Header Logo

வணிகம்
SLIIT வழங்கும் குடிசார் பொறியியல் விசேட இளங்கலைப் பட்டத்திற்கு IESL ன் பூரண அங்கீகாரம்: பொறியியல் மகத்துவத்தில் சாதனை மைற்கல்

May 14, 2026 - 03:58 PM -

0

SLIIT வழங்கும் குடிசார் பொறியியல் விசேட இளங்கலைப் பட்டத்திற்கு IESL ன் பூரண அங்கீகாரம்: பொறியியல் மகத்துவத்தில் சாதனை மைற்கல்

இலங்கை தகவல் தொழில்நுட்ப கற்கை நிறுவனம் (Sri Lanka Institute of Information Technology - SLIIT), ஐந்து ஆண்டுகள் கொண்ட தனது குடிசார் பொறியியல் விசேட இளங்கலைப் பட்டப்படிப்பு கற்கைநெறிக்கு இலங்கை பொறியியலாளர்கள் நிறுவனத்திடமிருந்து (Institution of Engineers, Sri Lanka - IESL) பூரண அங்கீகாரத்தைப் பெற்றுள்ளதன் மூலமாக முக்கியத்துவம் வாய்ந்த தேசிய சாதனை மைற்கல்லினை எட்டியுள்ளது. பொறியியல் கல்வியில் மகத்துவத்தின் மீது இக்கல்வி நிறுவனம் காண்பிக்கும் அர்ப்பணிப்பு மற்றும் இலங்கையின் உயர் கல்வித் துறையில் வளர்ந்து வரும் அதன் அந்தஸ்து ஆகியவற்றை இந்நிகழ்வு அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளது. நிபந்தனை அடிப்படையில் முன்னர் வழங்கப்பட்டிருந்த அங்கீகாரத்தில் ஏற்பட்டுள்ள முக்கியமான மாற்றத்தை இச்சாதனை குறித்து நிற்பதுடன், அதியுயர் கல்வி மற்றும் தொழில்சார் தராதரங்களில் தொடர்ச்சியாகப் பேணி வருகின்ற தர மேம்பாடுகள் மற்றும் அவற்றைச் சிறப்பாகப் பின்பற்றி வருவதை இது பிரதிபலிக்கின்றது. 

நாட்டில் பொறியியலாளர்களின் உச்ச தொழில்சார் அமைப்பாக இலங்கை பொறியியலாளர்கள் நிறுவனம் (Institution of Engineers, Sri Lanka - IESL) செயற்பட்டு வருவதுடன், பொறியியற் கல்வி மற்றும் தொழில்சார் நடைமுறை ஆகியவற்றில் கடுமையான தராதரங்களை நிலைநாட்டி, அவற்றைப் பேணுவதற்கு பொறுப்பு வகித்து வருகின்றது. பொறியியல் பட்டப்படிப்பு கற்கைநெறியொன்று பொறியியல் கல்வியில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி மற்றும் தொழில்சார் தேவைப்பாடுகளைப் பூர்த்தி செய்வதை IESL ன் அங்கீகாரம் உறுதிப்படுத்துகின்றது. 

முழுமையான அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்வதில் SLIIT முன்னெடுத்துள்ள பயணம், இக்கற்கைநெறியை மேம்படுத்துவதில் மிகவும் சிந்தனைபூர்வமான மற்றும் வலுவான அணுகுமுறையை பிரதிபலிக்கின்றது. நிபந்தனையுடன் கூடிய அங்கீகாரம் முன்னர் கிடைக்கப்பெற்றிருந்தமை இக்காலகட்டத்தில் பாரிய சாதனை மைற்கல்லாக மாறியதுடன், இலங்கையில் இந்த அந்தஸ்தைப் பெற்றுக்கொண்ட முதலாவது அரச சார்பற்ற உயர் கல்வி நிறுவனமாகவும் மாறியது. IESL ன் மிகக் கடுமையான மதிப்பீட்டு நடைமுறைக்கு எதிராக, இக்கற்கைநெறியின் கல்விசார் கட்டமைப்பு, பீடத்தின் நிபுணத்துவம், உட்கட்டமைப்பு, மற்றும் தர நிர்ணயப் பொறிமுறைகளையும் இது உறுதிப்படுத்தியிருந்தது. 

