May 14, 2026 - 09:18 AM -
0
Gavinro International நிறுவனம் அண்மையில் தனது மின்சார வாகனப் பிரிவான GV Auto பிரிவை அறிமுகப்படுத்தியுள்ளது. இது இன்றைய வேகமாக மாறிவரும் பொருளாதார மற்றும் வலுசக்தி சூழலுக்கு ஏற்ற நவீன, நடைமுறை ரீதியான மற்றும் செலவு குறைந்த தீர்வாகும்.
Gavinro குழுமம் தனது புத்தாக்கம் மற்றும் எதிர்கால சிந்தனை கொண்ட பாரம்பரியத்தின் அடிப்படையில், மாற்றமடைந்து வரும் சந்தை இயக்கவியலுக்கு ஏற்ப எதிர்காலத்திற்கு ஏற்ற தீர்வுகளை வழங்குவதில் பல வருடங்களாக பல்வேறு துறைகளில் வலுவான பிரசன்னத்தை நிறுவியுள்ளது. இந்த தொலைநோக்குப் பார்வையின் ஒரு நீட்சியாக, மின்சார வாகனப் போக்குவரத்தை பரந்துபட்ட மக்கள் அணுகக்கூடியதாக மாற்றும் தெளிவான முன்மொழிவுடன் GV Auto அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
GV Auto நிறுவனம் Skywell, Skyworth, Keyton உள்ளிட்ட சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட மின்சார வாகன வர்த்தகநாமங்களை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இதில் Skyworth குழுமமானது 'Fortune China 500' பட்டியலில் இடம்பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. சொகுசு மின்சார SUV வாகனங்கள் முதல் இரட்டை தேவை மற்றும் வணிக ரீதியான வாகனங்கள் வரை விரிவான தெரிவுகளை கொண்டுள்ள GV Auto, தனிநபர்கள் மற்றும் நீண்டகாலத் திறன் மற்றும் ஸ்திரத்தன்மையை எதிர்பார்க்கும் வணிக நிறுவனங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் ஒரு முழுமையான EV போக்குவரத்து தீர்வு வழங்குநராக தன்னை நிலைநிறுத்தி வருகிறது.
இந்த அறிமுகம் குறித்து கவின்ரோ குழுமத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் அபித் தங்ல்ல (Abeeth Dangalla) கருத்துத் தெரிவிக்கையில், “மின்சார வாகனங்களுக்கு மாறுவது என்பது வெறுமனே சூழல் பாதுகாப்பு சார்ந்தது மட்டுமல்ல. அது ஒரு புத்திசாலித்தனமான நிதி ரீதியான முடிவாகும். ஒவ்வொரு கிலோமீற்றர் பயணமும் எரிபொருள் மற்றும் பராமரிப்புச் செலவுகளைக் குறைத்து, உங்கள் வாகனத்தை அல்லது வாகனங்களை நீண்டகால இலாபமீட்டும் ஒரு அம்சமாக மாற்றுகிறது. செலவுத் திறன் மற்றும் வலுசக்தி பாதுகாப்பானது, மிகவும் பாரிய முறையில் முக்கியத்துவம் பெற்றுள்ள இலங்கையின் தற்போதைய சூழலில், EV வாகனங்கள் தெளிவான நன்மையை வழங்குகின்றன. குறிப்பாக, மின்சார வாகனத்திற்கான மாற்றமானது, வணிக நிறுவனங்களுக்கு நீண்ட கால நிலைபேறான தன்மை மற்றும் மீளெழுச்சியை நோக்கிய ஒரு மூலோபாய நடவடிக்கையாகும்.” என்றார்.
அபித் தங்கல்ல மேலும் குறிப்பிடுகையில், “மின்சார பயணிகள் கார்கள், பஸ்கள், பொருட்கள் கையாளுகை வாகனங்கள், விசேட தேவை வாகனங்கள், பாரிய ரக ட்ரக்கள், நவீன சாரதி அற்ற தொழில்நுட்பங்கள் போன்ற தயாரிப்புகளில் நிபுணத்துவம் பெற்ற சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட Skywell New Energy குழுமத்துடன் இணைந்திருப்பதில் GV Auto மகிழ்ச்சியடைகிறோம்.” என்றார். அத்துடன், ஜப்பான், சிங்கப்பூர், ஐரோப்பிய ஒன்றியம் போன்ற சந்தைகளுக்கு உயர்தர வாகனங்களை ஏற்றுமதி செய்யும் வணிக வாகன உற்பத்தியாளரான Keyton குழுமத்துடனான புதிய கூட்டாண்மையையும் GV Auto பெருமைக்குரியதாக கருதுகின்றது. இந்தக் கூட்டாண்மையானது, உள்ளூர் சந்தைக்கு நம்பகமான மற்றும் பன்முகத்தன்மை கொண்ட வணிகப் போக்குவரத்து தீர்வுகளை வழங்கும் GV Auto நிறுவனத்தின் திறனை மேலும் மேம்படுத்துகிறது.
இந்தக் கூட்டாண்மைகள் GV Auto நிறுவனத்தை மின்சார மற்றும் வணிக வாகனத் துறைகளில் புத்தாக்கத்தின் முன்னணியில் நிலைநிறுத்துவதுடன், சந்தையில் அதிகரித்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்து நிலைபேறான பொருளாதார வளர்ச்சிக்கு ஆதரவளிக்கவும் வழிவகை செய்கிறது.
