Header Logo
Mogo Academy

வணிகம்
மன்னார்-முள்ளிக்குளம் 220kV இரட்டைச் சுற்று மின்சார விநியோக மார்க்க திட்டத்திற்கான ஒப்பந்தத்தில் Jyoti Structures மற்றும் Hayleys Fentons கைச்சாத்து

May 18, 2026 - 03:23 PM -

0

மன்னார்-முள்ளிக்குளம் 220kV இரட்டைச் சுற்று மின்சார விநியோக மார்க்க திட்டத்திற்கான ஒப்பந்தத்தில் Jyoti Structures மற்றும் Hayleys Fentons கைச்சாத்து
Mobitel inner

இந்தியாவின் Jyoti Structures Limited நிறுவனத்துடன் முதன்மைப் பங்காளராக, இலங்கையின் முதற்தர MEP மற்றும் சூரியசக்தி EPC ஒப்பந்ததாரரான Hayleys Fentons Limited இணைந்து, மன்னார்-முள்ளிக்குளம் 220kV இரட்டைச் சுற்று மின்சார விநியோக மார்க்கத்தை (Transmission Line) அமைப்பதற்கான ஒரு கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளது. முள்ளிக்குளம் காற்றாலை மின்சார விநியோகத் திட்டத்தின் கீழ், புதிதாக நிறுவப்பட்ட தேசிய மின் விநியோக வலையமைப்பு சேவை வழங்குநர் (தனியார்) லிமிடெட் (National Transmission Network Service Provider (Private) Limited - NTNSP) இனால் வழங்கப்பட்ட முதலாவது ஒப்பந்தம் இதுவாகும். முள்ளிக்குளம் காற்றாலை மின்னுற்பத்தி திட்டங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை தேசிய மின் கட்டமைப்பிற்குள் கொண்டு செல்வதற்கு அவசியமான முக்கியமான மின்சார விநியோக உட்கட்டமைப்புகளை மேம்படுத்துவதை இந்தத் திட்டம் உள்ளடக்கியுள்ளது. இது நிறைவடைந்தவுடன், தேசிய மின்சார கட்டமைப்பின் நம்பகத்தன்மையை மேம்படுத்துவதிலும், புதுப்பிக்கத்தக்க வலுசக்தி இணைப்பை சாத்தியப்படுத்துவதிலும், இலங்கையின் நீண்டகால வலுசக்தி நிலைபேறான தன்மை இலக்குகளுக்கு ஆதரவளிப்பதிலும் இந்த மின்சார விநியோக மார்க்கம் முக்கிய பங்கு வகிக்கும். 

இது குறித்து Jyoti Structures Limited நிறுவனத்தின் பிரதம செயற்பாட்டு அதிகாரி அமித் தத்தா தெரிவிக்கையில், “இந்த மைல்கல் திட்டத்தில் Hayleys Fentons நிறுவனத்துடன் இணைந்திருப்பதில் ஜோதி ஸ்ட்ரக்சர்ஸ் பெருமிதம் கொள்கிறது. உயர் அழுத்த மின் விநியோக உட்கட்டமைப்பு வசதி திட்டத்தில் நாம் கொண்டுள்ள விரிவான நிபுணத்துவத்துடன், இலங்கையின் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி தொடர்பான அபிலாஷைகளுக்கு ஆதரவளிக்கவும், இப்பிராந்தியத்தில் மின் விநியோக விசேடத்துவத்துடன் ஒரு வலுவான அளவுகோலை அமைக்கும் நெகிழ்வான திறன் கொண்ட மின்சார விநியோக வலையமைப்பை வழங்க நாம் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.” என்றார். 

