Header Logo

இந்தியா
தரங்கெட்ட ஆள் நான் இல்லை - நடிகர் ரஜினிகாந்த் பேட்டி

May 17, 2026 - 11:34 AM -

0

தரங்கெட்ட ஆள் நான் இல்லை - நடிகர் ரஜினிகாந்த் பேட்டி

விஜய் முதலமைச்சராவதை தடுக்கும் அளவுக்கு தரங்கெட்ட ஆள் நான் இல்லை என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.  அப்போது; தேர்தல் முடிவுகள் வந்த பிறகு என்னைப் பற்றி சில விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் பரவின.

என்னைப் பற்றி பரவிய விமர்சனங்களுக்கு நான் விளக்கம் தரவில்லை என்றால் அது உண்மை என்றாகிவிடும். மு.க.ஸ்டாலின் எனது 40 ஆண்டு கால நண்பர், அரசியல் கடந்து அவருடன் எனது நட்பு தொடர்கிறது.

சென்னை கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் தோற்றது வருத்தமாக உள்ளது. விஜய் முதலமைச்சராவதை தடுக்கும் அளவுக்கு தரங்கெட்ட ஆள் நான் இல்லை. விஜய் வென்றவுடன் வாழ்த்து தெரிவித்துவிட்டேன். விஜய்யையும் தன்னையும் ஒப்பிடுவது தவறானது.

விஜய் வென்றதால் பொறாமை இல்லை. விஜய் தனியாக வென்றதில் எனக்கு ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சி. எதிர்பார்ப்புகளை விஜய் பூர்த்தி செய்வார் என்ற நம்பிக்கை உள்ளது.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் இளைஞர்கள், பெண்கள், சமூக வலைதளங்கள் போன்றவை முக்கிய பங்காற்றின. விஜய்யின் தொண்டர்களும் நிர்வாகிகளும் ஜாக்கிரதையாக நடந்துகொள்ள வேண்டும். நான் கட்சி தொடங்கி இருந்தால் நூறு சதவிகிதம் வெற்றி பெற்றிருப்பேன் என்று கூறினார்.

Comments
0

MOST READ

காணொளி
கஞ்சி வழங்கும் நிகழ்வு!

கஞ்சி வழங்கும் நிகழ்வு!

வடக்கில் ஊழல் அதிகாரிகளால் முறையாற்ற ஆசிரிய இடமாற்றம்!

வடக்கில் ஊழல் அதிகாரிகளால் முறையாற்ற ஆசிரிய இடமாற்றம்!

கடும் மழை ஹட்டன் வலய பாடசாலைகளுக்கு விடுமுறை!

கடும் மழை ஹட்டன் வலய பாடசாலைகளுக்கு விடுமுறை!

அனைவருக்கும் சட்டம் சமன்!

அனைவருக்கும் சட்டம் சமன்!

இந்த நோய் அறிகுறிகள் இருந்தால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்!

இந்த நோய் அறிகுறிகள் இருந்தால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்!

நுவரெலியாவில் கடும் மழை மற்றும் அடர்ந்த பனிமூட்டம்!

நுவரெலியாவில் கடும் மழை மற்றும் அடர்ந்த பனிமூட்டம்!

மண்டூர் - வெல்லாவெளி போக்குவரத்து முற்றாகத் துண்டிப்பு!

மண்டூர் - வெல்லாவெளி போக்குவரத்து முற்றாகத் துண்டிப்பு!

100 நாட்களுக்குப் பிறகு மீண்டும் யாழ்ப்பாணம் வந்தடைந்தது!

100 நாட்களுக்குப் பிறகு மீண்டும் யாழ்ப்பாணம் வந்தடைந்தது!

விஜய்க்கு கேக் வெட்டி கொழும்பில் கொண்டாட்டம்!

விஜய்க்கு கேக் வெட்டி கொழும்பில் கொண்டாட்டம்!

பவானி வீதி தொடர்பான நீதிமன்றக் கட்டளை 21 ஆம் திகதி!

பவானி வீதி தொடர்பான நீதிமன்றக் கட்டளை 21 ஆம் திகதி!

title