May 19, 2026 - 11:21 AM -
0
இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் தேசிய நெடுஞ்சாலையில் வேனும் லொறியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட கோர விபத்தில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
நேற்று (18) மாலை, உத்தரப் பிரதேச மாநிலம், லக்கிம்பூரிலிருந்து சிசையா நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த வேன், ஊஞ்ச்காவ் மற்றும் பரேஹாத் கிராமங்களுக்கு இடையே சென்றபோது, எதிரே வந்த லொறியுடன் பலமாக மோதியது.
இந்த விபத்தில் வேனில் பயணித்த வேன் சாரதி மற்றும் 9 பயணிகள் உட்பட மொத்தம் 10 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்க்கு இந்திய பிரதமர் மோடி மற்றும் இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும், பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபா நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.
