோக்கிப் பயணித்த கார் ஒன்று, முன்னால் சென்ற லொறியின் பின்புறத்தில் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.
இந்த மோதலில் குறித்த லொறி வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
