Header Logo

செய்திகள்
தோல்வியை தழுவினார் முதலமைச்சர் ஸ்டாலின்

May 4, 2026 - 04:06 PM -

0

தோல்வியை தழுவினார் முதலமைச்சர் ஸ்டாலின்

போடிநாயக்கனூர் தொகுதியின் திமுக வேட்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் வெற்றி பெற்றுள்ளார்.
 



திருவெறும்பூர் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் அமைச்சர் அன்பில் மகேஷ் தோல்வி அடைந்துள்ளார். அதே தொகுதியில் போட்டியிட்ட த.வெ.க. வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.
 




விருதாச்சலம் தொகுதியில் தேமுதிக வேட்பாளர் பிரேமலதா விஜயகாந்த் வெற்றி பெற்றுள்ளார்.
 




பெரம்பூர் தொகுதியில் த.வெ.க. தலைவர் விஜய் சுமார் 40,000 வாக்குகள் வித்தியாசத்தில் விஜய் வெற்றி பெற்றார்.



வில்லிவாக்கம் தொகுதியில் த.வெ.க வேட்பாளர் ஆதவ் அர்ஜூனா சுமார் 16,000 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளார்.



4.30 UPDATE - சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெற்றி பெற்றுள்ளார்.
 


 



தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த மாதம் (ஏப்ரல்) 23-ந் திகதி ஒரே கட்டமாக நடந்தது. 

தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணியில் இருந்து எண்ணப்பட்டு வருகின்றன. 

முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. இதைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. 

இன்று மாலை 4 மணியளவில் தமிழகத்தில் மொத்தமுள்ள 234 இடங்களில் 111 இடங்களில் தவெக முன்னிலை பெற்றுள்ளது. 

திமுக 66, அதிமுக 57 இடங்களிலும் முன்னிலைப் பெற்றுள்ளன. 

இந்நிலையில் திமுக கூட்டணியின் தலைவரும் தற்போதைய முதலமைச்சருமான மு.க ஸ்டாலின் 4718 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளார். 

கொளத்தூர் தொகுதியில் களமிறங்கிய மு.க.ஸ்டாலின் எளிதாக வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. 

ஆனால் விசில் சத்தம் ஓங்கி ஒலித்ததால் அவர் சரிவை சந்தித்தார். 

வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் இருந்தே அவரால் முன்னிலையை அடைய முடியவில்லை. 

இறுதியில் கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் 67,530 வாக்குகள் பெற்றுள்ளார். 

4718 வாக்கு வித்தியாசத்தில் அவர் தோல்வியை சந்தித்துள்ளார். 

அவரை எதிர்த்து போட்டியிட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் வி.எஸ் பாபு வெற்றிபெற்றுள்ளார். 

முதலமைச்சராக பதவியேற்ற பிறகு முதல் சட்டசபை தேர்லில் மு.க.ஸ்டாலின் தோல்வியை சந்தித்துள்ளார். 

கருணாநிதி மறைவிற்கு பிறகு திமுக தலைவராக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின் அனைத்து தேர்தலிலும் வெற்றி (திமுக) பெற்று வந்தார். 

தற்போது முதல் முறையாக 2026 சட்டசபை தேர்தலில் திமுக தோல்வியை சந்தித்துள்ளது. 

ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது 1996 -ம் ஆண்டு நடந்த தேர்தலில் தோல்வியை சந்தித்தார். 

அதேபோல் முதலமைச்சராக இருந்து மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் தோல்வி அடைந்துள்ளார். 

இதேவேளை அதிமுக கூட்டணியின் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி அவர் போட்டியிட்ட எடப்பாடி தொகுதியில் வெற்றிபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
0

MOST READ

காணொளி
இந்த நோய் அறிகுறிகள் இருந்தால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்!

இந்த நோய் அறிகுறிகள் இருந்தால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்!

நுவரெலியாவில் கடும் மழை மற்றும் அடர்ந்த பனிமூட்டம்!

நுவரெலியாவில் கடும் மழை மற்றும் அடர்ந்த பனிமூட்டம்!

மண்டூர் - வெல்லாவெளி போக்குவரத்து முற்றாகத் துண்டிப்பு!

மண்டூர் - வெல்லாவெளி போக்குவரத்து முற்றாகத் துண்டிப்பு!

100 நாட்களுக்குப் பிறகு மீண்டும் யாழ்ப்பாணம் வந்தடைந்தது!

100 நாட்களுக்குப் பிறகு மீண்டும் யாழ்ப்பாணம் வந்தடைந்தது!

விஜய்க்கு கேக் வெட்டி கொழும்பில் கொண்டாட்டம்!

விஜய்க்கு கேக் வெட்டி கொழும்பில் கொண்டாட்டம்!

பவானி வீதி தொடர்பான நீதிமன்றக் கட்டளை 21 ஆம் திகதி!

பவானி வீதி தொடர்பான நீதிமன்றக் கட்டளை 21 ஆம் திகதி!

சி.சிறீதரன் எம்.பி கோரிக்கை!

சி.சிறீதரன் எம்.பி கோரிக்கை!

அரசு முறையான விசாரணை நடத்தி மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டும்!

அரசு முறையான விசாரணை நடத்தி மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டும்!

சிங்களமயமாக்கப்படுவதற்கு சாணக்கியன் துணை போகிறாரா?

சிங்களமயமாக்கப்படுவதற்கு சாணக்கியன் துணை போகிறாரா?

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் 11 ஆவது நாள்!

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் 11 ஆவது நாள்!

title