Header Logo

வணிகம்
மொழிசார்ந்த கல்வி முறைமைகளை வலியுறுத்தும் புதிய நிலைப்பாட்டு அறிக்கையை பிரிட்டிஷ் கவுன்சில் வெளியிட்டது

May 18, 2026 - 01:11 PM -

0

மொழிசார்ந்த கல்வி முறைமைகளை வலியுறுத்தும் புதிய நிலைப்பாட்டு அறிக்கையை பிரிட்டிஷ் கவுன்சில் வெளியிட்டது

பிரிட்டிஷ் கவுன்சில் (British Council) ஆனது கல்வி கற்கும் மாணவர்களின் மொழிச் சூழலை நன்கு உணர்ந்து, அதனைப் பிரதிபலிக்கும் வகையிலும், உள்ளடக்கிய, சமமான மற்றும் பயனுள்ள கல்வியை ஆதரிக்கும் வகையிலும், மொழி-சார்ந்த கல்வி முறைமைகளை உருவாக்க, ஒரு புதிய உலகளாவிய நிலைப்பாட்டு அறிக்கையை வெளியிட்டுள்ளது. 

உலகெங்கிலும் உள்ள பல கல்வி முறைமைகளில், பாடசாலையில் பயன்படுத்தப்படும் மொழி, வீட்டில் பேசப்படும் மொழியிலிருந்து வேறுபட்டதாக இருக்கும். பன்மொழிச் சூழலில் மாணவர்கள் கல்வி கற்கிறார்கள். ஆங்கிலக் கல்வி, இடப்பெயர்வு மற்றும் வாய்ப்புகளில் ஒரு முக்கிய உலகளாவிய பங்கைத் தொடர்ந்து வகித்து வரும் வேளையில், ஒவ்வொரு நாட்டிற்கும் பொருந்தக்கூடிய ஒரே ஒரு கல்வி மொழி மாதிரி இல்லை என்று பிரிட்டிஷ் கவுன்சிலின் நிலைப்பாடு வலியுறுத்துகிறது. கல்வி கற்பிக்கும் மொழியைத் தீர்மானிக்கும்போது, அந்தந்த இடத்தின் சூழல் மற்றும் ஆதாரங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். அதாவது, வெறும் கொள்கை முடிவுகளைத் திணிக்காமல், அந்த இடத்தின் வரலாறு, பொருளாதாரம், அரசியல் மற்றும் சமூக சூழலைப் புரிந்து கொண்டு, கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் கல்வியாளர்கள் அந்த இடத்திலேயே முடிவுகளை எடுக்க வேண்டும் என்று பிரிட்டிஷ் கவுன்சில் வலியுறுத்துகிறது. 

கல்வி முறைமையானது மொழித்திறனை மையமாகக் கொண்டு செயல்படுதல் என்பது இந்த நிலையின் முக்கிய அம்சமாகும். அதாவது, கற்றலில் மொழியை ஒரு முக்கிய காரணியாக அங்கீகரித்து, கல்விச் சூழல் முழுவதும் மொழிக்கான முக்கியத்துவத்தை ஒருங்கிணைக்கும் கல்வி முறைமை ஆகும். இது கொள்கை உருவாக்கம், பாடத்திட்ட வடிவமைப்பு, கற்பித்தல் நடைமுறைகள், கற்றல் பொருட்கள், மதிப்பீடு, மற்றும் கற்பித்தல் மற்றும் ஆசிரியர் கல்வி ஆகியவற்றை உள்ளடக்கியது. வெற்றிகரமான மொழிக் கொள்கை என்பது கற்பித்தலுக்கு எந்த மொழி தேர்ந்தெடுக்கப்படுகிறது என்பதைப் பற்றியது மட்டுமல்ல என்பதை இந்த நிலைப்பாடு வலியுறுத்துகிறது. மாறாக, எந்தவொரு அணுகுமுறையின் வெற்றியும், கல்வி முறைமைகள் கற்கும் செயல்முறை சிறந்து விளங்கத் தேவையான சூழலை வழங்குகிறதா என்பதைப் பொறுத்தே அமைகிறது. கல்வி முறைமைகள் கற்றலை எந்த அளவிற்கு சிறப்பாக ஆதரிக்கின்றன என்பதே மிக முக்கியமானது. 

