Header Logo
SLIC
வணிகம்
கொமர்ஷல் வங்கி, 400வது தகவல் தொழில்நுட்ப ஆய்வுகூடம் மற்றும் ComBank அசஷர திட்டம் மூலம் இளைய தலைமுறையை வலுப்படுத்தும் தனது பயணத்தை மேலும் உறுதிப்படுத்த

May 20, 2026 - 05:17 PM

கொமர்ஷல் வங்கி, 400வது தகவல் தொழில்நுட்ப ஆய்வுகூடம் மற்றும் ComBank அசஷர திட்டம் மூலம் இளைய தலைமுறையை வலுப்படுத்தும் தனது பயணத்தை மேலும் உறுதிப்படுத்த
Mobitel Inner 1278
EDEX Inner

கொமர்ஷல் வங்கியானது இலங்கையில் டிஜிட்டல் கல்விக்கான தனது நீண்டகால அர்ப்பணிப்பில் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது. வங்கி தனது 400வது தகவல் தொழில்நுட்ப ஆய்வுகூடத்தை நன்கொடையாக வழங்கியதுடன், கல்வி மையப்படுத்தப்பட்ட பெருநிறுவன சமூகப் பொறுப்பு முயற்சிகளை ஒருங்கிணைத்து வலுப்படுத்தும் நோக்கில் ComBank அசஷர திட்டத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது. 

இந்த முக்கியமான 400வது தகவல் தொழில்நுட்ப ஆய்வுகூடமானது அத்துருகிரிய, மகாமாத்ய வித்தியாலயத்தில் நிறுவப்பட்டுள்ளது. தொழில்நுட்பம் மையப்படுத்தப்பட்ட உலகில் கற்பித்தலும் கற்றலும் மேம்பட, தேவையான டிஜிட்டல் அடித்தள வசதிகளை குறைந்த வாய்ப்புகள் கொண்ட பாடசாலைகளுக்கு வழங்கும் வங்கியின் முன்னணி திட்டத்தின் தொடர்ச்சியாக இது அமைந்துள்ளது. 

நாடு முழுவதும் உள்ள பாடசாலைகள் தகவல் தொழில்நுட்ப ஆய்வுகூடங்களின் பயனைப் பெற்று வரும் நிலையில், கொமர்ஷல் வங்கியானது அறிமுகப்படுத்தியுள்ள இந்த புதிய முயற்சியானது, இலங்கையின் மிகப்பெரிய தனியார் துறை முன்னெடுக்கும் டிஜிட்டல் கல்வித் திட்டங்களில் ஒன்றின் பரவலையும் தொடர்ச்சியையும் வலியுறுத்துகிறது. வங்கியால் நன்கொடையாக வழங்கப்படும் ஒவ்வொரு தகவல் தொழில்நுட்ப ஆய்வுகூடமும் கணினிகள், தேவையான உபகரணங்கள் மற்றும் தளபாடங்களுடன் முழுமையாக அமைக்கப்பட்டுள்ளன. மொத்தத்தில், இந்த ஆய்வுகூடங்கள் நாடு முழுவதும் 500,000-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பயனளித்துள்ளதாக மதிப்பிடப்படுகிறது. இதன் மூலம் டிஜிட்டல் இடைவெளியை குறைத்து, தொழில்நுட்பத்திற்கான சமமான அணுகலை ஏற்படுத்துவதில் இவை முக்கிய பங்காற்றுகின்றன. 

