Header Logo

வணிகம்
ஸ்ரீ லங்கா இன்ஷூரன்ஸ் கோப்பரேஷன் ஜெனரல் லிமிடெட் நிறுவனம் தனது முதலாவது இடத்தை வலுப்படுத்தியது

May 19, 2026 - 01:44 PM -

0

ஸ்ரீ லங்கா இன்ஷூரன்ஸ் கோப்பரேஷன் ஜெனரல் லிமிடெட் நிறுவனம் தனது முதலாவது இடத்தை வலுப்படுத்தியது

ஸ்ரீ லங்கா இன்ஷூரன்ஸ் கோப்பரேஷன் ஜெனரல் லிமிடெட் நிறுவனம் ரூ.30 பில்லியன் மொத்த எழுதப்பட்ட கட்டுப் பணம் என்ற இலக்கை விஞ்சிய இலங்கையின் முதலாவது பொதுக் காப்புறுதி தாரராக வரலாறு படைத்துள்ளது. இது காப்புறுதித் துறைக்குப் புதியதொரு வரலாற்றுச் சாதனையை உருவாக்கியிருப்பதுடன், ஸ்ரீ லங்கா இன்ஷூரன்ஸ் கோப்பரேஷன் ஜெனரல் லிமிடெட் நிறுவனத்தின் ஒப்பிட முடியாத பலம், நம்பகத் தன்மை மற்றும் வாடிக்கையாளர்களின் நம்பிக்கை என்பவற்றை பறைசாற்றியுள்ளது. 

வரலாற்று சாதனையான இந்த அடைவுக்கு அப்பால், 2024ஆம் ஆண்டு முதல் இலங்கையின் பொதுகாப்புறுதித் துறை சந்தையின் முதல்வன் என்ற தனது நிலையை ஸ்ரீ லங்கா இன்ஷூரன்ஸ் கோப்பரேஷன் ஜெனரல் லிமிடெட் நிறுவனம் மீண்டும் வலுப்படுத்தியுள்ளது. 2025ஆம் ஆண்டிற்கான சிறப்பான நிதி செயல்திறன் அளவுகோல்களை பதிவு செய்துள்ள இந்த நிறுவனம், போட்டியாளர்களை விட தனது முன்னிலையை மேலும் விரிவுபடுத்தி, துறையில் தனது ஆதிக்கத்தை உறுதிப்படுத்தியுள்ளது. 

மோட்டார் காப்புறுதித் துறையில் எதிர்ப்பு இல்லாத முன்னணி நிறுவனமாகத் திகழும் ஸ்ரீ லங்கா இன்ஷூரன்ஸ் கோப்பரேஷன் ஜெனரல் லிமிடெட் நிறுவனம், பொதுக் காப்புறுதியை நாடு முழுவதிலும் கொண்டு சேர்ப்பதற்கான சேவையை விஸ்தரித்துள்ளது. தேசிய காப்புறுதிதாரர் என்ற வகையில் தனிநபர்கள், குடும்பங்கள் மற்றும் வணிகங்களுக்குப் பாதுகாப்பு மற்றும் மன நிம்மதியை வழங்குவதற்கான பொறுப்பை ஸ்ரீ லங்கா இன்ஷூரன்ஸ் கோப்பரேஷன் ஜெனரல் லிமிடெட் நிறுவனம் முன்னெடுக்கின்றது. 

மோட்டார், தனிப்பட்ட விபத்துக் காப்புறுதி, வீட்டுப் பாதுகாப்பு, பயணக் காப்புறுதி மற்றும் மருத்துவ அவசர தீர்வுகள் போன்ற பரந்துபட்ட சேவைகளை உள்ளடக்கியதாக, ஒவ்வொரு இலங்கைப் பிரஜைக்கும் மலிவான மற்றும் எளிதில் அணுகக்கூடிய காப்புறுதித் தீர்வுகளை வழங்குவதில் உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது. 

அரசாங்க நிறுவனங்களுடன் பங்குடமையை ஏற்படுத்தி உருவாக்கியுள்ள அதன் முன்னணி நிகழ்ச்சித் திட்டமான சுரக்ஷா திட்டத்தின் ஊடாக சேவைகள் குறைவாகக் கிடைக்கும் தரப்பினருக்கு தனது சேவைகளை விஸ்தரித்து ஸ்ரீ லங்கா இன்ஷூரன்ஸ் கோப்பரேஷன் ஜெனரல் லிமிடெட் நிறுவனம் தேசிய காப்புறுதிக்கான தெரிவு தான் என்பதை மேலும் உறுதிப்படுத்திவருகிறது. 

