Header Logo

செய்திகள்
கள்ளக்காதலனின் பசிக்கு மகளைப் இரையாக்கிய கொடூர தாய்!

May 6, 2026 - 10:01 AM -

0

கள்ளக்காதலனின் பசிக்கு மகளைப் இரையாக்கிய கொடூர தாய்!

தனது கள்ளக்காதலன் மகளைத் துஷ்பிரயோகம் செய்தமையை மறைத்தமை மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்ட தாய், எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:

பதவிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில், தாயின் கள்ளக்காதலனால் குறித்த சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. இது குறித்து பதவிய பகுதி குடும்ப சுகாதார உத்தியோகத்தர்கள் பொலிஸாருக்கு அறிவித்ததுடன், பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதில் துஷ்பிரயோகம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

மூன்று பிள்ளைகளின் தந்தையான ஒருவரே இக்குற்றத்தைச் செய்துள்ளதாகவும், அவர் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்தவர் என்றும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் குறித்து உறவினர்களும் கிராம மக்களும் பொலிஸாருக்குத் தகவல்களை வழங்கியுள்ளனர்.

சந்தேகநபர் இதுவரை கைது செய்யப்படவில்லை என்பதுடன், அவர் அப்பகுதியை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர். அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் பல கோணங்களில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

தனது மகளுக்கு இழைக்கப்பட்ட அநீதியை மறைத்து, அதற்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் குறித்த தாயைப் பதவிய பொலிஸார் கைது செய்தனர். நேற்று (05) கெபித்திகொல்லேவ நீதவான் நீதிமன்றில் அவர் ஆஜர்ப்படுத்தப்பட்டதை அடுத்து, எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.

பாதிக்கப்பட்ட சிறுமி அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் தங்கிச் சிகிச்சை பெற்ற பின்னர், தற்போது பதவிய பொலிஸாரின் பொறுப்பில் உள்ளார். சிறுமியின் பாதுகாப்பு குறித்து நீதிமன்றத்தில் சமர்ப்பணங்கள் முன்வைக்கப்படவுள்ளதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Comments
0

MOST READ

காணொளி
இந்த நோய் அறிகுறிகள் இருந்தால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்!

இந்த நோய் அறிகுறிகள் இருந்தால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்!

நுவரெலியாவில் கடும் மழை மற்றும் அடர்ந்த பனிமூட்டம்!

நுவரெலியாவில் கடும் மழை மற்றும் அடர்ந்த பனிமூட்டம்!

மண்டூர் - வெல்லாவெளி போக்குவரத்து முற்றாகத் துண்டிப்பு!

மண்டூர் - வெல்லாவெளி போக்குவரத்து முற்றாகத் துண்டிப்பு!

100 நாட்களுக்குப் பிறகு மீண்டும் யாழ்ப்பாணம் வந்தடைந்தது!

100 நாட்களுக்குப் பிறகு மீண்டும் யாழ்ப்பாணம் வந்தடைந்தது!

விஜய்க்கு கேக் வெட்டி கொழும்பில் கொண்டாட்டம்!

விஜய்க்கு கேக் வெட்டி கொழும்பில் கொண்டாட்டம்!

பவானி வீதி தொடர்பான நீதிமன்றக் கட்டளை 21 ஆம் திகதி!

பவானி வீதி தொடர்பான நீதிமன்றக் கட்டளை 21 ஆம் திகதி!

சி.சிறீதரன் எம்.பி கோரிக்கை!

சி.சிறீதரன் எம்.பி கோரிக்கை!

அரசு முறையான விசாரணை நடத்தி மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டும்!

அரசு முறையான விசாரணை நடத்தி மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டும்!

சிங்களமயமாக்கப்படுவதற்கு சாணக்கியன் துணை போகிறாரா?

சிங்களமயமாக்கப்படுவதற்கு சாணக்கியன் துணை போகிறாரா?

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் 11 ஆவது நாள்!

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் 11 ஆவது நாள்!

title