இந்த ஒப்பந்தம் குறித்து Hayleys Fentons Limited நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் ஹசித் பிரேமதிலக கருத்துத் தெரிவிக்கையில், 

இந்த ஒப்பந்தம் இலங்கையின் வலுசக்தியானது, எதிர்காலத்தின் மீதான நம்பிக்கையின் ஒரு பிரகடனமாகும். மன்னார்-முள்ளிக்குளம் 220kV மின் விநியோக மார்க்கமானது வடக்கின் காற்றாலை வலுசக்தி திறனை எமது தேசிய மின் கட்டமைப்பிற்குள் கொண்டு செல்லும் ஒரு முக்கிய நாடியாகும். மன்னாரில் எமது சொந்த 50MW காற்றாலை மின்னுற்பத்தித் திட்டத்தை இதற்கு இணையாக நாம் முன்னெடுத்து வரும் நிலையில், இலங்கையின் தூய வலுசக்தி மாற்றத்திற்கு பல வழிகளில் பங்களிப்பதையிட்டு நாம் பெருமிதம் கொள்கிறோம். இந்த மைல்கல்லானது அந்த தொலைநோக்குப் பார்வையை யதார்த்தத்தை நோக்கி நெருக்கமாகக் கொண்டு செல்கிறது. என்றார். 

Hayleys Solar நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளரும் அதன் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான ரொஷேன் பெரேரா கருத்து வெளியிடுகையில், உட்கட்டமைப்புத் துறையில் நாம் விரிவடைந்து வரும் நிலையில், Hayleys Fentons நிறுவனத்திற்கு இது ஒரு புதிய யுகத்தின் ஆரம்பத்தைக் குறிக்கிறது. இத்திட்டமானது நிறுவனத்தின் புதிய வளர்ச்சித் திறனை வெளிப்படுத்துவதற்கான ஒரு முக்கிய வாய்ப்பாக அமைவதுடன், மின்சார விநியோக மார்க்கத் திட்டங்களில் எமது பொறியியல் குழுவினருக்கு ஒரு சிறந்த அனுபவத்தையும் உருவாக்கும். இதன் மூலம் எமது பொறியியலாளர்கள் இந்தத் துறையில் விசேட நிபுணத்துவத்தைப் பெற முடிவதுடன், எதிர்காலத்தில் இது போன்ற பாரிய உட்கட்டமைப்புத் திட்டங்களை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு நிறுவனத்தைத் தயார்படுத்தவும் இது உதவும். என்றார். 

இந்தக் கருத்திற்கு வலுச் சேர்க்கும் வகையில் NTNSP நிறுவனத்தின் தலைவர் நுசித் குமாரதுங்க கருத்து வெளியிடுகையில், NTNSP நிறுவனத்தினால் பொறுப்பேற்கப்பட்ட ஆரம்பத் திட்டம் எனும் வகையில், இலங்கையின் மின்சார கட்டமைப்பு மேம்பாட்டு மூலோபாயத் திட்டத்தில் இந்த முயற்சியானது ஒரு ஒருங்கிணைந்த அங்கமாகும். இதில் ஈடுபட்டுள்ள அனைத்து பங்குதாரர்களுக்கும் ஆதரவளிப்பதற்கும், மின்சார விநியோக மார்க்கத் திட்டத்தை வெற்றிகரமாகவும் உரிய காலத்திலும் நிறைவு செய்வதை உறுதி செய்வதற்கும் நாம் சிறந்த தயார் நிலையில் இருக்கிறோம். என்றார். 

மன்னார்-முள்ளிக்குளம் 220kV இரட்டைச் சுற்று மின்சார விநியோக மார்க்கத் திட்டமானது Hayleys Fentons Limited நிறுவனத்தின் விரிவடைந்து வரும் வலுசக்தி உட்கட்டமைப்பு பிரிவில் மற்றுமொரு முக்கிய இணைவாகும். இது பொறியியல் விசேடத்துவம் மற்றும் எதிர்காலத்திற்கு ஏற்ற தயார்நிலை கொண்ட உட்கட்டமைப்பு தீர்வுகள் மூலம் நிலைபேறான வகையில் தேசிய வளர்ச்சியை உறுதிப்படுத்துவதிலான, இந்நிறுவனத்தின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை எடுத்துக் காட்டுகிறது. 

