Header Logo

வணிகம்
Mark and Comm இலங்கையின் வர்த்தக நாமங்களின் சமூக மதிநுட்ப மேம்பாட்டுக்காக Talkwalker ஐ செயற்படுத்தியுள்ளது

May 14, 2026 - 12:47 PM -

0

Mark and Comm இலங்கையின் வர்த்தக நாமங்களின் சமூக மதிநுட்ப மேம்பாட்டுக்காக Talkwalker ஐ செயற்படுத்தியுள்ளது

Mark and Comm (Pvt) Ltd நிறுவனம் உலகின் முன்னணி சமூக மதினுட்ப கட்டமைப்பான Talkwalker உடன் இணைந்து, இலங்கையின் நிபுணர்களுக்கு சமூக செவிமடுத்தல், ஊடக கண்காணிப்பு, அறிக்கையிடல் மற்றும் மூலோபாய ஆலோசனை சேவைகளை முழுமையான நிர்வகிப்பு சேவைகளாக வழங்குகிறது. 

இலங்கை மற்றும் மாலைதீவுகளில் Hootsuite and Talkwalker இன் பிரத்தியேக பங்காளராக திகழும் Mark and Comm, சந்தையில் நிலவும் இந்த இடைவெளியை இனங்கண்டுள்ளது. தமக்கெனத் தனியான சமூக ஊடகப் மதினுட்ப பிரிவுகளைக் கொண்டிராத பல வர்த்தக நாமங்கள், ஒரு பாரிய நிறுவன ரீதியான தளத்தை தாமே நிர்வகிப்பதற்கான மேலதிகச் செலவுகள் மற்றும் சவால்கள் இன்றி, அத்துறை சார்ந்த நுண்ணறிவுகளைப் பெற்றுக்கொள்ளவே விரும்புகின்றன. Mark and Comm நிறுவனத்தின் புதிய உள்ளக சமூக ஊடகப் புலனாய்வுச் சேவையானது தற்போது அதனைச் சாத்தியமாக்கியுள்ளது. இதன் மூலம் நிகழ்நேரக் கண்காணிப்பு, வர்த்தக நாமங்களைக் கண்காணித்தல், மனோநிலை பகுப்பாய்வு, ஊடக அளவீடு மற்றும் நெருக்கடி காலப் புலனாய்வு போன்ற சேவைகளை வாடிக்கையாளர்கள் பெற்றுக்கொள்ள முடியும். தரவுகள் ஒரு நிறுவனத்தின் நற்பெயர் மற்றும் மூலோபாயத்தில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை நன்குணர்ந்த தொடர்பாடல் நிபுணர்களால் இச்சேவை வழங்கப்படுவது இதன் சிறப்பம்சமாகும். இந்த செயற்பாடுகளுக்கு தலைமைத்துவமளிக்கும் வகையில் பொது உறவுகள் மற்றும் சமூக மதிநுட்ப முகாமையாளராக அஞ்ஜலி முனசிங்க இணைந்துள்ளார். 

இலங்கையின் மிகவும் சவாலான தொடர்பாடல் துறைகளில், ஊடகக் கண்காணிப்பு (Media Monitoring), உடனுக்குடன் தகவல்களைத் திரட்டுதல் (Real-time Tracking) மற்றும் நற்பெயர் மேலாண்மை (Reputation Management) ஆகியவற்றில் பத்து ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்தைக் கொண்டவர் அஞ்சலி. அறிக்கைகளில் முடங்கிக்கிடக்கும் வெறும் தரவுகளுக்கும், தீர்மானங்களை எடுக்கத் தூண்டும் ஆக்கபூர்வமான தகவல்களுக்கும் இடையிலான பாரிய வித்தியாசத்தை உணர்ந்து செயற்படும் ஆழமான புலனாய்வுத் திறனை அவர் கொண்டுள்ளார். 

