May 14, 2026 - 10:48 AM -
0
இலங்கை ரக்பியின் சிறந்த திறமைகளை இரு சுற்றுகளில் வெளிப்படுத்தி, இலங்கைக்கான நியுசிலாந்தின் U85kg ரக்பி சுற்றுப் பயணம் வெற்றிகரமாக பூர்த்தியடைந்தது. முதல் சுற்று 2026 ஏப்ரல் 25 ஆம் திகதி கொழும்பு ரேஸ்கோஸ் மைதானத்தில் நடைபெற்றதுடன், இறுதிச் சுற்று கண்டி, நிட்டவெல ரக்பி மைதானத்தில் 2026 மே 3 ஆம் திகதி நடைபெற்றது.
தேசிய விளையாட்டுக்கு ஆதரவளிப்பது மற்றும் இலங்கையின் பிராந்திய நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதற்கமைய, தேசிய தகவல் தொடர்பாடல் தொழில்னுட்ப தீர்வுகள் வழங்குனரான SLT‑MOBITEL, இலங்கைக்கான நியுசிலாந்தின் U85kg ரக்பி சுற்றுப் பயணத்தின் வெண்கலப் பிரிவில் உத்தியோகபூர்வ பங்காளராக ஆதரவு வழங்கியிருந்தது. அதனூடாக இலங்கையின் ரக்பியை சிறப்பை நோக்கிய மேம்படுத்தலுக்கு ஆதரவளிப்பதை உறுதியான வெளிப்படுத்தியிருந்தது.
நாடு முழுவதையும் சேர்ந்த ரக்பி ஆர்வலர்களை கவர்ந்திருந்ததுடன், இலங்கையில் வளர்ந்து வரும் விளையாட்டின் மீதான ஆர்வத்தையும் வெளிப்படுத்தியிருந்தது. மேலும் நாட்டின் சர்வதேச விளையாட்டு தொடர்புகளை மேலும் வலிமைப்படுத்தியிருந்தது.
விறுவிறுப்பாக போட்டித் தொடரை அமையச் செய்திருந்தமைக்காக இரு அணிகளுக்கும் SLT- MOBITEL வாழ்த்துகளை தெரிவித்திருந்தது. முதல் சுற்றில் 27-16 எனும் புள்ளிகள் அடிப்படையில் நியுசிலாந்து அணி வெற்றியீட்டியிருந்ததுடன், இறுதிப் போட்டியில் 25-10 எனும் புள்ளிகள் அடிப்படையில் வென்றிருந்தது. எவ்வாறாயினும் சுற்றுப் போட்டியின் போது பார்வையாளர்களின் பெருமளவான ஆதரவை இலங்கை அணி பெற்றிருந்தது.
SLT-MOBITEL இன் PEOTV இல் இந்தப் போட்டி HD quality இல் PEO SPORTS 1 (HD – CH.323 | SD – CH.150) நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டிருந்தது. அதனூடாக ரசிகர்களுக்கு தமது இல்லங்களிலிருந்தவாறே PEOTV மற்றும் PEO MOBILE App ஊடாக போட்டியை கண்டுகளிக்கும் வாய்ப்பை வழங்கியிருந்தது.
விளையாட்டு நிகழ்வுகள் பொதுவான சமூக உணர்வு மற்றும் தேசியப் பெருமையின் கீழ் மக்களை ஒன்றிணைக்கின்றன. இலங்கை மக்கள் தமது அணிகளை உற்சாகப்படுத்துவதை ஊக்குவிக்கும் வகையில், SLT-MOBITEL நிறுவனம் உயர்மட்ட விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு நிகழ்வுகளுக்குத் தொடர்ச்சியாக ஆதரவளித்து வருகின்றது. இந்த பெருமைக்குரிய நிகழ்வுடன் கைகோர்ப்பதன் ஊடாக, இலங்கையை உலகுடன் இணைப்பதிலும் உள்ளூர் திறமைகளைக் கொண்டாடுவதிலும் ஒரு தேசிய செயற்படுத்துனர் எனும் தனது பங்கை SLT-MOBITEL மேலும் உறுதிப்படுத்துகின்றது.
இந்தளவு பிரம்மாண்டமான சர்வதேச நிகழ்வொன்றை வெற்றிகரமாக ஆதரிப்பதும் நேரடி ஒளிபரப்புச் செய்வதும் SLT-MOBITEL நிறுவனத்திற்கு ஒரு பெருமைக்குரிய சாதனையாகும். இது புத்தாக்கம், இணைப்புத்திறன் மற்றும் இலங்கை நேயர்களுக்கு உயர்தர விளையாட்டுப் பொழுதுபோக்குகளை வழங்குவதில் நிறுவனம் கொண்டுள்ள அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகின்றது.
மேலதிகமாக, இந்தப் போட்டித் தொடரில் SLT-MOBITEL இன் பங்களிப்பின் ஊடாக, விளையாட்டு வீரர்கள் மிக உயர்ந்த மட்டத்தில் போட்டியிடுவதற்குத் தேவையான ஆதரவைப் பெற்றுக்கொண்டனர். இலங்கை ரக்பி சம்மேளனம் எதிர்வரும் ஆசிய பிராந்தியப் போட்டிகளுக்குத் தயாராகி வரும் நிலையில் இந்த ஆதரவு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததுடன், தொழில்நுட்பம் மற்றும் விளையாட்டுத் திறமையின் ஊடாக இலங்கையை உலகுடன் இணைக்கும் SLT-MOBITEL இன் தொலைநோக்குடன் இது பொருந்துவதாக அமைந்துள்ளது. இலங்கையின் விளையாட்டு அபிலாஷைகளின் ஒரு அர்ப்பணிப்புள்ள பங்காளர் என்ற வகையில், சமூகங்களை ஒன்றிணைக்கும் மற்றும் உள்ளூர் விளையாட்டுகளை மேம்படுத்தும் முயற்சிகளுக்கு SLT-MOBITEL தொடர்ந்து முன்னுரிமை அளிக்கும்.
