Header Logo
Mogo Academy

வணிகம்
BAIC X55 வாகனத் தொகுதிகளை Chevron Lubricants Lanka நிறுவனத்திற்கு விநியோகித்த David Pieris Automobiles நிறுவனம்

May 19, 2026 - 06:15 PM -

0

BAIC X55 வாகனத் தொகுதிகளை Chevron Lubricants Lanka நிறுவனத்திற்கு விநியோகித்த David Pieris Automobiles நிறுவனம்
Mobitel inner

டேவிட் பீரிஸ் ஆட்டோமொபைல்ஸ் (பிரைவேட்) லிமிடட் (David Pieris Automobiles (Private) Limited - DPA) நிறுவனம், இலங்கையில் வலுவான ‘Caltex’ வர்த்தக நாமத்தை சந்தைப்படுத்தும் Chevron Lubricants Lanka PLC நிறுவனத்திற்கு எட்டு (08) BAIC X55 வாகனங்களை விநியோகித்ததன் மூலம் மற்றுமொரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது. 

இந்த விநியோகமானது, சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற வர்த்தக நாமங்களுக்குத் தனது தயாரிப்புகளை வழங்கி வலுப்படுத்துவதற்கும், வலுவான விற்பனைக்குப் பின்னரான சேவை, நாடளாவிய ஆதரவு மற்றும் நம்பகமான போக்குவரத்துத் தீர்வுகள் மூலம் கூட்டாண்மை நிறுவன வாடிக்கையாளர்களுக்கு ஆதரவளிப்பதற்கும் டேவிட் பீரிஸ் ஆட்டோமொபைல்ஸ் நிறுவனம் எடுத்து வரும் தொடர்ச்சியான முயற்சிகளை உறுதிப்படுத்துகிறது. 

இந்த வாகனங்களின் கொள்வனவானது Central Finance Company PLC நிறுவனத்தின் நிதி ஆதரவின் மூலம் சாத்தியமாக்கப்பட்டுள்ளது. இந்த மூலோபாய நிதிப் பங்களிப்பானது இக்கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்தியதுடன், BAIC X55 வாகன தொகுதிகளின் வினைத்திறனான விநியோகத்தையும் பயன்பாட்டையும் உறுதி செய்துள்ளது. 

உள்ளூர் விநியோகஸ்தருக்கும் உலகளாவிய வாகன உற்பத்தியாளருக்கும் இடையிலான வலுவான கூட்டாண்மையை வெளிப்படுத்தும் வகையில், இந்த வாகனக் கையளிப்பு நிகழ்வில் டேவிட் பீரிஸ் ஆட்டோமொபைல்ஸ் அதிகாரிகளுடன் BAIC பிரதான நிறுவனங்களின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர். அவர்களின் வருகையானது, அதிகரித்து வரும் தேவைகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட உலகத்தரம் வாய்ந்த போக்குவரத்துத் தீர்வுகளை வழங்குவதற்கான இலங்கை நிறுவனங்களின் அர்ப்பணிப்பை மீள உறுதிப்படுத்தியது. குறிப்பாக, நவீன வடிவமைப்பு, மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் நம்பகமான செயல்திறன் ஆகியவற்றைக் கொண்ட ஒரு பிரீமியம் வகையான அனைத்தையும் கொண்ட SUV ரக வாகனமான BAIC X55 மீது முன்னணி சர்வதேச வர்த்தக நாமங்களிடையே அதிகரித்து வரும் நம்பிக்கையை இது காண்பிக்கிறது. இவ்வாகனமானது, நிறுவன மற்றும் செயற்பாட்டுப் போக்குவரத்துத் தேவைகளுக்கு மிகவும் பொருத்தமானதாகும். 

David Pieris குழுமத்தின் ஒரு அங்கமான David Pieris Automobiles (Private) Limited (DPA) நிறுவனம், இக்குழுமத்தின் பிரத்தியேக நான்கு சக்கர வாகன விற்பனைப் பிரிவாகச் செயற்படுகிறது. உலகளாவிய ரீதியில் புகழ்பெற்ற வாகன வர்த்தக நாமங்களை இலங்கைக்கு கொண்டுவருவதில் அர்ப்பணிப்புடன் செயற்படும் DPA நிறுவனம், புத்தாக்கம், தரம், ஒப்பிட முடியாத வாடிக்கையாளர் சேவையின் புதிய யுகத்தை நோக்கி இலங்கை வாகன உரிமையாளர்களை தொடர்ச்சியாக வழிநடத்தி வருகிறது. 

மேலதிக விபரங்களுக்கு 0114 700 678 எனும் இலக்கத்தை அழைக்கவும் அல்லது https://www.baicsrilanka.com/ எனும் இணையதளத்தைப் பார்வையிடவும்.

MOST READ

காணொளி
நுவரெலியாவில் கடும் பனிமூட்டம்!

நுவரெலியாவில் கடும் பனிமூட்டம்!

உள நலம் என்பது மிக முக்கியமான ஒன்றாகும்!

உள நலம் என்பது மிக முக்கியமான ஒன்றாகும்!

மட்டக்களப்பு தற்காலிக பாலம் இன்று திறப்பு!

மட்டக்களப்பு தற்காலிக பாலம் இன்று திறப்பு!

மீனவர்கள் தினமும் பல சவால்களை எதிர்கொள்கின்றனர்!

மீனவர்கள் தினமும் பல சவால்களை எதிர்கொள்கின்றனர்!

கதிர்காமப் பாதயாத்திரை ஆரம்பம்!

கதிர்காமப் பாதயாத்திரை ஆரம்பம்!

தமிழீழ வைப்பகத்தில் அடகு வைத்த  நகைகளை மக்களிடம் மீள ஒப்படையுங்கள்!

தமிழீழ வைப்பகத்தில் அடகு வைத்த நகைகளை மக்களிடம் மீள ஒப்படையுங்கள்!

நீதிமன்ற அனுமதியின்றி சொத்துக்கள் முடக்கமா?

நீதிமன்ற அனுமதியின்றி சொத்துக்கள் முடக்கமா?

நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகளுக்காக 23 நாட்கள் சிறைவாசம் இருந்துள்ளேன்!

நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகளுக்காக 23 நாட்கள் சிறைவாசம் இருந்துள்ளேன்!

சம்பிரதாயத்தை மீறி உடையணிந்து வந்தாரா அர்ச்சுனா எம்.பி? சபையில் சலசலப்பு

சம்பிரதாயத்தை மீறி உடையணிந்து வந்தாரா அர்ச்சுனா எம்.பி? சபையில் சலசலப்பு

யாழ். பல்கலைக்கழக முன்றலில் பாலியல் வன்முறைக்கு எதிராகப் போராட்டம்!

யாழ். பல்கலைக்கழக முன்றலில் பாலியல் வன்முறைக்கு எதிராகப் போராட்டம்!

Mobitel Upahara