Header Logo
SLIC
ஜோதிடம்
இன்றைய ராசி பலன் (16.05.2026)!

May 16, 2026 - 09:19 AM

இன்றைய ராசி பலன் (16.05.2026)!
Mobitel Inner 1278
EDEX Inner

இன்று (16) மேஷ ராசியில் பரணி, கிருத்திகை நட்சத்திரத்தில் சந்திரன் பயணிக்க உள்ளார். இன்று அமிர்த யோகம் உள்ள தினம். இன்று மிதுனத்தில் குரு - சுக்கிரன் சேர்க்கை கஜலட்சுமி யோகம் மற்றும் புதாதித்ய யோகம் உருவாகும் நாள். இன்று கன்னி, துலாம் ராசிக்கு சந்திராஷ்டமம் உள்ளது. இன்று மாத சிவராத்திரி தினம். 

மேஷம் ராசி பலன் 

மேஷ ராசி அன்பர்களுக்கு இன்று சந்திரன் உங்கள் ராசிக்கு தனஸ்தானத்தில் சஞ்சரிப்பதும், சனி பகவான் விரய ஸ்தானத்தில் இருப்பதால் உங்களுடைய பணியிடத்திலோ அல்லது அலுவலகத்திலோ முன்னேற்றமும் உங்களுக்கு சில புதிய பொறுப்புகளும் வழங்கப்படலாம். இன்று ஆக்கபூர்வமான பணிகளில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். இன்று உங்கள் பிள்ளைகளின் திருமணம் தொடர்பான பேச்சு வார்த்தை முன்னேற்றம் அடையும். தடைபட்ட வேலைகள் முடிக்க வாய்ப்பு கிடைக்கும். இன்று உங்களுடைய துணையிடமிருந்து எதிர்பார்த்த ஆதரவு முழுவதுமாக கிடைக்கும். நிதி சார்ந்த விஷயங்களில் அதிர்ஷ்டசாலியாக உணர்வீர்கள். 

ரிஷபம் ராசி பலன் 

ரிஷப ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் ராசி அதிபதி சுக்கிரன் தனஸ்தானத்தில் இருப்பதும், உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டை அவரின் சுப பார்வை பெறுவதால் நீங்கள் சுக போகங்கள் அனுபவிக்க வாய்ப்புகள் உண்டு. சுற்றுலா, இனிய பயணங்கள் செல்ல வாய்ப்பு கிடைக்கும். இன்று சில அத்தியாவசியமான பொருட்களை வாங்குவதற்காக அடிகளவில் செல்ல விடுவீர்கள் இன்று உங்கள் குடும்பத்தில் உள்ள பெரியவர்களுடன் சில வாக்குவாதம் ஏற்படும். இன்று அதை தவிர்ப்பதும் உங்கள் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது அவசியம். இன்று பிறர் கூறக்கூடிய கருத்துக்களை கவனமாக குறிப்பிட்டுக் கொள்வது நல்லது. பணியிடத்தில் மிகவும் சாதகமான சூழல் நிலவும். உங்கள் வேலையில் முன்னேற்றத்தை காண வாய்ப்புகள் உண்டு. 

மிதுனம் ராசி பலன் 

மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று சந்திர பகவானின் சஞ்சாரம் லாப ஸ்தானத்தில் இருப்பதால் உங்களுக்கு அரசு தொடர்பான விஷயங்கள் சாதகமான பலனை அடைவீர்கள். நீங்கள் செய்யக்கூடிய வேலை அல்லது தொழிலில் நல்ல லாபத்தை எதிர்பார்க்கலாம். சமூகத்தில் உங்களுடைய கௌரவம் அதிகரிக்கும். உங்களின் ஆக்கபூர்வமான செயல்பாடுகளுக்கு பாராட்டு கிடைக்கும். உங்கள் தொழில் கூட்டாளிகள் மற்றும் உங்கள் வாழ்க்கை துணை இடமிருந்து எதிர்பார்த்த முழுமையான ஆதரவு கிடைக்கும். இன்று உங்கள் கடன் சுமை குறையும். உடல் நலனில் கவனம் தேவை. மேலும் வண்டி வாகனம் ஓட்டுதல், நெருப்பு, வேதிப்பொருள் போன்ற ஆபத்தான விஷயங்களில் கவனம் தேவை 

