Header Logo
Mogo Academy

வணிகம்
Suzuki வாகனங்களுக்கான நீடிக்கப்பட்ட உத்தரவாதத்தை இணைந்து அறிமுகப்படுத்தும் AMW மற்றும் Orient Insurance

May 12, 2026 - 10:12 AM -

0

Suzuki வாகனங்களுக்கான நீடிக்கப்பட்ட உத்தரவாதத்தை இணைந்து அறிமுகப்படுத்தும் AMW மற்றும் Orient Insurance
Mobitel inner

இலங்கையில் Suzuki வாகனங்களுக்கான நீடிக்கப்பட்ட உத்தரவாதத் திட்டத்தை (Extended Warranty Programme) அறிமுகப்படுத்துவதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கான விற்பனைக்குப் பின்னரான சேவையின் மதிப்பை மேம்படுத்த Orient Insurance நிறுவனத்துடன் மூலோபாய ரீதியான கூட்டாண்மையில் அசோசியேட்டட் மோட்டார்வேஸ் (பிரைவேட்) லிமிடெட் (AMW) நிறுவனம் இணைந்துள்ளது. 

ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த ஒத்துழைப்புத் திட்டமானது, AMW ஊடாக Suzuki வாகனங்களை கொள்வனவு செய்யும் வாடிக்கையாளர்கள் மேம்படுத்தப்பட்ட உத்தரவாதச் சலுகையைப் பெற வழிவகுக்கிறது. 2026 மே 01 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில், உற்பத்தியாளரின் வழக்கமான 3 வருடங்கள் அல்லது 100,000 கி.மீ. உத்தரவாதமானது, 5 வருடங்கள் அல்லது 150,000 கி.மீ. ஆக நீடிக்கப்பட்டுள்ளது. இது வாடிக்கையாளர்களுக்கு மேலதிக மன நிம்மதியையும் நீண்டகாலத்திற்கான வாகன உரிமைத்துவத்திற்கான நம்பிக்கையையும் வழங்குகிறது. 

இந்த திட்டமானது வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்துவதற்கும் Suzuki வர்த்தகநாமம் மீதான நம்பிக்கையை வலுப்படுத்துவதற்கும் இரு நிறுவனங்களும் கொண்டுள்ள பகிரப்பட்ட அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது. AMW நிறுவனத்தின் வலுவான வாகன விநியோகம் மற்றும் விற்பனைக்குப் பின்னரான நிபுணத்துவத்தை, Orient Insurance நிறுவனத்தின் இடர் முகாமைத்துவம் மற்றும் பாதுகாப்புத் தீர்வுகளுடன் இணைப்பதன் மூலம், இக்கூட்டாண்மையானது வாகன உரிமையாளர்களுக்கு சந்தையில் மிகவும் விரிவான ஒரு வாய்ப்பை அறிமுகப்படுத்துகிறது. 

AMW மற்றும் Orient Insurance ஆகிய இரு நிறுவனங்களும் உலகளாவிய ரீதியில் பன்முகப்படுத்தப்பட்ட Al-Futtaim குழுமத்தின் ஒரு அங்கமாகும். இது இலங்கையிலுள்ள வாடிக்கையாளர்களுக்கு மேம்படுத்தப்பட்ட மதிப்பை வழங்குவதற்காக வாகன மற்றும் நிதிச் சேவைகளில் ஒருங்கிணைந்து செயற்பட வாய்ப்பை வழங்குகிறது. 

இந்த ஒப்பந்த கைச்சாத்திடல் நிகழ்வில் AMW நிறுவனம் சார்பில் அதன் முகாமைத்துவப் பணிப்பாளர் ஜவாஹர் கணேஷ், விற்பனைப் பணிப்பாளர் பிரசன்ன டி சில்வா, விற்பனைக்குப் பின்னரான சேவைப் பணிப்பாளர் சமந்த வணிகரத்ன, திட்டமிடல் மற்றும் தயாரிப்புப் பொது முகாமையாளர் சஹன் ஜயவர்ண உள்ளிட்ட நிறுவனத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர். Orient Insurance சார்பில் அதன் முகாமைத்துவப் பணிப்பாளரும் அதன் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான தனுஜ் எட்வர்ட் உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர். 

இந்த நீடிக்கப்பட்ட உத்தரவாதத் திட்டமானது Suzuki வாகனங்கள் மீதான வாடிக்கையாளர் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுவதுடன், அதிகரித்து வரும் போட்டி மிக்க சந்தையில் வாடிக்கையாளர்களை மையப்படுத்திய தனித்துவமான போக்குவரத்து தீர்வுகளை வழங்குவதற்கான AMW நிறுவனத்தின் பரந்த மூலோபாயத்திற்கு ஆதரவளிக்கிறது.


MOST READ

காணொளி
நுவரெலியாவில் கடும் பனிமூட்டம்!

நுவரெலியாவில் கடும் பனிமூட்டம்!

உள நலம் என்பது மிக முக்கியமான ஒன்றாகும்!

உள நலம் என்பது மிக முக்கியமான ஒன்றாகும்!

மட்டக்களப்பு தற்காலிக பாலம் இன்று திறப்பு!

மட்டக்களப்பு தற்காலிக பாலம் இன்று திறப்பு!

மீனவர்கள் தினமும் பல சவால்களை எதிர்கொள்கின்றனர்!

மீனவர்கள் தினமும் பல சவால்களை எதிர்கொள்கின்றனர்!

கதிர்காமப் பாதயாத்திரை ஆரம்பம்!

கதிர்காமப் பாதயாத்திரை ஆரம்பம்!

தமிழீழ வைப்பகத்தில் அடகு வைத்த  நகைகளை மக்களிடம் மீள ஒப்படையுங்கள்!

தமிழீழ வைப்பகத்தில் அடகு வைத்த நகைகளை மக்களிடம் மீள ஒப்படையுங்கள்!

நீதிமன்ற அனுமதியின்றி சொத்துக்கள் முடக்கமா?

நீதிமன்ற அனுமதியின்றி சொத்துக்கள் முடக்கமா?

நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகளுக்காக 23 நாட்கள் சிறைவாசம் இருந்துள்ளேன்!

நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகளுக்காக 23 நாட்கள் சிறைவாசம் இருந்துள்ளேன்!

சம்பிரதாயத்தை மீறி உடையணிந்து வந்தாரா அர்ச்சுனா எம்.பி? சபையில் சலசலப்பு

சம்பிரதாயத்தை மீறி உடையணிந்து வந்தாரா அர்ச்சுனா எம்.பி? சபையில் சலசலப்பு

யாழ். பல்கலைக்கழக முன்றலில் பாலியல் வன்முறைக்கு எதிராகப் போராட்டம்!

யாழ். பல்கலைக்கழக முன்றலில் பாலியல் வன்முறைக்கு எதிராகப் போராட்டம்!

Mobitel Upahara