Hayleys Fentons Limited பற்றி 

1919 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட Hayleys Fentons Limited நிறுவனம் இலங்கையின் ஆரம்ப பொறியியல் நிறுவனங்களில் ஒன்றாகும். நாட்டின் முதற்தர சூரியசக்தி EPC மற்றும் MEP ஒப்பந்ததாரர் எனும் வகையில், இந்நிறுவனம் 100 ஆண்டுகளுக்கும் மேலான பொறியியல் விசேடத்துவத்தை கொண்டுள்ளது. சூரிய மின்சக்தி, காற்றாலை, பொதுப் பயன்பாட்டு திட்டங்கள் (Utility Projects), போக்குவரத்துத் தீர்வுகள், ICT கட்டமைப்புகள், மின்சாரம் மற்றும் மின்விளக்குகள், தீயணைப்பு பாதுகாப்பு, குளிரூட்டல் மற்றும் காற்றோட்டம், நீர் விநியோகம் மற்றும் எரிவாயு, பாதுகாப்பு மற்றும் தொடர்பாடல், ஒலி-ஒளி ஒருங்கிணைப்பு, UPS மற்றும் Battery Backup, Facilities Management, கட்டடக்கலை வரைபடங்கள் மற்றும் 3D காட்சிப்படுத்தல், தொழில்துறை உபகரணங்களின் வணிகம், நீர் மின்சாரத் தீர்வுகள் போன்ற விடயங்களை நிறுவனம் முன்னெடுத்து வருகிறது. புத்தாக்கம் மற்றும் ஒப்பிட முடியாத வாடிக்கையாளர் சேவை தொடர்பில் புகழ்பெற்ற இந்நிறுவனத்தின் முக்கிய நோக்கமானது, ஒரு சிறந்த வாழ்க்கைக்காக நிலைபேறான மற்றும் புத்தாக்கமான பொறியியல் சேவைகளை வழங்குவதாகும்.


MOST READ

காணொளி
நுவரெலியாவில் கடும் பனிமூட்டம்!

நுவரெலியாவில் கடும் பனிமூட்டம்!

உள நலம் என்பது மிக முக்கியமான ஒன்றாகும்!

உள நலம் என்பது மிக முக்கியமான ஒன்றாகும்!

மட்டக்களப்பு தற்காலிக பாலம் இன்று திறப்பு!

மட்டக்களப்பு தற்காலிக பாலம் இன்று திறப்பு!

மீனவர்கள் தினமும் பல சவால்களை எதிர்கொள்கின்றனர்!

மீனவர்கள் தினமும் பல சவால்களை எதிர்கொள்கின்றனர்!

கதிர்காமப் பாதயாத்திரை ஆரம்பம்!

கதிர்காமப் பாதயாத்திரை ஆரம்பம்!

தமிழீழ வைப்பகத்தில் அடகு வைத்த  நகைகளை மக்களிடம் மீள ஒப்படையுங்கள்!

தமிழீழ வைப்பகத்தில் அடகு வைத்த நகைகளை மக்களிடம் மீள ஒப்படையுங்கள்!

நீதிமன்ற அனுமதியின்றி சொத்துக்கள் முடக்கமா?

நீதிமன்ற அனுமதியின்றி சொத்துக்கள் முடக்கமா?

நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகளுக்காக 23 நாட்கள் சிறைவாசம் இருந்துள்ளேன்!

நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகளுக்காக 23 நாட்கள் சிறைவாசம் இருந்துள்ளேன்!

சம்பிரதாயத்தை மீறி உடையணிந்து வந்தாரா அர்ச்சுனா எம்.பி? சபையில் சலசலப்பு

சம்பிரதாயத்தை மீறி உடையணிந்து வந்தாரா அர்ச்சுனா எம்.பி? சபையில் சலசலப்பு

யாழ். பல்கலைக்கழக முன்றலில் பாலியல் வன்முறைக்கு எதிராகப் போராட்டம்!

யாழ். பல்கலைக்கழக முன்றலில் பாலியல் வன்முறைக்கு எதிராகப் போராட்டம்!

Mobitel Upahara