கடகம் ராசி பலன் 

கடக ராசி அன்பர்களுக்கு இன்று மிதுன ராசியில் குருவும், லாப ஸ்தானத்தில் ராசி அதிபதி வீட்டில் சந்திரனும் சஞ்சரிப்பதால், உங்களுக்கு செல்வம் சேரும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணம் வந்து சேரும். உங்களுடைய குடும்ப உறவுகள் வலுவடையும். அரசியல் மற்றும் சமூகத் துறையில் வெற்றி பெறுவீர்கள். இன்று உங்கள் குடும்பத்தில் சில சுப நிகழ்ச்சிகள் நடக்கும் வாய்ப்புகள் உண்டு. இன்று உங்களுடைய மன அழுத்தம் மற்றும் குழப்பங்கள் விலகும். அன்றாட பணிகளில் நீங்கள் செய்யக்கூடிய பயணங்கள் சற்று அலைச்சலை தரும். 

சிம்மம் ராசி பலன் 

சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று, உங்கள் அன்புக்குரியவர்கள் மற்றும் பிறரின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு, செயல்படுவது நல்லது. இது உங்கள் குடும்ப உறவு மேம்படுத்தும். இன்று உங்களுக்கு பிரச்சனையை தரக்கூடிய சூழலுக்கான தீர்வை யார் கொடுத்தாலும் அதை குறிப்பெடுத்து கொள்வது நல்லது. அது தொடர்பாக நிதானமாக சரியான முடிவு எடுத்து செயல்படுவது நல்லது. இன்று அலுவலகத்தில் உள்ளது குழுவாக இணைந்து செயல்படக்கூடிய வேலைகளில் சிக்கலை தீர்த்து வெற்றி அடைவீர்கள். ஆடம்பரங்கள் மற்றும் பொழுதுபோக்கு அதிக அளவில் செலவிட வாய்ப்பு உண்டு. 

கன்னி ராசி பலன் 

கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுடைய பாக்கிய ஸ்தானத்தில் சந்திரனின் சஞ்சாரம் இருப்பதால் உங்களுடைய நண்பர்கள் மற்றும் முக்கிய நபர்களின் ஆதரவு உங்களுக்கு மன உறுதியை தரும். இன்று உங்களுடைய செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உண்டு. குடும்பத்திலும், பணியிடத்திலும் ஒரு இணக்கமான சூழ்நிலை உருவாக்க முயற்சி செய்யவும். பணியிடத்தில் நீங்கள் சில திடீர் மாற்றங்களை சந்திக்க நேரிடும். இன்று உங்களுடைய மைலாதிகாரிகள் மற்றும் பெண் சக ஊழியர் உங்களுக்கு மிகவும் உறுதுணையாக இருப்பார். 

துலாம் ராசி பலன் 

துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று நீங்கள் சில சிறந்த மனிதர்களை சந்திக்கக்கூடிய வாய்ப்பு மற்றும் அவர்களின் ஆலோசனை பெற வாய்ப்பு உண்டு. திடீரென ஏற்படக்கூடிய எதிர்பாராத நிகழ்வுகள் உங்களுக்கு நன்மை தரும். எந்த ஒரு புதிய முயற்சியை தொடங்கினாலும் அதில் உள்ள சட்ட ரீதியான மற்றும் தொழில்நுட்ப ரீதியான அம்சங்களை மிகவும் கவனமாக பரிசீலித்த பின்னர் அதில் ஈடுபடவும். நீண்ட நாட்களாக தடைப்பட்டு வந்த அல்லது முடிக்கப்படாமல் தேங்கிக் கிடக்கும் வேலைகள் முடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். 