அன்று தொட்டு SLIIT ன் பொறியியல் பீடம் கற்கைநெறி சீரமைப்பை செம்மைப்படுத்தி, பீடம் மற்றும் ஆராய்ச்சியின் ஆற்றல்களை வலுப்படுத்தி, ஆய்வுகூடம் மற்றும் கற்கை வசதிகளில் நிலைபேறான மேம்பாடுகளை உறுதி செய்யும் முயற்சிகளை தீவிரப்படுத்தியிருந்தது. இவ்வாறு மேற்கொண்ட ஒருங்கிணைந்த முயற்சிகளின் உச்சப்பலனாக IESL ன் தீர்மானத்துடன் முழுமையான அங்கீகாரத்தை சம்பாதித்துள்ளது. தேசிய எதிர்பார்ப்புக்கள் மற்றும் சர்வதேச தராதரங்கள் ஆகிய இரண்டையும் நிறைவேற்றும் பொறியியல் கல்வியை வழங்குவதில் SLIIT ன் அர்ப்பணிப்புக்குச் சான்றாகும். 

இந்த முழுமையான அங்கீகாரமானது மாணவர்களுக்கும், பட்டப்படிப்பை நிறைவு செய்து வெளியேறிய மாணவர்களுக்கும் வெளிப்படையான நன்மைகளை வழங்குகின்றது. இக்கற்கைநெறியை முழுமையாக நிறைவு செய்யும் பட்டதாரிகள் பல்வேறு தொழில்துறைகள் மத்தியில் மிகவும் மதிக்கப்படுகின்ற வகையில் IESL மூலமாக பட்டயப் பொறியியலாளர் அந்தஸ்தை நோக்கி நெறிப்படுத்தப்பட்ட வழிமுறை அடங்கலாக, தொழில்சார் மேம்பாட்டுக்கான அதிகரித்த வாய்ப்புக்களைப் பெற்று அனுபவிக்க முடியும். இத்தகைய தொழில்ரீதியான அங்கீகாரமானது இலங்கையில் வேலைவாய்ப்புக்களை அதிகரிக்கச் செய்வது மாத்திரமன்றி, உலகெங்கிலும் பரந்த தொழில்வாய்ப்புக்களைப் பெற்றுக்கொள்ளவும் உதவுகின்றது. 

எல்லாவற்றுக்கும் மேலாக, பொறியியல் கற்கைகளுக்கு SLIIT ஐத் தெரிவு செய்வதால் கிடைக்கும் மதிப்பை இந்த அங்கீகாரம் மேலும் வலுப்படுத்துகின்றது. தர நிர்ணய நடைமுறைகள் மற்றும் கடுமையான கல்வித்தரம் ஆகியவற்றின் துணையுடன் உலகெங்கிலும் அங்கீகாரம் பெற்ற பொறியியல் பட்டங்களுக்கு இணையாக, குடிசார் பொறியியல் கற்கைநெறி தற்போது மாறியுள்ளது. தனது ஆராய்ச்சி வெளிப்பாட்டை விரிவுபடுத்தி, தொழிற்துறையில் கூட்டாண்மைகளை வலுப்படுத்தி, மற்றும் முழுமையான மாணவர் மேம்பாட்டை வளர்ப்பதில் SLIIT ன் பரந்த கல்விச் சூழலையும் இந்த அங்கீகாரம் சாதகமான வழியில் பிரதிபலிக்கின்றது. 

இலங்கையிலுள்ள விசாலமான பொறியில் சமூகம் இச்சாதனை மைற்கல் மீது தமது கவனத்தைத் திருப்பியுள்ளது. காலம்காலமாக அரச பல்கலைக்கழகங்கள் பேணி வந்துள்ள தொழில்சார் தராதரங்களை எட்டுவதில் அரச சார்பற்ற உயர் கல்வி நிறுவனங்களின் போக்கு வளர்ச்சி கண்டு வருவதை இது பிரதிபலிக்கின்றது. இது உயர் தர பொறியியல் கல்விக்கான வாய்ப்புக்களை விரிவுபடுத்தும் ஒரு பரிணாம வளர்ச்சியாக மாறியுள்ளதுடன், நாட்டின் பொருளாதார மற்றும் உட்கட்டமைப்பு வளர்ச்சிக்கும் உதவுகின்றது. 

மிகவும் குறிப்பிடத்தக்க இச்சாதனை தொடர்பில் பொறியியல் பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் அயந்த கோமஸ் அவர்கள் தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்கையில்: 

“தராதரம் ஒன்றினை நிலைநாட்டியவாறு IESL இடமிருந்து அங்கீகாரத்தைப் பெற்றுள்ள முதலாவது அரச சார்பற்ற உயர் கல்வி நிறுவனம் என்ற சிறப்பினைப் பெற்றுள்ளமை உண்மையில் எமக்குப் பெருமையாகவுள்ளது. கலாநிதி ஜானக பெரேரா அவர்களின் தலைமையிலான அர்ப்பணிப்புமிக்க பணியாளர்களுக்கு விசேட நன்றிகள். குடிசார் பொறியியல் துறையில் நிகழ்ந்து வரும் மாற்றங்களுக்கேற்ப முனைப்புடன் செயல்படும் இப்பீடம், AI, BIM, மற்றும் IoT போன்ற அதிநவீன தொழில்நுட்பங்களை ஏற்கனவே தனது கற்கைநெறியில் ஒருங்கிணைத்துள்ளது. அத்துடன், அத்தியாவசியமான நடைமுறை மற்றும் டிஜிட்டல் திறன்களை ஒருங்கிணைத்து, யதார்த்த உலகின் செயற்திட்டங்களுடன் பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்ட கற்றலை அதன் ஒப்படைப்பணிகள் உள்வாங்கியுள்ளன”. 

