Header Logo
Mogo Academy

சினிமா
ரிலீசுக்கு முன்பே வசூல் வேட்டையில் 'திரிஷ்யம் 3'!

May 19, 2026 - 04:58 PM -

0

ரிலீசுக்கு முன்பே வசூல் வேட்டையில் 'திரிஷ்யம் 3'!
Mobitel inner

க்ரைம் த்ரில்லர் மற்றும் சஸ்பென்ஸ் படங்களை இயக்குவதில் சிறந்தவரான மலையாள இயக்குநர் ஜீத்து ஜோசப்பில் இயக்கத்தில் மோகன்லால் - மீனா நடிப்பில் வெளியான திரிஷ்யம் வெற்றிப் படமாக அமைந்தது. 

இப்படத்தை இந்தி தயாரிப்பு நிறுவனங்களான பென் ஸ்டுடியோஸ் மற்றும் பனோரமா ஸ்டுடியோஸ் இணைந்து படத்தை தயாரித்திருந்தது. 

இப்படம் மாபெரும் வெற்றியை கொடுத்ததால், இதே கூட்டணியில் திரிஷ்யம் 2 உருவானது. இதுவும் மாபெரும் வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து திரிஷ்யம் 3 இதே கூட்டணியால் உருவாகியுள்ளது. இப்படம் நாளை மறுதினம் (21) ரிலீஸ் ஆக இருக்கிறது. இப்படத்தை தமிழ், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்படுகிறது. 

இதற்கிடையில் இப்படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி மக்களிடமும் ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. மேலும் மக்களிடம் இந்தப்படத்தை பற்றிய ஆர்வமும் அதிகரித்து வருகிறது. 

"திரிஷ்யம் 3" திரைப்படம் ரிலீசுக்கு முன்பே உலகளவில் பாக்ஸ் ஆபீஸில் அசுர வேட்டை நடத்தி வருகிறது. அதன்படி, இந்த படம் அட்வான்ஸ் புக்கிங் மூலமாக மட்டுமே 14 கோடி ரூபாவுக்கு மேல் வசூலித்து சாதனை படைத்து வருகிறது. 

இந்த படத்தின் முதல் பாகம் 2013 ஆம் ஆண்டு வெளியாகி 75 கோடி ரூபா வசூலை பெற்றது. இந்த படத்தின் கதையை வைத்து தமிழில் கமல் மற்றும் கௌதமி நடிப்பில் 'பாபநாசம்' என்ற தலைப்பில் ரீமேக் செய்யப்பட்டு மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. 

அதனை தொடர்ந்து 2021 ஆம் ஆண்டு 'திரிஷ்யம் 2' திரைப்பம் நேரடியாக ஓடிடியில் வெளியாகி முதல் பாகத்தை போலவே நல்ல வரவேற்பை பெற்றது. 

திரிஷ்யம் 3 தான் கடைசி பகுதி. இதற்கு பிறகு தொடர்ச்சி வராது என படக்குழு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

MOST READ

காணொளி
மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

பதவி விலகும் கலாசாரம் இல்லை - ப.சத்தியலிங்கம்

பதவி விலகும் கலாசாரம் இல்லை - ப.சத்தியலிங்கம்

மழை அங்கியுடன் சிறுவனின் எலும்புக்கூடு மீட்பு!

மழை அங்கியுடன் சிறுவனின் எலும்புக்கூடு மீட்பு!

யாழ். நூலகத்தை ஏரித்தவர்கள் ஐக்கிய தேசிய கட்சியாகும்!

யாழ். நூலகத்தை ஏரித்தவர்கள் ஐக்கிய தேசிய கட்சியாகும்!

நீதி வழங்கப்பட்டதாக சரித்திரமும் இல்லை, வழங்குவதற்கான அறிகுறியும் இல்லை!

நீதி வழங்கப்பட்டதாக சரித்திரமும் இல்லை, வழங்குவதற்கான அறிகுறியும் இல்லை!

முஸ்லிம் மக்கள் ஜனாதிபதி மீது நம்பிக்கையை இழக்கவில்லை!

முஸ்லிம் மக்கள் ஜனாதிபதி மீது நம்பிக்கையை இழக்கவில்லை!

அடைக்கலநாதன் கோரிக்கை!

அடைக்கலநாதன் கோரிக்கை!

மக்கள் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!

மக்கள் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!

Mobitel Upahara