Header Logo
SLIC
மலையகம்
நுவரெலியாவில் கடும் மழை மற்றும் அடர்ந்த பனிமூட்டம்!

May 13, 2026 - 10:54 AM

நுவரெலியாவில் கடும் மழை மற்றும் அடர்ந்த பனிமூட்டம்!
Mobitel Inner 1278
EDEX Inner

மத்திய மலை நாட்டில் கடந்த சில தினங்களாக நிலவி வரும் சீரற்ற வானிலையால் நுவரெலியா மாவட்டத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து கடும் மழை பெய்து வருகிறது. 

குறிப்பாக நுவரெலியா பிரதான நகர், ஹவாஎலிய,கந்தபளை, நானுஓயா, ரதல்ல, தலவாக்கலை போன்ற இடங்களில் தொடர்ந்து கடும் மழை மற்றும் அடர்ந்த பனிமூட்டம் நிறைந்த காலநிலை காணப்படுகின்றன. 

மேலும் இன்று (13) அதிகாலை முதல் மழையுடன் கூடிய அடர்ந்த பனிமூட்டம் காணப்படுவதால், வாகனங்களுக்கு இடையிலான தூரத்தை அவதானிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது பனிமூட்டத்தால் வீதிகளில் ஆபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளதால், வேகத்தைக் குறைத்து, முகப்பு விளக்குகளை (Fog lights) ஒளிரவிட்டுச் செல்லுமாறு போக்குவரத்துப் பொலிஸார் சாரதிகளை வலியுறுத்தியுள்ளனர். 

இதில் அதிகமாக நுவரெலியா - பதுளை பிரதான வீதி , நுவரெலியா - ஹட்டன் பிரதான வீதி மற்றும் நுவரெலியா - கண்டி பிரதான வீதிகளில் வாகனப் போக்குவரத்து அதிகமாக உள்ளமையால் சாரதிகள் மிகவும் அவதாரத்துடன் செயல்பட வேண்டும் என போக்குவரத்து பொலிஸார் சாரதிகளுக்கு வேண்டுகோள் விடுகின்றனர். 

நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ந்து இடைவிடாது மழை பெய்து வருவதால், ஏற்கெனவே மழையால் அதிகம் பாதிக்கப்பட்ட நுவரெலியா - ஹட்டன் ,நுவரெலியா - கண்டி, நுவரெலியா- பதுளை பிரதான வீதிகளில் சீரமைப்புப் பணிகள் தொய்வடைந்து உள்ளன எனவே குறித்த வீதிகளில் பாதுகாக்க பயணிக்க கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போது காணப்படும் மாறுபட்ட இந்தக் காலநிலையின் காரணமாக கடுமையான குளிரும் நிலவி வருகிறது.

MOST READ

காணொளி
செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

Mobitel 1278