இச்சாதனை SLIIT ன் பொறியியல் பீடத்தின் பலத்தையும், நம்பகத்தன்மையையும் மேலும் வலுப்படுத்தியுள்ளது. இப்பீடம் தொடர்ந்தும் பல்வேறு கல்வி மற்றும் தொழில்சார் அங்கீகாரங்களைச் சம்பாதித்து வருகின்ற அதேவேளையில், தொழிற்துறைக்குப் பொருத்தமான மற்றும் சர்வதேச தர ஒப்பீட்டைக் கொண்ட பொறியியல் கல்வியை வழங்கி வருகின்றது. உயர் தகைமை கொண்ட கல்வி மற்றும் தொழில்சார் பணியாளர்களின் ஓயாத அர்ப்பணிப்பு, மற்றும் அதன் மாணவர்களின் விடாமுயற்சி மற்றும் சிறப்பு ஆகியவற்றுடன் முன்னோக்கிப் பயணித்து வருகின்ற பொறியியல் பீடமானது தரம், புத்தாக்கம், மற்றும் தொடர்ச்சியான மேம்பாடு ஆகியவற்றைக் கொண்ட கலாச்சாரமொன்றைக் கட்டியெழுப்பியுள்ளது. குடிசார் பொறியியல் கற்கைநெறிக்கு IESL இடமிருந்து முழுமையாக அங்கீகாரம் கிடைக்கப்பெற்றுள்ளமை பீடத்திற்கு கிடைத்துள்ள கூட்டு வெற்றியாக மாறியுள்ளது. அத்துடன், இலங்கையில் முன்னணி பொறியியல் கல்வி வழங்குனர் என்ற SLIIT ன் ஸ்தானத்தை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளதுடன், தேசிய அபிவிருத்திக்கும், சர்வதேச பொறியியல் சமூகத்திற்கும் தன்னம்பிக்கையுடன் பங்களிப்பதற்கு எதிர்காலத்தை எதிர்கொள்ளும் திறன் கொண்ட பொறியியலாளர்களை வளர்ப்பதில் அதன் அர்ப்பணிப்பையும் எடுத்துக்காட்டுகின்றது.

Comments
0

MOST READ

காணொளி
இந்த நோய் அறிகுறிகள் இருந்தால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்!

இந்த நோய் அறிகுறிகள் இருந்தால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்!

நுவரெலியாவில் கடும் மழை மற்றும் அடர்ந்த பனிமூட்டம்!

நுவரெலியாவில் கடும் மழை மற்றும் அடர்ந்த பனிமூட்டம்!

மண்டூர் - வெல்லாவெளி போக்குவரத்து முற்றாகத் துண்டிப்பு!

மண்டூர் - வெல்லாவெளி போக்குவரத்து முற்றாகத் துண்டிப்பு!

100 நாட்களுக்குப் பிறகு மீண்டும் யாழ்ப்பாணம் வந்தடைந்தது!

100 நாட்களுக்குப் பிறகு மீண்டும் யாழ்ப்பாணம் வந்தடைந்தது!

விஜய்க்கு கேக் வெட்டி கொழும்பில் கொண்டாட்டம்!

விஜய்க்கு கேக் வெட்டி கொழும்பில் கொண்டாட்டம்!

பவானி வீதி தொடர்பான நீதிமன்றக் கட்டளை 21 ஆம் திகதி!

பவானி வீதி தொடர்பான நீதிமன்றக் கட்டளை 21 ஆம் திகதி!

சி.சிறீதரன் எம்.பி கோரிக்கை!

சி.சிறீதரன் எம்.பி கோரிக்கை!

அரசு முறையான விசாரணை நடத்தி மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டும்!

அரசு முறையான விசாரணை நடத்தி மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டும்!

சிங்களமயமாக்கப்படுவதற்கு சாணக்கியன் துணை போகிறாரா?

சிங்களமயமாக்கப்படுவதற்கு சாணக்கியன் துணை போகிறாரா?

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் 11 ஆவது நாள்!

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் 11 ஆவது நாள்!

title