தற்போதைய சூழலில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியம் முன்னெப்போதையும் விட மிக முக்கியமானது. சரியான உள்கட்டமைப்பு வசதிகள் (Infrastructure) இல்லாமல், எந்தவொரு தொடர்பாடல் குழுவும் ஈடுகொடுக்க முடியாத வேகத்தில் இன்றைய இணையவழிச் செய்திகள் பரவுகின்றன. ஒரு சிறிய வைரல் பதிவு, செல்வாக்கு மிக்க சமூகங்களிடையே ஏற்படும் கருத்து மாற்றம் அல்லது திட்டமிட்டுப் பரப்பப்படும் விமர்சனங்கள் போன்றவை சந்தை நிலவரத்தை மாற்றியமைக்கவும், அரச கொள்கை முடிவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தவும், பல வருடங்களாகக் கட்டியெழுப்பப்பட்ட ஒரு நிறுவனத்தின் நற்பெயரைச் சில மணித்தியாலங்களிலேயே சிதைக்கவும் கூடிய வல்லமை கொண்டவை. நிகழ்நேரத் தகவல்களைப் பெறும் (Real-time intelligence) வசதி இல்லாத நிறுவனங்கள், வெறும் பின்னடைவை மட்டும் சந்திக்கவில்லை; மாறாக, ஒரு செயற்திறன் மிக்க முன்னெச்சரிக்கை அமைப்பு இல்லாமலேயே அவை இயங்குகின்றன. Mark and Comm நிறுவனம், என்ன நடக்கிறது என்பதைப் பார்க்கவும், அது ஏன் முக்கியமானது என்பதைப் புரிந்துகொள்ளவும், விளைவுகளுக்குப் பின்னூட்டம் வழங்குவதற்குப் பதிலாக, சாதகமான முடிவுகளை நோக்கி விரைவாகச் செயற்படவும் தேவையான ஆற்றலைத் தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. 

Mark and Comm இன் ஸ்தாபகரும் முகாமைத்துவ பணிப்பாளருமான தன்சில் தாஜுதீன் கருத்துத் தெரிவிக்கையில், “பல வர்த்தக நாமங்கள் தம்மைப் பற்றி ஒன்லைனில் தெரிவிக்கப்படும் விடயங்கள் பற்றி அறிந்திருப்பதில்லை. இதனை கண்காணிப்பதற்கு, அவை பயன்படுத்தும் கருவிகள் தற்காலத்திற்கு பொருத்தமானவையாக இல்லை. எந்தவொரு பணிப்பாளர் சபைக்கூட்டத்திலும் தன்னம்பிக்கையுடன் பிரவேசித்து, துல்லியமானதும், விரிவானதும் மற்றும் உடனடியாகச் செயற்படுத்தக்கூடியதுமான தகவல்களை வழங்கக்கூடிய ஒரு நிலையில் இருப்பதை நாம் விரும்பினோம். அதனைத்தான் இந்தச் சேவையானது எமக்கு வழங்குகின்றது.” என்றார். 

கடந்த மாதம் Mark and Comm இனால், இலங்கையின் மார்ச் மாத எரிபொருள் சூழ்நிலை தொடர்பில் சமூக மதினுட்ப அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது. இதற்காக சுமார் 64,000 இற்கும் அதிகமான ஈடுபாடுகள் உள்வாங்கப்பட்டிருந்தன. இலங்கையின் சமூக, பொருளாதார மற்றும் கொள்கை உரையாடல்கள் போன்றன தொடர்பான ஆய்வுகள் மற்றும் பகுப்பாய்வு அறிக்கைகளை முகவர் அமைப்பு அடிக்கடி வெளியிடும் என்பதுடன், அதனூடாக வர்த்தக நாமங்களுக்கு, நிறுவனங்களுக்கு மற்றும் அமைப்புகளுக்கு பொதுமக்களின் மனோநிலை தொடர்பான தெளிவான வெளிப்பாடு மற்றும் வளர்ந்து வரும் சூழல் தொடர்பான நிலைப்பாடு பற்றி முன்கூட்டியே அறிவித்து, காலப்போக்கில் அவை தவிர்க்கப்பட முடியாத நிலைக்கு வளர்வதை தவிர்த்துக்கொள்வதற்கு உதவுகிறது. 

