Header Logo

வடக்கு
நானாட்டானில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கஞ்சி பகிர்வு

May 14, 2026 - 04:28 PM -

0

நானாட்டானில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கஞ்சி பகிர்வு

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரத்தின் மூன்றாம் நாள் நினைவேந்தல், இன்று (14) மன்னார், நானாட்டான் பகுதியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. 

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளையின் ஏற்பாட்டில், இன்று காலை 10.30 மணியளவில் இந்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது. 

இதன் போது, முள்ளிவாய்க்கால் போரின் இறுதி நாட்களில் தமிழ் மக்கள் எதிர்கொண்ட இன்னல்களை நினைவுகூரும் வகையில் 'முள்ளிவாய்க்கால் கஞ்சி' காய்ச்சப்பட்டு, அங்கிருந்தவர்களுக்கும் வீதியால் சென்ற பொதுமக்களுக்கும் வழங்கப்பட்டது. 

இந்த நினைவேந்தல் நிகழ்வில் மதத் தலைவர்கள், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மன்னார் மாவட்ட உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர். 

கடந்த 2009-ம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த உறவுகளை நினைவுகூர்ந்து, ஈழத்தமிழர்களால் வருடாந்தம் மே மாதம் நினைவேந்தல் வாரம் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. 

அந்த வகையில், முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 17-ம் ஆண்டு நினைவேந்தல் வாரத்தின் மூன்றாம் நாள் நிகழ்வுகள் இன்று மன்னாரில் இவ்வாறாக முன்னெடுக்கப்பட்டன.

--

Comments
0

MOST READ

காணொளி
இந்த நோய் அறிகுறிகள் இருந்தால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்!

இந்த நோய் அறிகுறிகள் இருந்தால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்!

நுவரெலியாவில் கடும் மழை மற்றும் அடர்ந்த பனிமூட்டம்!

நுவரெலியாவில் கடும் மழை மற்றும் அடர்ந்த பனிமூட்டம்!

மண்டூர் - வெல்லாவெளி போக்குவரத்து முற்றாகத் துண்டிப்பு!

மண்டூர் - வெல்லாவெளி போக்குவரத்து முற்றாகத் துண்டிப்பு!

100 நாட்களுக்குப் பிறகு மீண்டும் யாழ்ப்பாணம் வந்தடைந்தது!

100 நாட்களுக்குப் பிறகு மீண்டும் யாழ்ப்பாணம் வந்தடைந்தது!

விஜய்க்கு கேக் வெட்டி கொழும்பில் கொண்டாட்டம்!

விஜய்க்கு கேக் வெட்டி கொழும்பில் கொண்டாட்டம்!

பவானி வீதி தொடர்பான நீதிமன்றக் கட்டளை 21 ஆம் திகதி!

பவானி வீதி தொடர்பான நீதிமன்றக் கட்டளை 21 ஆம் திகதி!

சி.சிறீதரன் எம்.பி கோரிக்கை!

சி.சிறீதரன் எம்.பி கோரிக்கை!

அரசு முறையான விசாரணை நடத்தி மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டும்!

அரசு முறையான விசாரணை நடத்தி மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டும்!

சிங்களமயமாக்கப்படுவதற்கு சாணக்கியன் துணை போகிறாரா?

சிங்களமயமாக்கப்படுவதற்கு சாணக்கியன் துணை போகிறாரா?

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் 11 ஆவது நாள்!

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் 11 ஆவது நாள்!

title