Header Logo

செய்திகள்
முத்தரப்பு கிரிக்கெட் தொடருக்கான இந்திய குழாம் அறிவிப்பு

May 14, 2026 - 07:11 PM -

0

முத்தரப்பு கிரிக்கெட் தொடருக்கான இந்திய குழாம் அறிவிப்பு

இலங்கையில் எதிர்வரும் ஜூன் மாதம் நடைபெறவுள்ள ஒருநாள் முத்தரப்பு தொடருக்கான இந்திய 'ஏ' கிரிக்கெட் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த முத்தரப்பு ஒருநாள் தொடரில் போட்டியை நடத்தும் இலங்கை 'ஏ', இந்தியா 'ஏ' மற்றும் ஆப்கானிஸ்தான் 'ஏ' ஆகிய அணிகள் பங்கேற்கவுள்ளன. 

தம்புள்ளையில் நடைபெறவுள்ள இந்த தொடரில் இந்திய ஏ அணியின் தலைவராக திலக் வர்மா நியமிக்கப்பட்டுள்ளார். 

ரியான் பராக் உப தலைவராகச் செயற்படுவுள்ளார். 

திலக் வர்மா தலைமையிலான இந்த அணியில் பிரியான்ஷ் ஆர்யா, வைபவ் சூர்யவன்ஷி, ரியான் பராக், ஆயுஷ் பதோனி, நிஷாந்த் சிந்து, ஹர்ஷ் துபே, சூர்யான்ஷ் ஷெட்ஜ், பிரப்சிம்ரன் சிங், குமார் குஷாக்ரா, விப்ராஜ் நிகாம், யாஷ் தாகூர், யுத்வீர் சிங், அன்ஷுல் காம்போஜ், அர்ஷாத் கான் ஆகியோர் உள்வாங்கப்பட்டுள்ளனர். 

இதேவேளை முத்தரப்பு ஒருநாள் தொடரைத் தொடர்ந்து, இலங்கை 'ஏ' மற்றும் இந்தியா 'ஏ' அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் ஒன்றும் காலியில் நடைபெறவுள்ளன. 

இந்தப் போட்டிகளுக்கான கிரிக்கெட் அணி விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MOST READ

காணொளி
காலி முகத்திடலில் அரங்கேறிய கின்னஸ் சாதனை

காலி முகத்திடலில் அரங்கேறிய கின்னஸ் சாதனை

355 மனித என்புத் தொகுதிகள் அடையாளம்!

355 மனித என்புத் தொகுதிகள் அடையாளம்!

கோப்பாய் பொலிஸ் நிலையம் திறந்து வைப்பு!

கோப்பாய் பொலிஸ் நிலையம் திறந்து வைப்பு!

23 ஆம் நாள் அகழ்வில் மேலும் 12 என்புக்கூடுகள் அடையாளம்!

23 ஆம் நாள் அகழ்வில் மேலும் 12 என்புக்கூடுகள் அடையாளம்!

பாராளுமன்றில் அர்ச்சுனா அதிரடி!

பாராளுமன்றில் அர்ச்சுனா அதிரடி!

தமிழ் மக்கள் மத்தியில் நம்பிக்கை கட்டியெழுப்பப்பட வேண்டும்!

தமிழ் மக்கள் மத்தியில் நம்பிக்கை கட்டியெழுப்பப்பட வேண்டும்!

அரசாங்கம் ஓர் அரசியல் நாடகத்தை ஆடுகிறது!

அரசாங்கம் ஓர் அரசியல் நாடகத்தை ஆடுகிறது!

சிறந்த பொருளாதாரக் கொள்கையுடன் பயணித்துக் கொண்டு இருக்கின்றோம்!

சிறந்த பொருளாதாரக் கொள்கையுடன் பயணித்துக் கொண்டு இருக்கின்றோம்!

விவசாயிகள் நஞ்சு குடித்து உயிரை மாய்ப்பதா?

விவசாயிகள் நஞ்சு குடித்து உயிரை மாய்ப்பதா?

ரியாஸ் பாருக் பாராளுமன்றில் அதிரடி!

ரியாஸ் பாருக் பாராளுமன்றில் அதிரடி!

title