Header Logo

செய்திகள்
சைபர் குற்றங்கள் தொடர்பில் 198 வெளிநாட்டு பிரஜைகள் கைது

May 12, 2026 - 07:05 AM -

0

சைபர் குற்றங்கள் தொடர்பில் 198 வெளிநாட்டு பிரஜைகள் கைது

கணினி குற்றங்களில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில், 198 வெளிநாட்டு பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 

காலி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கல்வடுகொட பகுதியில் நேற்று (11) பொலிஸார் முன்னெடுத்த சுற்றிவளைப்பு நடவடிக்கையில் விடுதி ஒன்றில் தங்கியிருந்த 110 இந்திய பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

சந்தேகநபர்கள் 19 முதல் 35 வயதிற்கு இடைப்பட்டவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. 

அவர்களிடமிருந்து 58 கணினிகள், 79 கையடக்க தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், காலி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

இதேவேளை, ஹிக்கடுவ பொலிஸ் பிரிவிற்கு உட்பட தொடந்துவ பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் முன்னெடுத்த சுற்றிவளைப்பில் கணினி குற்றங்களில் ஈடுபட்டதாக 35 இந்திய பிரஜைகளும், 20 நேபாள பிரஜைகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். 

அத்துடன் அவர்களுக்கு தங்குமிட வசதிகளை வழங்கிய விடுதியின் உரிமையாளரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 

20 முதல் 48 வயதிற்கு இடைப்பட்ட சந்தேகநபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். 

சந்தேகநபர்களிடம் இருந்து 25 கணினிகள், 119 கையடக்க தொலைபேசிகள், 750,000 ரூபாய் பணம், கார் மற்றும் ஜீப் வாகனம் ஒன்றும் பொலிஸாரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளன.

அதேநேரம், மிதிகம பொலிஸ் பிரிவில் பிங்வத்தை பகுதியில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் தங்கியிருந்த 28 இந்திய பிரஜைகளும், 05 நேபாள பிரஜைகளும் பொலிஸார் முன்னெடுத்த சுற்றிவளைப்பில் கைது செய்யப்பட்டுள்ளனர். 

25 முதல் 35 வயதிற்கு இடைப்பட்ட சந்தேகநபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். 

உரிய விசாயின்றி தங்கியிருந்தமை, சட்டவிரோத சிகரெட்டுக்கள் வைத்திருந்தமை மற்றும் கணினி குற்றங்களின் கீழ் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Comments
0

MOST READ

காணொளி
100 நாட்களுக்குப் பிறகு மீண்டும் யாழ்ப்பாணம் வந்தடைந்தது!

100 நாட்களுக்குப் பிறகு மீண்டும் யாழ்ப்பாணம் வந்தடைந்தது!

விஜய்க்கு கேக் வெட்டி கொழும்பில் கொண்டாட்டம்!

விஜய்க்கு கேக் வெட்டி கொழும்பில் கொண்டாட்டம்!

பவானி வீதி தொடர்பான நீதிமன்றக் கட்டளை 21 ஆம் திகதி!

பவானி வீதி தொடர்பான நீதிமன்றக் கட்டளை 21 ஆம் திகதி!

சி.சிறீதரன் எம்.பி கோரிக்கை!

சி.சிறீதரன் எம்.பி கோரிக்கை!

அரசு முறையான விசாரணை நடத்தி மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டும்!

அரசு முறையான விசாரணை நடத்தி மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டும்!

சிங்களமயமாக்கப்படுவதற்கு சாணக்கியன் துணை போகிறாரா?

சிங்களமயமாக்கப்படுவதற்கு சாணக்கியன் துணை போகிறாரா?

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் 11 ஆவது நாள்!

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் 11 ஆவது நாள்!

ஏற்கனவே சாய்ந்தமருது நகரசபை உருவாகி விட்டது!

ஏற்கனவே சாய்ந்தமருது நகரசபை உருவாகி விட்டது!

சிறுவர்களின் எச்சங்களும் மீட்பு!

சிறுவர்களின் எச்சங்களும் மீட்பு!

ஹஜ்ஜுப் பெருநாள் என்பது தியாகத்தின் பெருநாளாகும்!

ஹஜ்ஜுப் பெருநாள் என்பது தியாகத்தின் பெருநாளாகும்!

title