Header Logo

வணிகம்
செலிங்கோ லைஃப் நிறுவனம் களுத்துறை போதனா வைத்தியசாலைக்கு மருத்துவ வாயு குழாய் கட்டமைப்பை நிறுவியது

May 13, 2026 - 06:33 PM -

0

செலிங்கோ லைஃப் நிறுவனம் களுத்துறை போதனா வைத்தியசாலைக்கு மருத்துவ வாயு குழாய் கட்டமைப்பை நிறுவியது

செலிங்கோ லைஃப் நிறுவனமானது தனது நீண்டகால அர்ப்பணிப்பை இலங்கை அரசாங்க பொதுச் சுகாதார அமைப்பிற்கு மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில், களுத்துறை போதனா வைத்தியசாலைக்கு முழுமையான மையப்படுத்தப்பட்ட மருத்துவ வாயு குழாய் கட்டமைப்பை (Centralised Medical Gas Pipeline System - MGPS) நிறுவி நன்கொடையாக வழங்கியுள்ளது. செலிங்கோ லைஃப் நிறுவனத்தின் இந்த முயற்சியானது நோயாளர் பாதுகாப்பு, அறுவைச் சிகிச்சை திறன் மற்றும் மருத்துவமனை அடித்தள வசதிகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 

மொத்தம் ரூ. 19 மில்லியன் செலவில் செயல்படுத்தப்பட்ட இந்த திட்டத்தின் மூலம், மருத்துவமனையின் ஒக்சிஜன் செறிவூட்டும் கருவி பழுது பார்க்கப்பட்டதுடன், அது குழாய் அமைப்புடன் ஒருங்கிணைக்கப்பட்டது. செலிங்கோ லைஃப் நிறுவனமானது அரசாங்க சுகாதார நிறுவனங்களை வலுப்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்படும் தனது நிறுவன சமூகப் பொறுப்பு (CSR) திட்டத்தின் ஒரு பகுதியாக, இந்தத் திட்டத்திற்கான முழு நிதியையும் வழங்கியுள்ளது. 

மருத்துவமனை முன்பு பயன்படுத்தி வந்த கையால் மாற்றப்படும் சிலிண்டர் அடிப்படையிலான வழங்கல் முறையை மாற்றியமைத்து, இந்த MGPS முறைமை மூலம் அத்தியாவசிய மருத்துவ வாயுக்களை தொடர்ந்து, நம்பகமாக மற்றும் மருத்துவ ரீதியில் திறமையான முறையில் அவசர சிகிச்சைப் பிரிவுகளுக்கு வழங்கும் வசதியை அறிமுகப்படுத்துகிறது. இந்த அமைப்பில் நான்கு தனித்துவமான வாயு வழிகள் உள்ளன: நோயாளிகளின் சுவாசம், மயக்க மருந்து வழங்கல் மற்றும் புதிதாகப் பிறந்த குழந்தைகளின் பராமரிப்பிற்காக சுமார் 4 பார் அழுத்தத்தில் பராமரிக்கப்படும் மருத்துவ வாயு துளையிடும் கருவிகள் மற்றும் எலும்பு அறுக்கும் கருவிகள் போன்ற காற்றழுத்தவியல்அறுவைச் சிகிச்சை உபகரணங்களையும் அறுவைச் சிகிச்சை தொங்கு சாதனங்களையும் இயக்க 7 பார் அழுத்தத்தில் வழங்கப்படும் அறுவைச் சிகிச்சைவாயு மயக்க மற்றும் அமைதிநிலை சிகிச்சைக்கான நைட்ரஸ் ஒக்சைடு மற்றும் தடையற்ற மருத்துவப் பயன்பாட்டிற்காக மையப்படுத்தப்பட்ட குழாய் முறைமையின் மூலம் வழங்கப்படும் ஒக்சிஜன். 

