Header Logo

வடக்கு
பொலிஸ் காவலில் இருந்த இளைஞனுக்கு திடீர் உடல்நலக்குறைவு!

May 13, 2026 - 02:11 PM -

0

பொலிஸ் காவலில் இருந்த இளைஞனுக்கு திடீர் உடல்நலக்குறைவு!

யாழில் 10 கிராம் ஹெரோயினை விழுங்கிய 21 வயதுடைய இளைஞர் ஒருவர் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றார். 

இது குறித்து மேலும் தெரியவருகையில், 

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் - கல்லவேம்படி பகுதியைச் சேர்ந்த குறித்த இளைஞனை வட்டுக்கோட்டை பொலிஸார் நேற்று (12) 2 கிராம் ஹெரோயினுடன் கைது செய்தனர். 

கைது செய்து பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று பொலிஸ் தடுப்பு காவலில் வைத்திருந்தனர். இந்நிலையில் இன்று (13) காலை அவருக்கு உடல் சுகயீனம் ஏற்பட்டது. 

அதன்பின்னரே, பொலிஸார் தன்னை கைது செய்ய வரும்போது 10 கிராம் எடையுடைய ஹெரோயினை பொலுத்தீன் பையுடன் விழுங்கிய விடயத்தை கூறியுள்ளார். 

பின்னர் பொலிஸார் அவரை சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பித்துள்ளனர். குறித்த இளைஞனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. 

இதேவேளை குறித்த இளைஞன் இதற்கு முன்னரும் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட நிலையில் அவருக்கு எதிரான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றதாக பொலிஸ் தெரிவித்தனர்.

--

Comments
0

MOST READ

காணொளி
இந்த நோய் அறிகுறிகள் இருந்தால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்!

இந்த நோய் அறிகுறிகள் இருந்தால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்!

நுவரெலியாவில் கடும் மழை மற்றும் அடர்ந்த பனிமூட்டம்!

நுவரெலியாவில் கடும் மழை மற்றும் அடர்ந்த பனிமூட்டம்!

மண்டூர் - வெல்லாவெளி போக்குவரத்து முற்றாகத் துண்டிப்பு!

மண்டூர் - வெல்லாவெளி போக்குவரத்து முற்றாகத் துண்டிப்பு!

100 நாட்களுக்குப் பிறகு மீண்டும் யாழ்ப்பாணம் வந்தடைந்தது!

100 நாட்களுக்குப் பிறகு மீண்டும் யாழ்ப்பாணம் வந்தடைந்தது!

விஜய்க்கு கேக் வெட்டி கொழும்பில் கொண்டாட்டம்!

விஜய்க்கு கேக் வெட்டி கொழும்பில் கொண்டாட்டம்!

பவானி வீதி தொடர்பான நீதிமன்றக் கட்டளை 21 ஆம் திகதி!

பவானி வீதி தொடர்பான நீதிமன்றக் கட்டளை 21 ஆம் திகதி!

சி.சிறீதரன் எம்.பி கோரிக்கை!

சி.சிறீதரன் எம்.பி கோரிக்கை!

அரசு முறையான விசாரணை நடத்தி மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டும்!

அரசு முறையான விசாரணை நடத்தி மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டும்!

சிங்களமயமாக்கப்படுவதற்கு சாணக்கியன் துணை போகிறாரா?

சிங்களமயமாக்கப்படுவதற்கு சாணக்கியன் துணை போகிறாரா?

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் 11 ஆவது நாள்!

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் 11 ஆவது நாள்!

title