தற்போது பல இலங்கை வர்த்தக நாமங்கள் பயன்படுத்தி வரும் உள்நாட்டு, பிராந்திய அல்லது ஆரம்ப நிலை கருவிகளுக்கும் Talkwalker இற்கும் இடையிலான மிக முக்கியமான வேறுபாடு தரவுகளின் நம்பகத்தன்மை ஆகும். Talkwalker மென்பொருளானது முன்னணி சமூக ஊடகத் தளங்களுடனான உத்தியோகபூர்வ API கூட்டிணைப்புகள் ஊடாகவே தரவுகளைப் பெற்றுக்கொள்கின்றது. இதன் மூலம் அத்தரவுகள் முழுமையானதாகவும், சட்டபூர்வமானதாகவும் மற்றும் நம்பகமானதாகவும் அமைகின்றன. உத்தியோகபூர்வமற்ற முறையில் தரவுகளைத் திரட்டும் அல்லது மூன்றாம் தரப்புத் தரவுகளை இணைக்கும் தளங்கள் இத்தகைய உத்தரவாதத்தை வழங்குவதில்லை. இது பல நிறுவனங்கள் அறியாமலேயே தரவு இடைவெளிகள், பிழைகள் மற்றும் சட்ட ரீதியான சிக்கல்களை எதிர்கொள்ளும் அபாயத்தை ஏற்படுத்துகின்றது. 

இத்தளமானது 30 இற்கும் மேற்பட்ட சமூக ஊடக வலையமைப்புகள் மற்றும் 187 மொழிகளில் பரந்துள்ள 150 மில்லியனுக்கும் அதிகமான மூலங்களைக் கண்காணிக்கின்றது. அத்துடன், மனித உணர்வுகளை ஆறு நிலைகளில் கண்டறியக்கூடிய நிகழ்நேர மனோநிலை பகுப்பாய்வு, உருவங்கள், காணொளிகள் மற்றும் ஒலிகளை அடையாளம் காணும் வசதி, மற்றும் தரவு உச்சங்களை அடையாளம் கண்டு 90 நாட்களுக்கு முன்னரே நெருக்கடி நிலைகளை எதிர்வுகூறும் வசதி போன்ற ஆற்றல்களையும் இது கொண்டுள்ளது. மேலும், ChatGPT மற்றும் Gemini போன்ற AI மாதிரிகளில் ஒரு வர்த்தக நாமம் எவ்வாறு பிரதிபலிக்கின்றது என்பதைக் கண்காணிக்கும் LLM Insights மற்றும் சிக்கலான அறிக்கைகளைத் தயாரிக்க வேண்டிய அவசியமின்றி சாதாரண மொழியிலேயே பதில்களை வழங்கக்கூடிய AI தொழில்நுட்பத்திலான Yeti Agent ஆகிய வசதிகளையும் இது உள்ளடக்கியுள்ளது. 

Mark and Comm இற்கு இதன் பெறுமதி தொழில்னுட்பத்தில் மாத்திரம் தங்கியிருப்பதில்லை. இது தரவுகளுக்கும் தீர்மானங்களுக்கும் இடையிலான ஒரு இணைப்புப் புள்ளியாகத் திகழ்கின்றது. நிறுவனம் தான் உருவாக்கும் ஒவ்வொரு நுண்ணறிவுத் தகவலுக்கும் தனது 15 ஆண்டுகால மக்கள் தொடர்பு, தொடர்பாடல் மற்றும் நற்பெயர் முகாமைத்துவ அனுபவத்தைப் பயன்படுத்துகின்றது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் வெறும் எண்களை மாத்திரம் பெற்றுக்கொள்ளாமல், ஊடகங்கள், நுகர்வோர் மற்றும் பொதுமக்களின் கருத்துருவாக்கம் குறித்த ஆழமான புரிதலின் அடிப்படையில் அமைந்த சூழல்சார் பின்னணி, விளக்கங்கள் மற்றும் மூலோபாய வழிகாட்டல்களையும் பெற்றுக்கொள்கின்றனர். 

