May 17, 2026 - 07:44 AM -
0
சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட 02 மோட்டார் சைக்கிள்களைத் தம்வசம் வைத்திருந்த சந்தேகநபர் ஒருவர் மத்திய குற்றப்புலனாய்வுப் பணியகத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று (16) அதிகாலை அத்துருகிரிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மில்லினியம் சிட்டி வீட்டுத் தொகுதிப் பகுதியில் மத்திய குற்றப்புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே இந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது, எவ்வித அனுமதிப்பத்திரங்களும் இன்றி வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட 02 மோட்டார் சைக்கிள்கள் அதிகாரிகளால் பொறுப்பேற்கப்பட்டுள்ளன.
இச்சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர் அத்துருகிரிய பகுதியைச் சேர்ந்த 29 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மத்திய குற்றப்புலனாய்வுப் பணியகத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.