மேலும், இலங்கையில் A+ Fitch என்ற உயர்தர காப்புறுதித் தரப்படுத்தலைக் கொண்டுள்ள காப்புறுதி நிறுவனமாகவும் ஸ்ரீ லங்கா இன்ஷூரன்ஸ் கோப்பரேஷன் ஜெனரல் லிமிடெட் நிறுவனம் விளங்குகின்றது. அது மாத்திரமன்றி இந்நிறுவனம், Brand Finance இனால் மிகவும் மதிப்பைப் பெற்ற பொதுக் காப்புறுதி வர்த்தக நாமமாகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 

இலங்கை காப்பறுதித் கூட்டுத்தாபனத்தின் பாரம்பரியம் மற்றும் பலத்துடன் ஆபத்திலிருந்து பாதுகாப்பதற்கான தேசத்தின் முதலாவது தெரிவாக ஸ்ரீ லங்கா இன்ஷூரன்ஸ் கோப்பரேஷன் ஜெனரல் லிமிடெட் நிறுவனம் தொடர்ந்தும் காணப்படுவதுடன், தொடர்ச்சியான வளர்ச்சி மற்றும் புதுமைகளுக்குத் தயாராகி, நாட்டின் மிகவும் நம்பகமான காப்புறுதிதாரர் என்ற தனது நற்பெயரை உறுதிப்படுத்துகிறது. 

புத்தாக்கம், வாடிக்கையாளர்களுக்கே முதலில் மதிப்பு மற்றும் தேசிய முன்னேற்றம் என்பவற்றில் இந்நிறுவனம் கொண்டுள்ள அர்ப்பணிப்பு இந்த சாதனைகளின் மூலம் வெளிக்கொணரப்படுகின்றது. முன்னணியான பாரம்பரியம் மற்றும் எதிர்கால நோக்கையும் தாக்கியதாக இந்நிறுவனம் அனைத்து இலங்கை மக்களுக்கும் நம்பிக்கை, வசதி மற்றும் அக்கறையைத் தொடர்ந்தும் வழங்கி வருகின்றது. 

சேவைகள் பொதுமக்களைச் சென்றடைய வேண்டும் என்பதில் கொண்டிரக்கும் தனது உறுதிப்பாட்டை மேம்படுத்தும் வகையில், ஏப்ரல் 22ஆம் திகதி நாடு முழுவதிலும் நகரங்களில் பிரசார நடவடிக்கையை மேற்கொண்டதுடன், நாடு முழுவதிலும் உள்ள 142 கிளைகளிலும் ஒரே நேரத்தில் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. குழுக்கள் நேரடியாக மக்களைச் சந்தித்து வீட்டுக்கான பாதுகாப்பு, அவசர மருத்துவ தேவைக்கான காப்புறுதி, பாதுகாப்பான பயணம் அல்லது தனிப்பட்ட விபத்தைத் தவிர்ப்பது போன்றவற்றின் ஊடாக காப்புறுதிதாரர்கள் வழங்கும் மன நிம்மதி குறித்து விளக்கமளித்தன. 

காப்புறுதி என்பது ஆடம்பரமான விடயம் அல்ல மாறாக அது அவசியம் என்பதையும், அது வழங்கும் பாதுகாப்பை ஒவ்வொரு இலங்கை மக்களும் அணுகும் உரிமை பெற்றவர்கள் என்பதையும் இந்நிறுவனம் உறுதியாக நம்புகிறது.

Comments
0

MOST READ

காணொளி
கச்சத்தீவை வழங்க நாங்கள் தயாராக இல்லை!

கச்சத்தீவை வழங்க நாங்கள் தயாராக இல்லை!

எங்களுடைய இனத்தை விற்காதே!

எங்களுடைய இனத்தை விற்காதே!

எங்களது வலியை புரிந்த விஜய் அண்ணாவுக்கு நன்றி!

எங்களது வலியை புரிந்த விஜய் அண்ணாவுக்கு நன்றி!

அந்நிய செலாவணி மீது அதிக கவனம் செலுத்த வேண்டும்!

அந்நிய செலாவணி மீது அதிக கவனம் செலுத்த வேண்டும்!

முள்ளிவாய்க்காலில் கண்ணீருடன் அஞ்சலி செலுத்திய உறவுகள்!

முள்ளிவாய்க்காலில் கண்ணீருடன் அஞ்சலி செலுத்திய உறவுகள்!

மட்டக்களப்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு!

மட்டக்களப்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு!

மன்னாரில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!

மன்னாரில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!

புனித ஹஜ் பெருநாள் மே - 28!

புனித ஹஜ் பெருநாள் மே - 28!

கஞ்சி வழங்கும் நிகழ்வு!

கஞ்சி வழங்கும் நிகழ்வு!

வடக்கில் ஊழல் அதிகாரிகளால் முறையாற்ற ஆசிரிய இடமாற்றம்!

வடக்கில் ஊழல் அதிகாரிகளால் முறையாற்ற ஆசிரிய இடமாற்றம்!

title