விருச்சிகம் ராசி பலன் 

விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு மகிழ்ச்சி நிறைந்த நாளாக அமையும். தொழில் சார்ந்த விஷயங்களில் பிறரின் ஆலோசனை நாட வேண்டியது இருக்கும். நாளின் பிற்பகுதியில் உங்கள் நண்பர்களுடன் நேரம் செலவிட வாய்ப்பு கிடைக்கும். பணியிடமாக இருந்தாலும், உங்கள் வீடாக இருந்தாலும் உங்களுக்கான பொறுப்புகளையும் உணர்ந்து கவனமாக செயல்படவும். இன்று உங்களுடைய முயற்சிகள் அனைத்தும் எதிர்பார்த்த வெற்றி தரும். உங்களுடைய நிர்வாக திறன் மற்றும் கலை திறன் வெளிப்படுத்துவீர்கள். உடல் நலன் மீது கூடுதல் கவனம் செலுத்தவும். 

தனுசு ராசி பலன் 

தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்குக் கலவையான பலன்கள் கிடைக்கும் நாளாகும். உங்களுடைய கடமைகள் மற்றும் பொறுப்புகளை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்தவும். பணியிடத்தில் உங்களுடைய ஆலோசனை வரவேற்கப்படும். உங்கள் வீட்டிற்கு தேவையான சில அத்தியாவசியமான பொருட்களை வாங்க அதிக அளவில் செலவிடுவீர்கள். உங்களுடைய செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உண்டு. மாலைப்பொழுதே குடும்பத்தினருடன் சிலை விட முயலவும். இன்று உங்கள் மனதிற்கு நிறைவை தரும் விதத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். 

மகரம் ராசி பலன் 

மகர ராசி அன்பர்களுக்கு இன்று, நீங்கள் வேலை உள்ளது மகிழ்ச்சியான பயணங்கள் மேற்கொள்ள வாய்ப்புகள் உண்டு. உங்களுடைய செல்வாக்கு உயரும். உங்கள் சகோதரர்கள் சகோதரியின் திருமணம் தொடர்பான நல்ல செய்திகளை கிடைக்கும். இன்று நீங்கள் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பு உண்டு. உங்கள் நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். இன்று வேலை அல்லது தொழில் தொடங்க நீங்கள் எதிர்பார்க்கும் கடந்தவை கிடைக்க வாய்ப்பு உண்டு. சிலருக்கு நரம்பு, ரத்தம் தொடர்பான ஆரோக்கிய பிரச்சனை ஏற்படலாம். 

கும்ப ராசி பலன் 

கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று, ராசி அதிபதியான சனி பகவான், உங்கள் தன ஸ்தானத்தில் சஞ்சரிப்பது, அரசியல் வெற்றிக்கான ஒரு முக்கிய காரணியாக அமையும். இன்று நீங்கள் எந்த ஒரு போட்டியில் ஈடுபட்டாலும் அதில் சிறப்பான வெற்றியை பெறுவீர்கள். எதிரிகள் பின்வாங்கி செல்வார்கள். உங்களுடைய சமூக செயல்பாடு மற்றும் நீங்கள் செய்யக்கூடிய செலவுகள் உங்கள் புகழை பெருக்கும். இன்று அறப்பணி அல்லது தர்ம காரியங்களில் நீங்கள் மகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள்.கல்வித் துறையில் நீங்கள் நல்ல வெற்றியை பெறுவீர்கள். 

மீனம் ராசி பலன் 

மீனம் ராசி அன்பர்களுக்கு இன்று நீங்கள் கடந்த சில நாட்களாக சந்தித்து வந்த பிரச்சனைகள் விலகும். தைரிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சந்திரன், உங்கள் வேலை நம்பிக்கையுடன் செயல்பட உதவும். மேலும், உங்களுக்குச் சிறந்த செல்வ வளத்தை அருளுவார். நீங்கள் இழந்த பணமும் அல்லது உங்களுக்கு வராமல் முடங்கி கிடக்கும் பணம் கைக்கு வந்து சேர வாய்ப்பு உண்டு. உங்களுடைய ஆலோசனை மற்றும் செயல்பாடு நல்ல பலனை தரும்.. எந்தவித கடினமான பிரச்சினையாக இருந்தாலும் அதை தீர்க்கும் மன உறுதியுடன் செயல்படுவீர்கள். எந்த விதமான ஆபத்து நிறைந்த வேலை மற்றும் முதலீடுகளை தவிர்ப்பது நல்லது.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

நாக வாகன உற்சவம்!

நாக வாகன உற்சவம்!

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

Mobitel 1278