அண்மையில் இடம்பெற்ற மோட்டார் EV தொழில்நுட்பக் கண்காட்சியிலும் (Motor EV Technology show) GV Auto பங்கேற்று தனது மின்சார வாகனத் தெரிவுகளை காட்சிப்படுத்தியதோடு, நிலைபேறான போக்குவரத்து மாற்றீடுகளை எதிர்பார்க்கும் நுகர்வோர் மற்றும் வணிக நிறுவனங்களின் கருத்துகளையும் கேட்டறிந்து கொண்டது.
Aramex Sri Lanka, Navesta Pharmaceuticals, W15 Group, Wishque (Pvt) Ltd போன்ற முன்னணி நிறுவனங்களுக்கும், செலவு குறைந்த மற்றும் நிலைபேறான போக்குவரத்துத் தீர்வுகளுக்கு மாறிவரும் பல இணைய வர்த்தக (e-commerce) நிறுவனங்களுக்கும் மின்சார வாகன போக்குவரத்து தீர்வுகளை வழங்க இந்நிறுவனம் ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது.
வணிக நிறுவன உரிமையாளர்கள், பரந்துபட்ட வாகனங்களை செயற்படுத்தி கையாளுபவர்கள், வாடகை வாகன சாரதிகள் முதல் சூழல் விழிப்புணர்வு கொண்ட தொழில் வல்லுநர்கள் மற்றும் முதல்முறை வாகனம் கொள்வனவு செய்வோர் வரை பல்வேறு தரப்பினருக்கு இந்நிறுவனம் சேவையாற்றி வருகிறது. பொருட்கள் கையாளுகைகளுக்கான செயற்பாட்டுச் செலவுகளை குறைப்பதாக இருந்தாலும், சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களின் இலாபத்தை அதிகரிப்பதாக இருந்தாலும் அல்லது சொகுசு SUV கொள்வனவாளர்களுக்கு மேம்பட்ட வாகனம் செலுத்தும் அனுபவத்தை வழங்குவதாக இருந்தாலும், GV Auto நிறுவனத்தின் நோக்கம் ஒன்றே, அது "ஒரு முறை மாறுங்கள், ஒவ்வொரு நாளும் சேமியுங்கள்" என்பதாகும்.
இது குறித்து, GV Auto வாடிக்கையாளரான மனோஹர டி சில்வா கருத்துத் தெரிவிக்கையில், “ஒரு முறை சார்ஜ் செய்தால் நீண்ட தூரம் பயணிக்கக்கூடிய வாகனத்தை நான் தேடிக் கொண்டிருந்தேன். அந்த வகையில் இன்று GV Auto நிறுவனத்திடமிருந்து எனது இரண்டாவது EV வாகனத்தை கொள்வனவு செய்துள்ளேன். வேலை நிமித்தமாக அதிகம் பயணம் செய்பவன் எனும் வகையில் நான் Skywell BE11 Luxury வாகனத்தை தெரிவு செய்தேன். இது மிகவும் வசதியான மற்றும் நம்பகமான பயணத்தை வழங்குகிறது. GV Auto நிறுவனத்தின் நவீன விற்பனைக்குப் பின்னரான சேவை வசதிகள் மாத்திரமன்றி தாராளமாக உதிரிப்பாகங்கள் கிடைப்பதானது, எனக்கு மிகவும் நம்பிக்கையைத் தருகிறது.” என்றார்.
மின்சார வாகனங்கள் தொடர்பில் காணப்படும் தூரம் தொடர்பான பயம் மற்றும் நீண்ட கால நம்பகத்தன்மை போன்ற பொதுவான கவலைகளைத் தீர்க்கும் வகையில், விற்பனைக்கு பின்னரான ஆதரவு, உதிரிப்பாகங்களின் கையிருப்பு மற்றும் வாகன செயல்திறன் தொடர்பான உத்தரவாதம் போன்ற விடயங்களில் GV Auto அதிக முதலீடுகளை செய்து வருகிறது.
இது தொடர்பான விழிப்புணர்வு தொடர்ச்சியாக அதிகரித்து வருவதால், இலங்கையில் மின்சார வாகனங்கள் என்பது ஏதோ ஒரு மாற்று வழி என்ற நிலையிலிருந்து மாறி, வாகனம் செலுத்துவதற்கான மிகவும் புத்திசாலித்தனமான மற்றும் நடைமுறை ரீதியான வழி எனும் எண்ணத்தை உருவாக்கும் இலக்கை GV Auto கொண்டுள்ளது. புத்தாக்கம், அணுகல் வசதி மற்றும் நீண்டகால மதிப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்துவதன் மூலம், மக்கள் வாகனம் செலுத்தும் முறையிலும் போக்குவரத்து குறித்த சிந்தனையிலும் GV Auto மாற்றத்தை ஊக்குவிக்கிறது.
GV Auto அல்லது அங்கு கிடைக்கக்கூடிய வாகனங்கள் பற்றிய மேலதிக தகவல்களுக்கு 077 577 5577 அல்லது 077 844 8844 எனும் இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளலாம்.
