May 17, 2026 - 08:01 AM -
0
பேராதனைப் பகுதியில் லொறி ஒன்றுடன் மோதி பௌத்த பிக்கு ஒருவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று (16) பேராதனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பேராதனை, ரஜவத்த வீதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
பேராதனையிலிருந்து கண்டி நோக்கி பயணித்த லொறி ஒன்று, வீதியைக் கடக்க முயன்ற பிக்கு மீது மோதியதிலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த பிக்கு, பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.
இவ்வாறு உயிரிழந்தவர் போவலவத்த பகுதியில் உள்ள ஆசிரமம் ஒன்றில் வசித்து வந்த 83 வயதுடைய பௌத்த துறவி ஆவார்.
லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், விபத்து குறித்து பேராதனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
