Header Logo

செய்திகள்
நிதிச் சேவை வழங்குநர்கள் தொடர்பான முறைப்பாடுகளுக்காக புதிய அமைப்பு!

May 15, 2026 - 10:04 PM -

0

நிதிச் சேவை வழங்குநர்கள் தொடர்பான முறைப்பாடுகளுக்காக புதிய அமைப்பு!

இலங்கை மத்திய வங்கியினால் ஒழுங்குமுறைப்படுத்தப்படும் நிதிச் சேவை வழங்குநர்கள் தொடர்பில் நுகர்வோர் கொண்டுள்ள முறைப்பாடுகள் மற்றும் குறைகளைச் சமர்ப்பிப்பதை எளிதாக்கும் வகையில், 'ஒன்லைன் முறைப்பாடு முகாமைத்துவ அமைப்பு' ஒன்றினை மத்திய வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது. 

மத்திய வங்கியின் ஒழுங்குமுறை கட்டமைப்பிற்குள் முறைப்பாடுகளை கையாளும் செயல்முறையின் பொறுப்புக்கூறல், செயல்திறன் மற்றும் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தும் நோக்கில் இந்த அமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய வங்கி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த அமைப்பின் மூலம் நிதி நுகர்வோர் தமது முறைப்பாடுகளை முறையான மற்றும் தரப்படுத்தப்பட்ட முறையில் சமர்ப்பிக்க வாய்ப்பு வழங்கப்படுவதுடன், அந்த முறைப்பாடுகளை மிகவும் வினைத்திறனுடன் ஒழுங்குமுறைப்படுத்தவும், குறித்த காலப்பகுதிக்குள் தீர்வுகாணவும் இது உதவும் என இலங்கை மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது. 

இதன் மூலம் காகித அடிப்படையிலான செயல்பாடுகள் குறைக்கப்படுவதுடன், செயல்முறையில் ஏற்படும் தாமதங்களைத் தவிர்த்து முறைப்பாடு முகாமைத்துவ நடவடிக்கைகள் முறைப்படுத்தப்படும். இந்த அமைப்பு 24 மணிநேரமும் இயங்கும் என்பதால், நிதி நுகர்வோர் தமக்கு வசதியான எந்த நேரத்திலும் முறைப்பாடுகளை சமர்ப்பிக்க முடியும். 

மேலும், தாங்கள் சமர்ப்பித்த முறைப்பாடுகளின் தற்போதைய நிலை மற்றும் முன்னேற்றம் குறித்து நுகர்வோர் அறிந்துகொள்ள முடியும் என்பதுடன், இது தீர்வு காணும் செயல்முறை முழுவதும் உயர் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும். 

முதற்கட்டமாக, நிதி நுகர்வோர் தமது முறைப்பாடுகள் மற்றும் குறைகளை நேரடியாக சம்பந்தப்பட்ட நிதிச் சேவை வழங்குநர்களிடமே சமர்ப்பிக்க வேண்டும் என்று மத்திய வங்கி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. 

அந்த முறைப்பாடுகளுக்கு நிதிச் சேவை வழங்குநர்கள் தீர்வை வழங்கத் தவறினால் அல்லது அவர்களின் பதிலில் நுகர்வோர் திருப்தியடையவில்லை என்றால் மட்டுமே, இந்த ஒன்லைன் முறையின் ஊடாக இலங்கை மத்திய வங்கிக்கு முறைப்பாடுகளை அனுப்ப முடியும். 

இந்த அமைப்பின் செயல்பாடுகளை வினைத்திறனாக முன்னெடுப்பதற்கு வசதியாக, சமர்ப்பிக்கப்படும் அனைத்து தகவல்களின் தெளிவு, துல்லியம் மற்றும் முழுமையை உறுதிப்படுத்துமாறும், அதற்குரிய அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பிக்குமாறும் பயனாளர்களுக்கு மத்திய வங்கி அறிவுறுத்தியுள்ளது. 

அதன்படி, இந்த முறைப்பாடு முகாமைத்துவ அமைப்பை https://reachus.cbsl.lk/ என்ற இணைப்பின் ஊடாக அணுக முடியும் என சுட்டிக்காட்டியுள்ள இலங்கை மத்திய வங்கி, நிதி நுகர்வோர் இதன் ஊடாகத் தமது முறைப்பாடுகளை ஒன்லைனில் சமர்ப்பிக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளது.

Comments
0

MOST READ

காணொளி
வடக்கில் ஊழல் அதிகாரிகளால் முறையாற்ற ஆசிரிய இடமாற்றம்!

வடக்கில் ஊழல் அதிகாரிகளால் முறையாற்ற ஆசிரிய இடமாற்றம்!

கடும் மழை ஹட்டன் வலய பாடசாலைகளுக்கு விடுமுறை!

கடும் மழை ஹட்டன் வலய பாடசாலைகளுக்கு விடுமுறை!

அனைவருக்கும் சட்டம் சமன்!

அனைவருக்கும் சட்டம் சமன்!

இந்த நோய் அறிகுறிகள் இருந்தால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்!

இந்த நோய் அறிகுறிகள் இருந்தால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்!

நுவரெலியாவில் கடும் மழை மற்றும் அடர்ந்த பனிமூட்டம்!

நுவரெலியாவில் கடும் மழை மற்றும் அடர்ந்த பனிமூட்டம்!

மண்டூர் - வெல்லாவெளி போக்குவரத்து முற்றாகத் துண்டிப்பு!

மண்டூர் - வெல்லாவெளி போக்குவரத்து முற்றாகத் துண்டிப்பு!

100 நாட்களுக்குப் பிறகு மீண்டும் யாழ்ப்பாணம் வந்தடைந்தது!

100 நாட்களுக்குப் பிறகு மீண்டும் யாழ்ப்பாணம் வந்தடைந்தது!

விஜய்க்கு கேக் வெட்டி கொழும்பில் கொண்டாட்டம்!

விஜய்க்கு கேக் வெட்டி கொழும்பில் கொண்டாட்டம்!

பவானி வீதி தொடர்பான நீதிமன்றக் கட்டளை 21 ஆம் திகதி!

பவானி வீதி தொடர்பான நீதிமன்றக் கட்டளை 21 ஆம் திகதி!

சி.சிறீதரன் எம்.பி கோரிக்கை!

சி.சிறீதரன் எம்.பி கோரிக்கை!

title