ஆங்கிலம் பயிற்று மொழியாக இருக்கும் இடங்களில், பாடத்திட்டத்தை புரிந்துகொள்வதற்குத் தேவையான ஆங்கில மொழித் திறனை மாணவர்கள் வளர்ப்பதை உறுதி செய்வதோடு, அவர்களுக்குப் பரிச்சயமான மொழிகளில் (தாய்மொழி) உள்ள அடித்தளத்தையும் பலப்படுத்துவது, வலுவான ஆங்கிலப் பாடப் பிரிவை உறுதி செய்வதை உள்ளடக்கியது. இது மொழி வளர்ச்சிக்கு ஏற்றவாறு தகுந்த மதிப்பீடுகளையும், அணுகக்கூடிய கற்பித்தல் பொருட்களையும், மொழி ஆதரவு கொண்ட கற்பித்தல் முறைகளுடன் பயிற்சி பெற்ற ஆசிரியர்களை உட்படுத்துகிறது. 

பல்வேறு கல்வி முறைமைகளில் ஆங்கிலத்தைக் கற்பித்தல், கற்றல் மற்றும் ஆங்கிலம் வழியாகக் கற்றல் குறித்த ஆராய்ச்சிகளை ஆய்வு செய்து, பிரிட்டிஷ் கவுன்சில் நடத்திய விரிவான உலகளாவிய ஆய்வறிக்கை மதிப்பாய்வின் அடிப்படையில் இந்த நிலைப்பாட்டு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வானது, ஆசிரியர் திறன், முறைமையின் திறன், மற்றும் மொழி கொள்கைகள் உள்ளூர் மொழி மற்றும் கலாசார சூழலுடன் எவ்வளவு இணங்குகின்றன போன்ற காரணிகளைப் பொறுத்து, முடிவுகள் பரவலாக மாறுபடுகின்றன என்பதை எடுத்துக்காட்டுகிறது. முறையாகத் திட்டமிடப்படாத ஆங்கில வழிக் கல்வி மாற்றத்தினால் ஏற்படும் அபாயங்களை இந்த ஆதாரம் சுட்டிக்காட்டுகிறது. மேலும், நேர்மறையான கற்றல் முடிவுகளை உறுதி செய்வதற்காக, நீண்ட காலத் திட்டமிடல், ஆசிரியர் மேம்பாடு மற்றும் வள முதலீட்டின் முக்கியத்துவத்தையும் இது வலியுறுத்துகிறது. 

இந்த அறிமுகம் தொடர்பாக பிரிட்டிஷ் கவுன்சிலின் ஆங்கிலம் மற்றும் பாடசாலைக் கல்வி பணிப்பாளர் மைக்கேல் கொன்னலி தெரிவிக்கையில்: 

“மொழியே கற்றலின் மையமாக உள்ளது. கல்வி அமைப்புகள் கற்றலாளர்களின் மொழிசார் உண்மைகளை அங்கீகரித்து அதற்கு ஏற்ப செயல்படும் போது, அவை மேலும் உட்சேர்க்கைமிக்க வகுப்பறைகளையும் கற்றலுக்கான சிறந்த சூழல்களையும் உருவாக்குகின்றன. மாணவர்கள் வெற்றி பெறும் திறனைத் தடுக்காமல் ஆதரிக்கும் வகையில் மொழிக் கொள்கைகள் அமைய, ஆதாரபூர்வமான தீர்மானங்களும் முழு அமைப்பளவிலான திட்டமிடலும் மிகவும் முக்கியமானவை என்பதை எங்களின் நிலைப்பாடு வலியுறுத்துகிறது.” 

