Header Logo

செய்திகள்
சாமர சம்பத்க்கு எதிரான வெளிநாட்டு பயணத்தடை தற்காலிகமாக நீக்கம்

May 19, 2026 - 05:46 PM -

0

சாமர சம்பத்க்கு எதிரான வெளிநாட்டு பயணத்தடை தற்காலிகமாக நீக்கம்

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மற்றொரு ஊழல் குற்றச்சாட்டு வழக்குடன் தொடர்புடைய வெளிநாட்டு பயணத்தடையைத் தற்காலிகமாக நீக்குவதற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (19) உத்தரவிட்டுள்ளது.

 

கொழும்பு தலைமை நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் இந்த வழக்கு இன்று எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

விசாரணைக்காக, வரும் மே 23 ஆம் திகதி முதல் ஜூன் 06 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் சீனாவுக்குப் பயணம் மேற்கொள்வதற்காக, தமக்கு விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டுப் பயணத்தடையை நீக்குமாறு சந்தேக நபரான சாமர சம்பத் தசநாயக்க தனது சட்டத்தரணிகள் ஊடாக கோரிக்கை விடுத்திருந்தார்.

 

அந்தக் கோரிக்கையை பரிசீலித்த நீதவான், குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் சந்தேக நபருக்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டுப் பயணத்தடையைத் தற்காலிகமாக நீக்குமாறு உத்தரவிட்டார்.

 

சாமர சம்பத் தசநாயக்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மற்றொரு வழக்கு நேற்று (18) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட போதும், அந்த வழக்குடன் தொடர்புடைய வெளிநாட்டுப் பயணத்தடையைத் தற்காலிகமாக நீக்குவதற்கும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments
0

MOST READ

காணொளி
கச்சத்தீவை வழங்க நாங்கள் தயாராக இல்லை!

கச்சத்தீவை வழங்க நாங்கள் தயாராக இல்லை!

எங்களுடைய இனத்தை விற்காதே!

எங்களுடைய இனத்தை விற்காதே!

எங்களது வலியை புரிந்த விஜய் அண்ணாவுக்கு நன்றி!

எங்களது வலியை புரிந்த விஜய் அண்ணாவுக்கு நன்றி!

அந்நிய செலாவணி மீது அதிக கவனம் செலுத்த வேண்டும்!

அந்நிய செலாவணி மீது அதிக கவனம் செலுத்த வேண்டும்!

முள்ளிவாய்க்காலில் கண்ணீருடன் அஞ்சலி செலுத்திய உறவுகள்!

முள்ளிவாய்க்காலில் கண்ணீருடன் அஞ்சலி செலுத்திய உறவுகள்!

மட்டக்களப்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு!

மட்டக்களப்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு!

மன்னாரில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!

மன்னாரில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!

புனித ஹஜ் பெருநாள் மே - 28!

புனித ஹஜ் பெருநாள் மே - 28!

கஞ்சி வழங்கும் நிகழ்வு!

கஞ்சி வழங்கும் நிகழ்வு!

வடக்கில் ஊழல் அதிகாரிகளால் முறையாற்ற ஆசிரிய இடமாற்றம்!

வடக்கில் ஊழல் அதிகாரிகளால் முறையாற்ற ஆசிரிய இடமாற்றம்!

title