May 14, 2026 - 01:03 PM -
0
ஒரு நாடு வளர்ச்சியடைய வேண்டுமானால், அந்நாட்டில் சமூகம், நெறிமுறைகளைப் பின்பற்றும், நாகரிகமிக்க, நல்லொழுக்கம் மிக்க, சௌபாக்கியம் மிக்கதாக அமைந்து காணப்பட வேண்டும். நல்லொழுக்கமுள்ள, நேரிய, உயரிய சமூக விழுமியங்களைக் கட்டியெழுப்புவதில் மகா சங்கத்தினர் மகத்தான பங்களிப்பை ஆற்றி வருகின்றனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
கிராமங்களிலும் நகரங்களிலும் அமைந்து காணப்படும் விகாரைகளை மையமாகக் கொண்ட புனித தலங்கள், சமூகத்தை நல்ல இடமாக மாற்றுவதில் சிறப்பான வகி பங்குகளை ஆற்றி வருகின்றன. மகா சங்கத்தினர் உள்ளிட்ட மத தலைவர்களுக்கு சமூகத்தில் பாதுகாப்பையும் பக்க பலத்தையும் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
ஆனமடுவ பரமாகந்த ரஜமகா விகாரையின் விகாராதிபதி, சங்கைக்குரிய ஆனமடுவ தர்மகீர்த்தி ஸ்ரீ பஞ்ஞானந்த ஞானானந்த தேரர் அவர்களுக்கு, ஸ்யாமோபாலி மஹா நிகாய, மல்வத்து மகா விகாரை பிரிவின் ராஜவன்னி, குமாரவன்னி இரு பிரிவுகளினதும் பிரதம சங்கநாயகர் பதவிக்கான பத்திரங்களை கையளிக்கும் விழாவில் இன்று கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
கடந்த சில ஆண்டுகளில் நாடாக நாம் பல துயர் நிறைந்த சம்பவங்களை எதிர்கொண்டோம். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடக்கம் மத்திய கிழக்கு யுத்தம் வரை பல துயரங்களால் ஒட்டுமொத்த நாட்டு மக்களும் பன்முக பிரச்சினைகளை எதிர்கொண்டு, அதிக மன அழுத்தத்திற்கும் அமைதியின்மைக்கும் துக்கத்திற்கும் வருத்தத்திற்கும் ஆளாகியுள்ளனர். இத்தகைய சந்தர்ப்பத்தில் மக்களுக்கு செவிசாய்ப்பதும் அனுதாபம் காட்டுவதும் மனித இனத்தை காப்பதற்கும் மனித நேயத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
இலட்சக்கணக்கான மக்கள் ஏழ்மை நிலையை எதிர்கொண்டு வருகின்றனர். இந்த சிக்கல்களுக்கும் பிரச்சினைகளுக்கும் தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்க வேண்டும். இந்த தீர்வுகளைப் பெற்றுக் கொடுப்பதில் விகாரைகள் அடங்களான மத வழிபாட்டுத் தலங்கள் மகத்தான பங்களிப்பை நல்கி வருவதனால் அந்த பணியை தொடர்ந்து இடைவிடாமல் முன்னெடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.
