Header Logo

வடக்கு
இந்திய மீனவர்கள் எமது கடல் வளத்தை சுரண்டாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்!

May 19, 2026 - 04:25 PM -

0

இந்திய மீனவர்கள் எமது கடல் வளத்தை சுரண்டாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்!

புதிய தமிழக முதலமைச்சர் யோசப் விஜய் இந்திய மீனவர்கள் எமது கடல் வளத்தை சுரண்டாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க சம்மேளனங்களின் தலைவர் மரியதாஸ் தெரிவித்தார். 

யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க சம்மேளனங்களின் ஊடக சந்திப்பு யாழ்ப்பாணத்திலுள்ள அலுவலகத்தில் இன்று (19) இடம்பெற்றது. இதன்போதே மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார். 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 

தமிழ்நாட்டின் புதிய அமைச்சராக பதவியேற்றுள்ள ஜோசப் விஜய்க்கு மீனவர் சங்கத்தின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு அவரிடம் வினையமாக சில விடயங்களை முன்வைக்க விரும்புகிறோம். 

தமிழ்நாட்டில் இருந்து எல்லை தாண்டும் இந்திய மீனவர்களால் இலங்கை வடபகுதி மீனவர்கள் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். 

எமது கடல் வளத்தை அழிப்பதோடு எமது மீனவர்களின் பல கோடி பெருமதியான பெறுமதியான வலைகளையும் நாசம் செய்து விட்டார்கள். 

தற்போது மீன்பிடி தடைக்காலம் இடம்பெற்று கொண்டிருக்கின்ற நிலையில் எதிர்வரும் 15 ஆம் திகதியுடன் தடைகாலம் நிறைவடைவதாக அறிகிறோம். 

ஆகவே எமது கடற் பகுதிக்குள் அத்துமீறி உள்நுளையும் இந்திய மீனவர்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

--

Comments
0

MOST READ

காணொளி
கச்சத்தீவை வழங்க நாங்கள் தயாராக இல்லை!

கச்சத்தீவை வழங்க நாங்கள் தயாராக இல்லை!

எங்களுடைய இனத்தை விற்காதே!

எங்களுடைய இனத்தை விற்காதே!

எங்களது வலியை புரிந்த விஜய் அண்ணாவுக்கு நன்றி!

எங்களது வலியை புரிந்த விஜய் அண்ணாவுக்கு நன்றி!

அந்நிய செலாவணி மீது அதிக கவனம் செலுத்த வேண்டும்!

அந்நிய செலாவணி மீது அதிக கவனம் செலுத்த வேண்டும்!

முள்ளிவாய்க்காலில் கண்ணீருடன் அஞ்சலி செலுத்திய உறவுகள்!

முள்ளிவாய்க்காலில் கண்ணீருடன் அஞ்சலி செலுத்திய உறவுகள்!

மட்டக்களப்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு!

மட்டக்களப்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு!

மன்னாரில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!

மன்னாரில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!

புனித ஹஜ் பெருநாள் மே - 28!

புனித ஹஜ் பெருநாள் மே - 28!

கஞ்சி வழங்கும் நிகழ்வு!

கஞ்சி வழங்கும் நிகழ்வு!

வடக்கில் ஊழல் அதிகாரிகளால் முறையாற்ற ஆசிரிய இடமாற்றம்!

வடக்கில் ஊழல் அதிகாரிகளால் முறையாற்ற ஆசிரிய இடமாற்றம்!

title