இந்தத் திட்டத்தின் முக்கிய அம்சமாக, மருத்துவமனையின் ஒக்சிஜன் செறிவூட்டும் கருவி குழாய் வலையமைப்புடன் ஒருங்கிணைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம், அது முழுத் திறனுடன் செயல்பட்டு 95 சதவீதம் வரை தூய்மையான மருத்துவ தர ஒக்சிஜனை வழங்கும் திறனை பெற்றுள்ளது. இதற்காக, நீண்ட காலமாக பயன்படுத்தப்படாமல் இருந்த அந்த கருவி பழுதுபார்க்கப்பட்டது; ஆண்டு பராமரிப்பு தொகுப்பு சேர்க்கப்பட்டது; மேலும் மருத்துவமனையின் மருத்துவ வாயு வலையமைப்பிற்காக தானியங்கி மாற்று கட்டுப்பாட்டு பலகையும் நிறுவப்பட்டது. 

தற்போது, இந்த முறைமையானது வார்டுகள் 03, 16 மற்றும் 10, அதேபோல் அறுவைச் சிகிச்சை அறைகள் C மற்றும் D ஆகியவற்றிற்கு தடையற்ற மருத்துவ வாயு வழங்கலை உறுதிசெய்கிறது. இதன் மூலம் 60 உள்நோயாளர் படுக்கைகள், ஐந்து அறுவைச் சிகிச்சை அறை படுக்கைகள் மற்றும் தினமும் சுமார் 40 அறுவைச் சிகிச்சை நடவடிக்கைகள் ஆதரிக்கப்படுகின்றன. 

இந்தத் திட்டத்தின் நன்மை தொடர்பாக டொக்டர் திருமதி.எஸ்.எம்.பி கருணாரத்ன கருத்து தெரிவிக்கையில், புதிய முறைமையானது மருத்துவமனையின் மருத்துவ அடித்தள வசதிகளில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வந்த மேம்பாடாக இருப்பதாக கூறினார். மையப்படுத்தப்பட்ட மற்றும் நிலையான மருத்துவ வாயு வழங்கல் கிடைப்பதன் மூலம், குறிப்பாக அவசர சிகிச்சை மற்றும் அறுவைச் சிகிச்சை பிரிவுகளில் நோயாளிகளின் தேவைகளுக்கு விரைவாகவும் பாதுகாப்பாகவும் பதிலளிக்கும் மருத்துவமனையின் திறன் குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். மேலும், இதன் மூலம் மருத்துவமனைக்கு மாதந்தோறும் ரூ. 75,000 சேமிப்பு கிடைத்துள்ளதாகவும் தெரிவித்தார். அதேசமயம், AGSSமுறைமை சேர்க்கப்பட்டதன் மூலம் நோயாளிகளுக்கும் மருத்துவ ஊழியர்களுக்கும் பாதுகாப்பு தரநிலைகள் மேலும் வலுப்பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார். 

ஆர்.ரெங்கநாதன் இந்த முயற்சியின் விரிவான நோக்கத்தை வலியுறுத்தி பேசுகையில்: 

செலிங்கோ லைஃப் நிறுவனமாகிய நாம், இலங்கையானது உலகின் சிறந்த சுகாதாரமுறைமைகளில் ஒன்றைக் கொண்ட நாடாக இருப்பதாக நம்புகிறோம். அதற்குக் காரணம் எம்மிடம் மிக நவீன உபகரணங்கள் இருப்பதல்ல் ஒவ்வொரு குடிமகனும் இலவசமாக சிறந்த சிகிச்சையைப் பெறும் வாய்ப்பைப் பெறுவதுதான். எனினும், குறைந்த வளங்கள் காரணமாக இந்த முறைமை பல சவால்களை எதிர்கொள்கிறது. இதன் விளைவாக காத்திருப்பு பட்டியல்கள் பொதுவானதாக மாறியுள்ளன மேலும் பல நோயாளிகள் தனியார் துறையில் மருத்துவ சேவையை நாட வேண்டிய நிலையும் உருவாகியுள்ளது. 

