May 11, 2026 - 12:30 PM -
0
தமிழக அரசியலில் புதிய பயணத்தைத் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், வரும் காலங்களில் ஈழத்தமிழர்களுக்காக முன்னைய முதலமைச்சர்களை விடவும் வலுவான தீர்மானங்களைச் சட்டசபையில் நிறைவேற்ற முன்வர வேண்டும் என இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேலும் கூறியதாவது,
தமிழக அரசியலில் இளம் வயதில் பொறுப்பேற்றுள்ள விஜய்யின் வருகை உலகத் தமிழர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. போராட்ட வலிகளை அறிந்தவர் என்ற வகையில், ஈழத்தமிழர் மீதான அவரது பார்வை ஆழமானதாக இருக்கும் என நம்புகிறோம்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆகியோர் ஈழத்தமிழர்களுக்காகச் சட்டசபையில் தீர்மானங்களைக் கொண்டு வந்துள்ளனர். அவற்றை விடவும் வீரியமிக்க தீர்மானங்களை விஜய் (வருங்காலத்தில்) கொண்டு வந்து, இனப்படுகொலைக்கான சர்வதேச நீதியைப் பெற்றுத்தர உழைக்க வேண்டும்.
இலங்கையில் அண்மைக்காலமாக நிகழும் முக்கிய அதிகாரிகளின் மர்ம மரணங்கள் குறித்து அரசு முறையான விசாரணை நடத்தி மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டும்.
பொருளாதார நெருக்கடியைக் காரணம்காட்டி புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தைப் புதிய அரசாங்கம் காலதாமதம் செய்து வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
--
