Header Logo
SLIC
வணிகம்
2.5 டிரில்லியன் ரூபா சொத்து என்ற மைல்கல்லை எட்டி, 2026 ஆம் ஆண்டிற்கு ஒரு வலுவான தொடக்கத்தைக் கொண்டுள்ள HNB

May 20, 2026 - 04:25 PM

2.5 டிரில்லியன் ரூபா சொத்து என்ற மைல்கல்லை எட்டி, 2026 ஆம் ஆண்டிற்கு ஒரு வலுவான தொடக்கத்தைக் கொண்டுள்ள HNB
Mobitel Inner 1278
EDEX Inner

அதிகரித்து வரும் பொருளாதார ஸ்திரமற்ற தன்மைக்கு மத்தியிலும், வங்கியானது கட்டுப்பாடான இருப்புநிலை விரிவாக்கம் மற்றும் சொத்துத் தரத்தின் தொடர்ச்சியான மேம்பாடுகளைப் பிரதிபலிக்கும் வகையில், 2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் (Q1) வரிக்கு பிந்தைய இலாபமாக (PAT) 9.95 பில்லியன் ரூபாவைப் பதிவு செய்துள்ளது. குழும மட்டத்தில் இந்த காலாண்டில் வரிக்கு பிந்தைய இலாபம் 10.35 பில்லியன் ரூபாவை எட்டியதுடன், அதன் செயல்பாடுகள் தொடர்ந்து நிலையானதாகக் காணப்பட்டன. 

2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில், வட்டி வருவாயானது கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 10.0% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இக்காலப்பகுதியில் வட்டிச் செலவினங்கள் அதிகரித்த போதிலும், வட்டி வருவாயின் வளர்ச்சியானது நிதி ஆதாரங்களுக்கான செலவு உயர்வை விட அதிகமாக இருந்தது. இதன் விளைவாக, நிகர வட்டி வருவாய் 26.9 பில்லியன் ரூபாவை எட்டியுள்ளது. 

நிகர வட்டி இலாப வரம்பு விரிவாக்கம் இக்காலாண்டின் முக்கிய அம்சமாக அமைந்தது. கட்டுப்பாடான இருப்புநிலை வளர்ச்சி காரணமாக, நிகர வட்டி இலாப வரம்பு 4.26% இலிருந்து 4.45% ஆக அதிகரித்ததுடன், நிகர வட்டி வருவாயும் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 13.5% வளர்ச்சியடைந்துள்ளது. வளர்ந்து வரும் வைப்புத்தொகைத் தளம் மற்றும் பெரும்பாலும் நிலையான நிதி ஆதாரக் கலவை ஆகியவற்றின் ஆதரவோடு கடன் வழங்கல் விரிவாக்கம் பெற்றதால், இக்காலப்பகுதியில் வட்டி இலாப வரம்பைத் தொடர்ந்து வலுப்படுத்த முடிந்தது. லீசிங் துறையில் ஏற்பட்ட வலுவான வளர்ச்சி மற்றும் கடந்த ஆண்டில் அடைந்த விரிவாக்கத்தின் தொடர்ச்சியாக, நிகர கட்டணம் மற்றும் தரகு வருவாய் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 40.9% அதிகரித்து, 2025 Q1இல் இருந்த 4.8 பில்லியன் ரூபாவிலிருந்து 6.8 பில்லியன் ரூபாவாக உயர்ந்துள்ளது. கடன் புத்தகத்தின் விரிவாக்கம், அட்டைப் பயன்பாடுகளின் (cards) மேம்பட்ட செயல்திறன் மற்றும் மேம்படுத்தப்பட்ட டிஜிட்டல் தீர்வுகளின் அதிகரித்த பயன்பாடு உள்ளிட்ட பரிவர்த்தனை வங்கி நடவடிக்கைகளின் வளர்ச்சி ஆகியவை இந்த உயர்வுக்கு மேலும் பக்கபலமாக அமைந்தன. மேலும், வாடிக்கையாளர்களின் அதிகரித்த செயல்பாடுகள் மற்றும் மேம்பட்ட வர்த்தக ஓட்டங்களை பிரதிபலிக்கும் வகையில், அந்நியச் செலாவணி வருவாயும் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 6.0% அதிகரித்து 1.6 பில்லியன் ரூபாவை எட்டியுள்ளது. 

