May 12, 2026 - 09:57 AM -
0
முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது அவர்கள் தெரிவித்ததாவது,
அ.தி.மு.க.வை உடைக்க வேண்டும் என்ற நோக்கமே எங்களுக்கு கிடையாது. தவறான தகவல்கள் பரப்பப்படுகிறது. அ.தி.மு.க.வை பிளவுப்படுத்தும் நோக்கம் எங்களுக்கு கிடையாது. தொடர் தோல்வியால் இந்த முடிவை எடுத்திருக்கிறோம்.
தேர்தலுக்கு பின் அதிமுக எந்த கூட்டணியிலும் இல்லை. அ.தி.மு.க. பொதுக்குழுவை எடப்பாடி பழனிசாமி கூட்டுவார், கூட்ட வேண்டும்.
அ.தி.மு.க. சட்டமன்ற குழு தலைவர் எஸ்.பி.வேலுமணி, கொறடாவாக விஜயபாஸ்கர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் உடைவதற்கு நாங்கள் காரணமாக இருக்க மாட்டோம்.
திமுக ஆதரவோடு ஆட்சியமைக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விரும்பினார். எடப்பாடி பழனிசாமி கூறிய முடிவை கேட்டு பேரதிர்ச்சிக்குள்ளானோம். திமுகவை எதிர்த்து தொடங்கப்பட்ட இயக்கம் அதிமுக.
தி.மு.க.வுடன் இணையக்கூடாது என்றோம். அதனை எடப்பாடி பழனிசாமி ஏற்கவில்லை. எங்கள் கோரிக்கையை எடப்பாடி பழனிசாமி புரிந்து கொள்ள வேண்டும்.
தமிழக வெற்றிக்கழகத்தை ஆதரிப்பது என அதிமுக பெரும்பான்மை சட்டமன்ற உறுப்பினர்களின் முடிவு என்றனர்.
