Header Logo

வணிகம்
ஜனசக்தி லைஃப், “ஷில்பசக்தி” நிகழ்ச்சித் திட்டம் மூலம் கல்விக்கான அர்ப்பணிப்பை வலுப்படுத்துகிறது

May 12, 2026 - 02:48 PM -

0

ஜனசக்தி லைஃப், “ஷில்பசக்தி” நிகழ்ச்சித் திட்டம் மூலம் கல்விக்கான அர்ப்பணிப்பை வலுப்படுத்துகிறது

காப்புறுதித் துறையில் முன்னணி நிறுவனமாகவும், JXG (ஜனசக்தி குழுமத்தின்) முதன்மை வர்த்தக நாமமாகவும் திகழும் ஜனசக்தி லைஃப், கல்வியாளர் பாரத லங்காகே உடன் இணைந்து, 5,000 இற்கும் மேற்பட்ட ஐந்தாம் தர புலமைப்பரிசில் மாணவர்களுக்கு கல்வி வழிகாட்டல் வழங்கும் ஷில்பசக்தி என்ற கல்வி நிகழ்ச்சித் திட்டத்தை நடத்தியது. மேலும், இந் நிகழ்ச்சியின் ஊடாக குலுக்கல் முறை மூலம் ஐந்து மாணவர்களை தெரிவு செய்து, அவர்களுக்கு tablets மற்றும் இரு தளப் பேரூந்தில் கொழும்பு நகரச் சுற்றுப்பயணத்தையும் வழங்கியது. 

இது கல்வி ஊடாக இளம் மாணவர்களை ஊக்கமளிக்கும் நிறுவனத்தின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியது. சிறந்த வெற்றியாளர்களாக L. தரிந்து தனுஷ்க, A.G. ஹசந்தி சஞ்சலிகா சத்சரணி, K.M. நேஹா டெவ்லிந்தி குணதிலக்க, W. தினக்ஷா சஸ்விந்து கருணாதிலக மற்றும் K. லகிந்து அயேஷ் இந்துவர ஆகியோர் தங்கள் சாதனைகளுக்காக அங்கீகரிக்கப்பட்டனர். மனிதவளத் தலைவர் தனுஷ்க சமரசிங்க, தலைமை வணிக அதிகாரி நாமலி A. சில்வா, சந்தைப்படுத்தல் சேவைகள் - சிரேஷ்ட நிறைவேற்று அதிகாரி உமேஷ் மதுஷாந்த் மற்றும் ஜனசக்தி இன்சூரன்ஸ் பிஎல்சியின் மூலோபாயம் மற்றும் திட்டமிடல் பிரிவின் தலைவர் ஜூட் சில்வா ஆகியோரால் விருதுகள் வழங்கப்பட்டன. 

ஜனசக்தி லைஃப் பற்றி 

1994 ஆம் ஆண்டு ஆயுள் காப்புறுதி நிறுவனமாக ஸ்தாபிக்கப்பட்ட ஜனசக்தி இன்சூரன்ஸ் பிஎல்சி (ஜனசக்தி லைஃப்), துறையில் புத்தாக்கமான செயற்பாட்டாளராக தன்னை அடையாளப்படுத்தியுள்ளதுடன், 30 வருடங்களுக்கு மேலாக அனைவர் மத்தியில் அறியப்படும் நாமமாகவும் திகழ்கின்றது. ஜனசக்தி இன்சூரன்ஸ் பிஎல்சி நிறுவனமானது, இலங்கை காப்புறுதி ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவினால் உரிமம் பெற்றுள்ளது. இது நாடு முழுவதிலும் பரந்த 76 கிளைகளுடன் உறுதியான பிரசன்னத்தை கொண்டுள்ளது. மேலும், “வாழ்க்கையை மேம்படுத்தல் மற்றும் கனவுகளுக்கு வலுவூட்டல்” எனும் நோக்கத்துக்கமைய, ஆயுள் காப்புறுதித் துறையில் முன்னோடியாக திகழ்வதற்காக ஜனசக்தி லைஃப் தன்னை அர்ப்பணித்துள்ளதுடன், அதற்காக தனது வாடிக்கையாளர்கள் மற்றும் பங்காளர்களுக்கு காப்புறுதிக்கு அப்பாலான சேவையை வழங்குகின்றது.


MOST READ

காணொளி
காலி முகத்திடலில் அரங்கேறிய கின்னஸ் சாதனை

காலி முகத்திடலில் அரங்கேறிய கின்னஸ் சாதனை

355 மனித என்புத் தொகுதிகள் அடையாளம்!

355 மனித என்புத் தொகுதிகள் அடையாளம்!

கோப்பாய் பொலிஸ் நிலையம் திறந்து வைப்பு!

கோப்பாய் பொலிஸ் நிலையம் திறந்து வைப்பு!

23 ஆம் நாள் அகழ்வில் மேலும் 12 என்புக்கூடுகள் அடையாளம்!

23 ஆம் நாள் அகழ்வில் மேலும் 12 என்புக்கூடுகள் அடையாளம்!

பாராளுமன்றில் அர்ச்சுனா அதிரடி!

பாராளுமன்றில் அர்ச்சுனா அதிரடி!

தமிழ் மக்கள் மத்தியில் நம்பிக்கை கட்டியெழுப்பப்பட வேண்டும்!

தமிழ் மக்கள் மத்தியில் நம்பிக்கை கட்டியெழுப்பப்பட வேண்டும்!

அரசாங்கம் ஓர் அரசியல் நாடகத்தை ஆடுகிறது!

அரசாங்கம் ஓர் அரசியல் நாடகத்தை ஆடுகிறது!

சிறந்த பொருளாதாரக் கொள்கையுடன் பயணித்துக் கொண்டு இருக்கின்றோம்!

சிறந்த பொருளாதாரக் கொள்கையுடன் பயணித்துக் கொண்டு இருக்கின்றோம்!

விவசாயிகள் நஞ்சு குடித்து உயிரை மாய்ப்பதா?

விவசாயிகள் நஞ்சு குடித்து உயிரை மாய்ப்பதா?

ரியாஸ் பாருக் பாராளுமன்றில் அதிரடி!

ரியாஸ் பாருக் பாராளுமன்றில் அதிரடி!

title