May 13, 2026 - 08:40 PM -
0
விளையாட்டுத் துப்பாக்கியைக் காண்பித்து மிரட்டி, யுவதி ஒருவரைக் கடத்த முற்பட்ம உறவினர்களான இரு சகோதரர்களைக் கைது செய்துள்ளதாக கல்கிசை பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகம் தெரிவித்துள்ளது.
சந்தேகநபர்கள் இதற்காகப் பயன்படுத்திய விளையாட்டுத் துப்பாக்கி மற்றும் கார் என்பன பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கடந்த (07) ஆம் திகதி மத்தேகொட, கிரிகம்பமுனுவ பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் புகுந்த இந்த இரு சந்தேகநபர்களும், விளையாட்டுத் துப்பாக்கியைக் காட்டி யுவதியைக் கடத்த முயன்றுள்ளனர்.
இதன்போது வீட்டில் இருந்த மற்றைய நபரின் பலத்த எதிர்ப்புக் காரணமாக, அவர்கள் காரில் தப்பிச் சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக மத்தேகொட பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
கல்கிசை பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகம் மேற்கொண்ட விசாரணைகளின் மூலம், சந்தேகநபர்கள் இருவரும் கல்கிசை பகுதியில் வைத்து விளையாட்டுத் துப்பாக்கி மற்றும் காருடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இரு தரப்பினருக்கும் இடையே நிலவும் தனிப்பட்ட பகையே இந்தச் சம்பவத்திற்குக் காரணம் என பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் அத்துருகிரிய பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதுடன், கல்கிசை பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.
