May 11, 2026 - 01:19 PM -
0
நீர்க்கட்டண மீளாய்வு எதிர்வரும் ஜூன் மாதம் 30ஆம் திகதி மேற்கொள்ளப்படும் என வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் கலாநிதி சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
ஆண்டுக்கு இருமுறை நீர்க்கட்டணம் திருத்தப்படுவதாகவும், அதற்கமைய ஜூன் 30ஆம் திகதி நிலவும் சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு நீர்க்கட்டணம் திருத்தப்படவுள்ளதாகவும் அமைச்சர் இங்கு மேலும் குறிப்பிட்டுள்ளார்.
