Header Logo

செய்திகள்
'அந்தரே' அமைப்பினருக்கு எதிராக தொம்பே பிரதேச செயலாளரால் முறைப்பாடு

May 16, 2026 - 11:12 PM -

0

 'அந்தரே' அமைப்பினருக்கு எதிராக தொம்பே பிரதேச செயலாளரால் முறைப்பாடு

கம்பஹா, மல்வானை பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றிற்குள் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒரு தரப்பினர் சட்டவிரோதமாக நுழைந்து, அதனைத் தம்வசப்படுத்தியுள்ளமை தொடர்பாக தொம்பே பிரதேச செயலாளரால் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அரசாங்கத்திற்குச் சொந்தமான நிலப்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்தமைக்காக, சம்பந்தப்பட்ட குழுவினருக்கு எதிராக தொம்பே பொலிஸ் நிலையத்தில் பிரதேச செயலாளரால் இந்த முறைப்பாடு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மல்வானை பகுதியில் அமைந்துள்ள, உரிமையாளர் எவருமற்ற இந்த வீடு மற்றும் காணியை குறிப்பிட்ட சில பல்கலைக்கழகங்களுக்கு வழங்குமாறு கோரி, அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தைச் சேர்ந்த குழுவினர் கடந்த 14ஆம் திகதி முதல் அங்கு தங்கியிருந்து போராட்ட நடவடிக்கையொன்றை ஆரம்பித்திருந்தனர்.

இதேவேளை, அவர்களின் இந்த நடவடிக்கைக்கு எதிராக 'நவ ஜனதா பெரமுன' கட்சியினரும் இன்று (16) தொம்பே பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றைச் செய்திருந்தனர்.  

Comments
0

MOST READ

காணொளி
கஞ்சி வழங்கும் நிகழ்வு!

கஞ்சி வழங்கும் நிகழ்வு!

வடக்கில் ஊழல் அதிகாரிகளால் முறையாற்ற ஆசிரிய இடமாற்றம்!

வடக்கில் ஊழல் அதிகாரிகளால் முறையாற்ற ஆசிரிய இடமாற்றம்!

கடும் மழை ஹட்டன் வலய பாடசாலைகளுக்கு விடுமுறை!

கடும் மழை ஹட்டன் வலய பாடசாலைகளுக்கு விடுமுறை!

அனைவருக்கும் சட்டம் சமன்!

அனைவருக்கும் சட்டம் சமன்!

இந்த நோய் அறிகுறிகள் இருந்தால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்!

இந்த நோய் அறிகுறிகள் இருந்தால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்!

நுவரெலியாவில் கடும் மழை மற்றும் அடர்ந்த பனிமூட்டம்!

நுவரெலியாவில் கடும் மழை மற்றும் அடர்ந்த பனிமூட்டம்!

மண்டூர் - வெல்லாவெளி போக்குவரத்து முற்றாகத் துண்டிப்பு!

மண்டூர் - வெல்லாவெளி போக்குவரத்து முற்றாகத் துண்டிப்பு!

100 நாட்களுக்குப் பிறகு மீண்டும் யாழ்ப்பாணம் வந்தடைந்தது!

100 நாட்களுக்குப் பிறகு மீண்டும் யாழ்ப்பாணம் வந்தடைந்தது!

விஜய்க்கு கேக் வெட்டி கொழும்பில் கொண்டாட்டம்!

விஜய்க்கு கேக் வெட்டி கொழும்பில் கொண்டாட்டம்!

பவானி வீதி தொடர்பான நீதிமன்றக் கட்டளை 21 ஆம் திகதி!

பவானி வீதி தொடர்பான நீதிமன்றக் கட்டளை 21 ஆம் திகதி!

title