Header Logo

செய்திகள்
மழையையும் மீறி உழைப்பு... எதிர்பாராத குளவித் தாக்குதல்!

May 14, 2026 - 03:19 PM -

0

மழையையும் மீறி உழைப்பு... எதிர்பாராத குளவித் தாக்குதல்!

மலையகத்தில் பெய்து வரும் கடும் மழையையும் பொருட்படுத்தாது, பொகவந்தலாவ கெர்க்கஸ்வோல்ட் மேல் பிரிவுத் தோட்டத்தில் தேயிலைக் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த நான்கு பெண் தொழிலாளர்கள் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். 

காயமடைந்த தொழிலாளர்கள் உடனடியாக பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர். 

இச்சம்பவம் இன்று (14) மதியம் 12.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. 

சம்பவம் குறித்துத் தொழிலாளர்கள் கருத்துத் தெரிவிக்கையில், தாங்கள் மழையில் கொழுந்து பறித்துக் கொண்டிருந்தபோது, தேயிலைச் செடியின் அடியிலிருந்த குளவிக்கூடு கலைந்து வந்து தங்களைத் தாக்கியதாகக் குறிப்பிட்டனர். 

வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் தொழிலாளர்களின் உடல்நிலை குறித்து தற்போது அச்சமடையத் தேவையில்லை என வைத்தியசாலைப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். 

இச்சம்பவம் குறித்து பொகவந்தலாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

--

Comments
0

MOST READ

காணொளி
இந்த நோய் அறிகுறிகள் இருந்தால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்!

இந்த நோய் அறிகுறிகள் இருந்தால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்!

நுவரெலியாவில் கடும் மழை மற்றும் அடர்ந்த பனிமூட்டம்!

நுவரெலியாவில் கடும் மழை மற்றும் அடர்ந்த பனிமூட்டம்!

மண்டூர் - வெல்லாவெளி போக்குவரத்து முற்றாகத் துண்டிப்பு!

மண்டூர் - வெல்லாவெளி போக்குவரத்து முற்றாகத் துண்டிப்பு!

100 நாட்களுக்குப் பிறகு மீண்டும் யாழ்ப்பாணம் வந்தடைந்தது!

100 நாட்களுக்குப் பிறகு மீண்டும் யாழ்ப்பாணம் வந்தடைந்தது!

விஜய்க்கு கேக் வெட்டி கொழும்பில் கொண்டாட்டம்!

விஜய்க்கு கேக் வெட்டி கொழும்பில் கொண்டாட்டம்!

பவானி வீதி தொடர்பான நீதிமன்றக் கட்டளை 21 ஆம் திகதி!

பவானி வீதி தொடர்பான நீதிமன்றக் கட்டளை 21 ஆம் திகதி!

சி.சிறீதரன் எம்.பி கோரிக்கை!

சி.சிறீதரன் எம்.பி கோரிக்கை!

அரசு முறையான விசாரணை நடத்தி மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டும்!

அரசு முறையான விசாரணை நடத்தி மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டும்!

சிங்களமயமாக்கப்படுவதற்கு சாணக்கியன் துணை போகிறாரா?

சிங்களமயமாக்கப்படுவதற்கு சாணக்கியன் துணை போகிறாரா?

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் 11 ஆவது நாள்!

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் 11 ஆவது நாள்!

title