கல்விக் கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் கல்வித் தலைவர்களை, மொழி- சார்ந்த அணுகுமுறைகளை பின்பற்றுமாறு ஊக்குவிப்பதன் மூலம், கற்பித்தல் முடிவுகளை மேம்படுத்தி, அனைத்து கற்பவர்களுக்கும் வாய்ப்புகளை விரிவுபடுத்தும் கொள்கைகள் மற்றும் நடைமுறைகளை வடிவமைப்பதில் கல்வி முறைமைகளுக்கு ஆதரவளிப்பதை பிரிட்டிஷ் கவுன்சில் நோக்கமாகக் கொண்டுள்ளது.கல்வி அமைச்சுகள், கல்வியாளர்கள் மற்றும் சர்வதேசப் பங்காளிகள், மொழிக் கல்வியில் மிகவும் அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் பயனுள்ள அணுகுமுறைகளை உருவாக்க, இந்த புதிய கொள்கை நிலைப்பாட்டு அறிக்கை மற்றும் அதனுடன் இணைந்த அறிவுசார் மதிப்பாய்வு ஒரு ஆதாரமாகச் செயல்படும். 

நிலைப்பாட்டு அறிக்கைக்கான இணைப்பு: https://www.teachingenglish.org.uk/publications/case-studies-insights-and-research/language-responsive-education 

பிரிட்டிஷ் கவுன்சில் பற்றி 

பிரிட்டிஷ் கவுன்சில் என்பது கலாச்சார உறவுகள் மற்றும் கல்வி வாய்ப்புகளுக்கான ஐக்கிய ராச்சியத்தின் சர்வதேச அமைப்பாகும். ஐக்கிய ராச்சியத்தில் உள்ள மக்களுக்கும் உலகெங்கிலும் உள்ள நாடுகளுக்கும் இடையே தொடர்புகள், புரிதல் மற்றும் நம்பிக்கையை வளர்ப்பதன் மூலம் நாங்கள் அமைதி மற்றும் செழிப்பை ஆதரிக்கிறோம். கலை மற்றும் கலாச்சாரம், கல்வி மற்றும் ஆங்கில மொழி ஆகியவற்றில் நாங்கள் செய்யும் பணிகள் மூலம் இதைச் செய்கிறோம். நாங்கள் 200-க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் உள்ள மக்களுடன் இணைந்து பணியாற்றுகிறோம், மேலும் 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் களத்தில் செயல்படுகிறோம். 2024–25- ஆம் ஆண்டில் நாங்கள் 599 மில்லியன் மக்களைச் சென்றடைந்தோம். 

www.britishcouncil.org 

மேலதிக விசாரணைகளுக்குத் தொடர்பு கொள்ளவும் vanessa.komiliades@britishcouncil.org

Comments
0

MOST READ

காணொளி
முள்ளிவாய்க்காலில் கண்ணீருடன் அஞ்சலி செலுத்திய உறவுகள்!

முள்ளிவாய்க்காலில் கண்ணீருடன் அஞ்சலி செலுத்திய உறவுகள்!

மட்டக்களப்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு!

மட்டக்களப்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு!

மன்னாரில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!

மன்னாரில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!

புனித ஹஜ் பெருநாள் மே - 28!

புனித ஹஜ் பெருநாள் மே - 28!

கஞ்சி வழங்கும் நிகழ்வு!

கஞ்சி வழங்கும் நிகழ்வு!

வடக்கில் ஊழல் அதிகாரிகளால் முறையாற்ற ஆசிரிய இடமாற்றம்!

வடக்கில் ஊழல் அதிகாரிகளால் முறையாற்ற ஆசிரிய இடமாற்றம்!

கடும் மழை ஹட்டன் வலய பாடசாலைகளுக்கு விடுமுறை!

கடும் மழை ஹட்டன் வலய பாடசாலைகளுக்கு விடுமுறை!

அனைவருக்கும் சட்டம் சமன்!

அனைவருக்கும் சட்டம் சமன்!

இந்த நோய் அறிகுறிகள் இருந்தால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்!

இந்த நோய் அறிகுறிகள் இருந்தால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்!

நுவரெலியாவில் கடும் மழை மற்றும் அடர்ந்த பனிமூட்டம்!

நுவரெலியாவில் கடும் மழை மற்றும் அடர்ந்த பனிமூட்டம்!

title