ஒட்டுமொத்தமாக, 2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டிற்கான மொத்த செயல்பாட்டு வருவாய் 17.2% ஆண்டுக்கு எதிரான வளர்ச்சியைப் பிரதிபலிக்கும் வகையில், 2025 இன் இதே காலப்பகுதியில் பதிவான 30.8 பில்லியன் ரூபாவுடன் ஒப்பிடுகையில் 36.1 பில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளது. அதிகரித்த கார்ட் பரிவர்த்தனை அளவுகள், அதிக கடன் வழங்கல்கள் மற்றும் கடன் மதிப்பீடுகள் உள்ளிட்ட வாடிக்கையாளர்களின் உயர்ந்த செயல்பாட்டு நிலைகளின் காரணமாக மொத்த செயல்பாட்டுச் செலவுகள் ஆண்டுக்கு எதிராக 19.6% அதிகரித்துள்ளன. இது வழக்கமான செயல்பாட்டுச் செலவுகள் மற்றும் முன்னுரிமைத் துறை மற்றும் விவசாயம் சார்ந்த கடன்களுடன் தொடர்புடைய கட்டாய வரிகள் ஆகியவற்றின் உயர்வுக்கு வழிவகுத்தது. இத்தகைய செலவு உயர்வுகளுக்கு மத்தியிலும் திறமையான செலவு நிர்வகிபப்பு பராமரிக்கப்பட்டது. இதன் காரணமாக, 2026 முதல் காலாண்டில் (Q1) செலவு-வருவாய் விகிதமானது 37.15% ஆக இருந்தது. இது 2025 Q1 இல் இருந்த 36.41% உடன் ஒப்பிடும்போது பெரும்பாலும் நிலையானதாகக் காணப்படுகிறது. 

தற்போது நிலவும் பொருளாதாரச் சூழ்நிலைகளைக் கருத்திற்கொண்டு, வங்கியானது ஒரு விவேகமான மற்றும் தொலைநோக்குடைய கடன் இடர் முகாமைத்துவ அணுகுமுறையைக் கையாண்டுள்ளது. பொருளாதார சவால்கள் மற்றும் உலகளாவிய நிச்சயமற்ற தன்மைகளுக்கு மத்தியில் வங்கியின் எச்சரிக்கையான இடர் நிலைப்பாட்டைப் பிரதிபலிக்கும் வகையில், 2025 Q1 இல் 379.7 மில்லியன் ரூபா இருப்புத் தொகைத் திருத்தம் செய்யப்பட்டிருந்த இடத்து, 2026 Q1 இல் 2.6 பில்லியன் ரூபா கடன் குறைபாட்டிற்கான ஒதுக்கீடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஒதுக்கீடுகள் அதிகரித்த போதிலும், சொத்துத் தரக் குறிகாட்டிகள் நிலையானதாகக் காணப்பட்டன. 2025 டிசம்பர் இறுதியுடன் ஒப்பிடுகையில், 2026 மார்ச் இறுதியில் நிகர நிலை 3 விகிதமானது 9 அடிப்படைப் புள்ளிகளால் (bps) சிறிதளவு உயர்ந்து 1.18% ஆக இருந்தது. நிலை 3 ஒதுக்கீட்டு பாதுகாப்பு 73.29% என்ற வலுவான மட்டத்தில் தொடர்ந்தது. இது போதுமான காப்புத்தொகைகளை வழங்கியதுடன், ஒட்டுமொத்த இருப்புநிலையின் மீள்திறனுக்கும் பக்கபலமாக அமைந்தது. 

இந்தச் செயல்பாடுகள் குறித்து HNB PLCஇன் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான திரு. தமித் பல்லேவத்த கூறுகையில், 2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில், உலகளாவிய புவிசார் அரசியல் முன்னேற்றங்கள் மற்றும் உள்ளூர் பொருளாதார நிலைகளில் அவற்றின் தாக்கம் ஆகியவற்றால் செயல்பாட்டுச் சூழல் தொடர்ந்து பெரும் நிச்சயமற்ற நிலைக்கு உட்பட்டிருந்தது. இத்தகைய காலக்கட்டங்களில், சில்லறை வணிகம் (Retail), சிறு மற்றும் நடுத்தர அளவிலான தொழில்கள் (SMEs), பெருநிறுவனம் (Corporates) மற்றும் நுண்நிதி (Microfinance) என அனைத்துத் துறைகளிலும் உள்ள எங்களது வாடிக்கையாளர்கள் மற்றும் பங்குதாரர்களுடன் நெருக்கமாக இருப்பது, அவர்களின் மாறிவரும் தேவைகளைப் புரிந்துகொள்வது மற்றும் சூழ்நிலைகள் மாறும்போது அவர்களுக்குத் துணையாக நிற்பதே எங்களின் முதன்மையான பொறுப்பாகும் என்று தெரிவித்தார்.


MOST READ

காணொளி
செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

Mobitel 1278