செலிங்கோ லைஃப் நிறுவனம், இலங்கையின் ஆயுள் காப்புறுதித் துறையில் தொடர்ந்து 21 ஆண்டுகளாக சந்தை முன்னணியில் இருந்து வருகிறது. காப்புறுதி பெற்றவர்களின் இலக்குகள் மற்றும் கனவுகளை பாதுகாக்கவும், அபாயங்களை குறைக்கவும் உதவும் புத்தாக்கமான காப்புறுதித் தீர்வுகளை இந்நிறுவனம் வழங்கி வருகிறது. 2025 ஆம் ஆண்டில், Brand Finance அமைப்பின் மதிப்பீட்டின்படி,செலிங்கோ லைஃப் நிறுவனம் இலங்கையின் மிக உயர்ந்த மதிப்புள்ள காப்புறுதி வர்த்தகநாமமாகவும், 22-வது மிக பெறுமதி வாய்ந்த வர்த்தகநாமமாகவும் தரவரிசைப்படுத்தப்பட்டது. அதே ஆண்டில், தொடர்ந்து 19-வது தடவையாக ஆண்டின் மக்களுக்கான ஆயுள் காப்புறுதி சேவை வழங்குநர் (“People’s Life Insurance Service Provider of the Year”) விருதைப் பெற்றதன் மூலம், மில்லியன் கணக்கான மக்களின் நம்பிக்கைக்குரியவர்த்தகநாமம் என்ற தனது நிலையை மீண்டும் உறுதிப்படுத்தியது.மேலும், கடந்த ஐந்து ஆண்டுகளில் இரண்டு முறை இலங்கையின் ஆண்டுக்கான வர்த்தகநாமம் என்ற விருதினை பெற்றுள்ள இந்த நிறுவனம், இலங்கை சர்வதேச வர்த்தக சம்மேளனம் (ICCSL) மற்றும் முகாமைத்துவ கணக்காளர்களுக்கான பட்டய நிறுவனம் (CIMA) ஆகிய அமைப்புகளால் இலங்கையின் மிகவும் பாராட்டப்பட்ட 10 நிறுவனங்களில் ஒன்றாகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

Comments
0

MOST READ

காணொளி
இந்த நோய் அறிகுறிகள் இருந்தால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்!

இந்த நோய் அறிகுறிகள் இருந்தால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்!

நுவரெலியாவில் கடும் மழை மற்றும் அடர்ந்த பனிமூட்டம்!

நுவரெலியாவில் கடும் மழை மற்றும் அடர்ந்த பனிமூட்டம்!

மண்டூர் - வெல்லாவெளி போக்குவரத்து முற்றாகத் துண்டிப்பு!

மண்டூர் - வெல்லாவெளி போக்குவரத்து முற்றாகத் துண்டிப்பு!

100 நாட்களுக்குப் பிறகு மீண்டும் யாழ்ப்பாணம் வந்தடைந்தது!

100 நாட்களுக்குப் பிறகு மீண்டும் யாழ்ப்பாணம் வந்தடைந்தது!

விஜய்க்கு கேக் வெட்டி கொழும்பில் கொண்டாட்டம்!

விஜய்க்கு கேக் வெட்டி கொழும்பில் கொண்டாட்டம்!

பவானி வீதி தொடர்பான நீதிமன்றக் கட்டளை 21 ஆம் திகதி!

பவானி வீதி தொடர்பான நீதிமன்றக் கட்டளை 21 ஆம் திகதி!

சி.சிறீதரன் எம்.பி கோரிக்கை!

சி.சிறீதரன் எம்.பி கோரிக்கை!

அரசு முறையான விசாரணை நடத்தி மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டும்!

அரசு முறையான விசாரணை நடத்தி மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டும்!

சிங்களமயமாக்கப்படுவதற்கு சாணக்கியன் துணை போகிறாரா?

சிங்களமயமாக்கப்படுவதற்கு சாணக்கியன் துணை போகிறாரா?

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் 11 ஆவது நாள்!

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் 11 ஆவது நாள்!

title