Header Logo

சினிமா
நடிகை காயத்ரி சாய்க்கு பாலியல் தொல்லை வழக்கு!

May 16, 2026 - 10:51 AM -

0

நடிகை காயத்ரி சாய்க்கு பாலியல் தொல்லை வழக்கு!

நடிகை காயத்ரி சாய்க்கு பாலியல் தொல்லை அளித்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் மூத்த பத்திரிகையாளர் பிரகாஷ் சுவாமியை விடுதலை செய்து சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

நடிகை காயத்ரி சாயின் கணவரும், ஹாங்காங்கில் தனியார் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக இருந்தவருமான சாய்நாத் வெங்கட்ராவின் மர்ம மரணம் குறித்து மூத்த பத்திரிகையாளர் சுவாமி புலனாய்வு செய்து வந்த நிலையில், அவர் மீது நடிகை பாலியல் புகார் அளித்திருந்தார். கடந்த 2018 ஆம் ஆண்டு தொடரப்பட்ட இந்த பாலியல் துன்புறுத்தல் வழக்கு, சென்னை சைதாப்பேட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. 

பத்திரிகையாளர் சுவாமி தரப்பில், புகார் கூறப்பட்ட சம்பவம் ஜூன் 2018 இல் நடந்ததாகக் கூறப்பட்டதாகவும், ஆனால் செப்டம்பர் மாதம் தான் மகளிர் ஆணையத்தில் நடிகை புகார் அளித்து, நவம்பர் மாதம் சைபர் கிரைம் பொலிஸாரிடம் புகார் அளிக்கப்பட்டதாக குறிப்பிட்டார். 

இந்த நீண்ட காலதாமதத்திற்கு முறையான காரணங்கள் தெரிவிக்கப்படவில்லை என்றும் புகார்தாரரின் சாட்சி நன்கு கற்றுக்கொடுக்கப்பட்டது என வாதிடப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் நீதிமன்றம், மூத்த பத்திரிகையாளர் டாக்டர் பிரகாஷ் எம்.சுவாமி மீது சுமத்திய குற்றச்சாட்டுகள் காலதாமதமானவை, நம்பகத்தன்மையற்றவை மற்றும் ஆதாரமற்றவை என்று கூறிய நீதிபதி, அவரை விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.

Comments
0

MOST READ

காணொளி
வடக்கில் ஊழல் அதிகாரிகளால் முறையாற்ற ஆசிரிய இடமாற்றம்!

வடக்கில் ஊழல் அதிகாரிகளால் முறையாற்ற ஆசிரிய இடமாற்றம்!

கடும் மழை ஹட்டன் வலய பாடசாலைகளுக்கு விடுமுறை!

கடும் மழை ஹட்டன் வலய பாடசாலைகளுக்கு விடுமுறை!

அனைவருக்கும் சட்டம் சமன்!

அனைவருக்கும் சட்டம் சமன்!

இந்த நோய் அறிகுறிகள் இருந்தால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்!

இந்த நோய் அறிகுறிகள் இருந்தால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்!

நுவரெலியாவில் கடும் மழை மற்றும் அடர்ந்த பனிமூட்டம்!

நுவரெலியாவில் கடும் மழை மற்றும் அடர்ந்த பனிமூட்டம்!

மண்டூர் - வெல்லாவெளி போக்குவரத்து முற்றாகத் துண்டிப்பு!

மண்டூர் - வெல்லாவெளி போக்குவரத்து முற்றாகத் துண்டிப்பு!

100 நாட்களுக்குப் பிறகு மீண்டும் யாழ்ப்பாணம் வந்தடைந்தது!

100 நாட்களுக்குப் பிறகு மீண்டும் யாழ்ப்பாணம் வந்தடைந்தது!

விஜய்க்கு கேக் வெட்டி கொழும்பில் கொண்டாட்டம்!

விஜய்க்கு கேக் வெட்டி கொழும்பில் கொண்டாட்டம்!

பவானி வீதி தொடர்பான நீதிமன்றக் கட்டளை 21 ஆம் திகதி!

பவானி வீதி தொடர்பான நீதிமன்றக் கட்டளை 21 ஆம் திகதி!

சி.சிறீதரன் எம்.பி கோரிக்கை!

சி.சிறீதரன் எம்.பி கோரிக்கை!

title