தாஜுதீன் மேலும் குறிப்பிடுகையில், “இலங்கையில் இயங்கும் வர்த்தக நாமங்கள் அளவு மற்றும் அவற்றின் கட்டமைப்பிற்கேற்ப, அவை சமூக ஊடகங்களுக்கு செவிமடுக்கும் பகுதி பெருமளவு வளர்ச்சியடையவில்லை. உலகின் மாபெரும் நிறுவனங்கள் நம்பிக்கை கொண்டுள்ள கட்டமைப்பை நாம் இலங்கையில் அறிமுகம் செய்வதுடன், எமது தொடர்பாடல் நிபுணத்துவத்தை அதில் நிறுவுகிறோம். இந்த சந்தையில் காணப்படும் இதர தீர்வுகளுடன் ஒப்பிடுகையில் இந்த இணைப்பு முற்றிலும் மாறுபட்டதாக அமைந்துள்ளது.” என்றார். 

இந்நிறுவனம் GlobalCom PR Network இன் ஒரு அங்கத்துவ நிறுவனமாகவும், PRCA APAC இன் கூட்டாண்மை அங்கத்துவ நிறுவனமாகவும் திகழ்கின்றது. Campaign Asia-Pacific இனால் 2025 ஆம் ஆண்டின் தெற்காசியாவின் ஏனைய நாடுகளுக்கான சிறந்த மக்கள் தொடர்பு (PR) நிறுவனம் என இது பெயரிடப்பட்டதுடன், 2026 ஏப்ரல் மாதம் நடைபெற்ற 15 ஆவது ACEF சர்வதேச நுகர்வோர் ஈடுபாடு (Global Customer Engagement) விருது விழாவில், ஆண்டின் சிறந்த PR நிறுவனம் என்பதற்கான உயரிய விருதான Grand Prix உட்பட இரண்டு தங்க விருதுகளையும் சுவீகரித்துள்ளது.

Comments
0

MOST READ

காணொளி
இந்த நோய் அறிகுறிகள் இருந்தால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்!

இந்த நோய் அறிகுறிகள் இருந்தால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்!

நுவரெலியாவில் கடும் மழை மற்றும் அடர்ந்த பனிமூட்டம்!

நுவரெலியாவில் கடும் மழை மற்றும் அடர்ந்த பனிமூட்டம்!

மண்டூர் - வெல்லாவெளி போக்குவரத்து முற்றாகத் துண்டிப்பு!

மண்டூர் - வெல்லாவெளி போக்குவரத்து முற்றாகத் துண்டிப்பு!

100 நாட்களுக்குப் பிறகு மீண்டும் யாழ்ப்பாணம் வந்தடைந்தது!

100 நாட்களுக்குப் பிறகு மீண்டும் யாழ்ப்பாணம் வந்தடைந்தது!

விஜய்க்கு கேக் வெட்டி கொழும்பில் கொண்டாட்டம்!

விஜய்க்கு கேக் வெட்டி கொழும்பில் கொண்டாட்டம்!

பவானி வீதி தொடர்பான நீதிமன்றக் கட்டளை 21 ஆம் திகதி!

பவானி வீதி தொடர்பான நீதிமன்றக் கட்டளை 21 ஆம் திகதி!

சி.சிறீதரன் எம்.பி கோரிக்கை!

சி.சிறீதரன் எம்.பி கோரிக்கை!

அரசு முறையான விசாரணை நடத்தி மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டும்!

அரசு முறையான விசாரணை நடத்தி மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டும்!

சிங்களமயமாக்கப்படுவதற்கு சாணக்கியன் துணை போகிறாரா?

சிங்களமயமாக்கப்படுவதற்கு சாணக்கியன் துணை போகிறாரா?

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் 11 ஆவது நாள்!

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் 11 ஆவது நாள்!

title