Header Logo
Mogo Academy

வணிகம்
DFCC ஆலோகாவின் வலுவூட்டலுடன் இடம்பெற்ற “She Moves the World” நிகழ்வு

May 14, 2026 - 03:54 PM -

0

DFCC ஆலோகாவின் வலுவூட்டலுடன் இடம்பெற்ற “She Moves the World” நிகழ்வு
Mobitel inner

2026 ம் ஆண்டு சர்வதேச மகளிர் தினத்தைக் கொண்டாடும் முகமாக Great Place to Work நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட “She Moves the World” (அவளாலே உலகம் அசைகின்றது) என்ற பிரத்தியேக நிகழ்வின் மூலோபாயக் கூட்டாளராக கைகோர்த்துள்ள DFCC ஆலோகா பெருமையுடன் அதற்கு வலுவூட்டியுள்ளது. 

தலைமைத்துவப் பணிப்பொறுப்புக்களை வகிக்கும் பெண்களுக்கு அங்கீகாரமளித்து, அவர்கள் மத்தியில் உத்வேகத்தை வளர்ப்பதற்கான மிகவும் வலுவான மேடையாக இந்நிகழ்வு மாறியுள்ளது. மேலும், வேலைத்தளத்தில் பெண்களுக்கு சம வாய்ப்பளித்து அரவணைத்தல் மற்றும் தலைமைத்துவத்தில் பாரபட்சமற்ற முறையில் அவர்களை உள்வாங்கிக்கொள்ளல் ஆகியன தொடர்பில் அர்த்தம் மிக்க கலந்துரையாடலையும் இந்நிகழ்வு ஊக்குவித்துள்ளது. “Thriving Beyond Limits: Overcoming Silent Barriers” (வரையறைகளைத் தாண்டி வளம் காணுதல்: மௌனமான தடைகளை வெல்லுதல்) என்ற தலைப்பில் மிகவும் ஆழமான கலந்துரையாடல் நிகழ்வொன்று இடம்பெற்றது. 

DFCC வங்கியின் சார்பில் துணைத் தலைவரும்/பிரதம சந்தைப்படுத்தல் அதிகாரியுமான கௌஷலா அமரசேகர அவர்கள் கலந்துரையாடலில் பங்குபற்றிய அணியில் இடம்பெற்றிருந்தார். 

DFCC வங்கியின் துணைத் தலைவரும்/பிரதம சந்தைப்படுத்தல் அதிகாரியுமான கௌஷலா அமரசேகர அவர்கள் இது குறித்து கருத்து தெரிவிக்கையில், “பெண்கள் தலைமை தாங்கி, வளர்ச்சி பெற்று, மற்றும் வளர்வதற்கு வெளித்தெரியாத தடைகளைத் தகர்த்து, உகந்த சூழல்களைத் தோற்றுவிப்பது மிகவும் முக்கியம். சகல துறைகளிலும் பெண்களுக்கு வலுவூட்டுவதில் DFCC ஆலோகா தற்போது காண்பித்து வருகின்ற அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கும் வகையில் மிக முக்கியமான இக்கலந்துரையாடலில் பங்குகொண்டு எனது கருத்துக்களை முன்வைக்க வாய்ப்புக் கிட்டியமை எனக்குக் கிடைக்கப்பெற்ற ஒரு கௌரவம் என்றே நான் கருதுகின்றேன். 

வெற்றியீட்டுவதற்கான வாய்ப்புக்களைப் பெற்று, அர்த்தமுள்ள பங்களிப்புக்களை வழங்குவதற்கு பெண்களுக்கு இடமளிக்கின்ற சூழலொன்றை வளர்க்கும் முயற்சிகளை DFCC ஆலோகா தொடர்ந்தும் சிறப்பாக முன்னெடுத்துச் செல்லும்.” “She Moves the World” நிகழ்வுக்கு வழங்கியுள்ள தனது ஆதரவுடன், மாற்றத்தை முன்னெடுத்து, தலைமைத்துவத்தில் பெண்களுக்கான வாய்ப்புக்களைத் தோற்றுவித்து, பணித்தளத்தில் அவர்கள் வெற்றி பெறுவதற்கு உதவுவதற்கு DFCC ஆலோகா தொடர்ந்தும் உறுதியுடன் செயற்படும்.

MOST READ

காணொளி
நுவரெலியாவில் கடும் பனிமூட்டம்!

நுவரெலியாவில் கடும் பனிமூட்டம்!

உள நலம் என்பது மிக முக்கியமான ஒன்றாகும்!

உள நலம் என்பது மிக முக்கியமான ஒன்றாகும்!

மட்டக்களப்பு தற்காலிக பாலம் இன்று திறப்பு!

மட்டக்களப்பு தற்காலிக பாலம் இன்று திறப்பு!

மீனவர்கள் தினமும் பல சவால்களை எதிர்கொள்கின்றனர்!

மீனவர்கள் தினமும் பல சவால்களை எதிர்கொள்கின்றனர்!

கதிர்காமப் பாதயாத்திரை ஆரம்பம்!

கதிர்காமப் பாதயாத்திரை ஆரம்பம்!

தமிழீழ வைப்பகத்தில் அடகு வைத்த  நகைகளை மக்களிடம் மீள ஒப்படையுங்கள்!

தமிழீழ வைப்பகத்தில் அடகு வைத்த நகைகளை மக்களிடம் மீள ஒப்படையுங்கள்!

நீதிமன்ற அனுமதியின்றி சொத்துக்கள் முடக்கமா?

நீதிமன்ற அனுமதியின்றி சொத்துக்கள் முடக்கமா?

நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகளுக்காக 23 நாட்கள் சிறைவாசம் இருந்துள்ளேன்!

நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகளுக்காக 23 நாட்கள் சிறைவாசம் இருந்துள்ளேன்!

சம்பிரதாயத்தை மீறி உடையணிந்து வந்தாரா அர்ச்சுனா எம்.பி? சபையில் சலசலப்பு

சம்பிரதாயத்தை மீறி உடையணிந்து வந்தாரா அர்ச்சுனா எம்.பி? சபையில் சலசலப்பு

யாழ். பல்கலைக்கழக முன்றலில் பாலியல் வன்முறைக்கு எதிராகப் போராட்டம்!

யாழ். பல்கலைக்கழக முன்றலில் பாலியல் வன்முறைக்கு எதிராகப் போராட்டம்!

Mobitel Upahara