Header Logo
Mogo Academy

விளையாட்டு
மும்பை இந்தியன்ஸில் அடுத்த சர்ச்சை!

May 13, 2026 - 05:43 PM -

0

மும்பை இந்தியன்ஸில் அடுத்த சர்ச்சை!
Mobitel inner

ஐபிஎல் 2026 தொடரில் தொடர்ந்து தோல்விகளை சந்தித்து நடப்பு தொடரில் இருந்து வெளியேறும் நிலையில் மும்பை இந்தியன்ஸ் இருந்து வருகிறது. அணியின் தலைவர் ஹர்திக் பாண்டியா கடந்த சில போட்டிகளில் காயம் காரணமாக விளையாடவில்லை. 

இதுகுறித்து மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் மஹேல ஜெயவர்தன, ஹர்திக் பாண்டியாவிற்கு முதுகில் தசைப்பிடிப்பு ஏற்பட்டுள்ளது. வைத்தியக் குழுவினர் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள் என்று கூறினார். 

மேலும் கடந்த சில நாட்களாகவே அவரால் எவ்வித பயிற்சியிலும் ஈடுபட முடியவில்லை, காயம் காரணமாக களமிறங்கவில்லை என்று கூறியிருந்தார். 

ஆனால் இப்படி அவர் கூறிய சில மணி நேரங்களில், ஹர்திக் பாண்டியா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பயிற்சி செய்யும் இரு வீடியோகளை ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார். 

11 போட்டிகளில் 8 போட்டிகளில் தோல்வியடைந்த நிலையில் அடுத்த போட்டிக்காக மும்பை இந்தியன்ஸ் அனி வீரர்கள் அனைவரும் தரம்சாலாவிற்கு புறப்பட, ஹர்திக் பாண்டியா மட்டும் செல்லவில்லை. 

அவருக்கு பதில் இந்த போட்டியிலும் சூர்ய குமார் யாதவ் அணி தலைவராக செயல்படுவார் என்று கூறப்படுகிறது. காயம் தான் காரணமா அல்லது நிர்வாகத்துடன் ஏதேனும் பிரச்சனையால் விலகி இருக்கிறாரா? ஹர்திக் என்ற குழப்பத்தை ரசிகர்கள் மத்தியில் எழுந்து வருகிறது.


MOST READ

காணொளி
செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

Mobitel Upahara