வங்கியின் பெருநிறுவன சமூகப் பொறுப்பு அறக்கட்டளையின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் இந்த முன்னணி திட்டமானது, டிஜிட்டல் கல்வியறிவை மேம்படுத்துதல், உள்ளடக்கிய கல்வியை ஊக்குவித்தல் மற்றும் நீண்டகால சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கு பங்களித்தல் போன்ற தேசிய முன்னுரிமைகளுடன் இணங்குகிறது. எமது நாட்டின் எதிர்காலம், ஒவ்வொரு குழந்தைக்கும் கல்வி கற்கும் வாய்ப்புகளுக்கும் சமமான அணுகலை வழங்குவதில்தான் அமைந்துள்ளது என்று கொமர்ஷல் வங்கி உறுதியாக நம்புகிறது, என்று வங்கியின் தலைவர் ஷர்ஹான் முஹ்ஷீன் தெரிவித்தார். இந்த பொறுப்பை உணர்ந்து, வங்கி தனது CSR அறக்கட்டளையின் மூலம் நீடித்த சமூக தாக்கத்தை உருவாக்கும் மற்றும் எதிர்கால தலைமுறைகளை வலுப்படுத்தும் முயற்சிகளில் தொடர்ந்து முதலீடு செய்து வருகிறது. எமது 400வது தகவல் தொழில்நுட்ப ஆய்வுகூட நன்கொடை இந்த பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாகும். இது டிஜிட்டல் இடைவெளியை குறைத்தல், டிஜிட்டல் கல்வியறிவை மேம்படுத்தல் மற்றும் இலங்கை முழுவதும் உள்ள குழந்தைகளை எதிர்காலத்திற்குத் தேவையான திறன்களுடன் உருவாக்கும் நோக்கில் நாம் ஏற்படுத்தி வரும் மாற்றத்தின் பரவலையும் தாக்கத்தையும் பிரதிபலிக்கிறது. 

இந்த முக்கிய மைல்கல் தொடர்பாக கொமர்ஷல் வங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான சனத் மனதுங்க தெரிவிக்கையில்: 

எமது 400வது தகவல் தொழில்நுட்ப ஆய்வுகூடம் திறக்கப்பட்ட நிகழ்வானது கொமர்ஷல் வங்கிக்கு பெருமைக்குரிய தருணமாகும். இது தொழில்நுட்ப அணுகலின் மூலம் இளம் தலைமுறையினரை வலுப்படுத்தும் எமது தொடர்ச்சியான அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது. ComBank அசஷர அறிமுகத்தின் மூலம், கல்வியுடன் தொடர்புடைய எமது அனைத்து CSR முயற்சிகளையும் அறிவு, கற்றல் மற்றும் வாய்ப்புகளை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரே அர்த்தமுள்ள அடையாளத்தின் கீழ் கொண்டு வருகிறோம். இந்த மைல்கல் வெறும் எண்ணிக்கைகளைப் பற்றியது மட்டுமல்ல் நாம்மேற்கொண்ட நடவடிக்கைகள் மற்றும் தொடர்ந்து வடிவமைத்து வரும் எதிர்காலங்களைப் பற்றியது. 

மகாமாத்ய வித்தியாலயத்தின் அதிபரான காமினி ஜயரத்ன இந்த வங்கியின் நன்கொடை தொடர்பாக தனது நன்றியைத் தெரிவித்து உரையாற்றுகையில்: 

இந்த தகவல் தொழில்நுட்ப ஆய்வுகூடமானது எமது மாணவர்களுக்கு புதிய வாய்ப்புகளின் உலகைத் திறந்து வைக்கிறது. அவர்களில் பலருக்கு டிஜிட்டல் வளங்களுக்கான அணுகல் இதுவரை குறைவாகவே இருந்தது. எமது பாடசாலைக்கும் சமூகத்திற்கும் அளிக்கப்பட்ட இந்த அரிய முதலீட்டிற்காக கொமர்ஷல் வங்கிக்கு எமது ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். நாம் வழங்கக்கூடிய கல்வியின் தரத்தில் இது நீண்டகால மாற்றத்தை ஏற்படுத்தும். 

கொமர்ஷல் வங்கியானது, இலங்கையில் அமெரிக்க டொலர் 1 பில்லியனுக்கும் அதிகமான சந்தை மூலதனத்தைக் கொண்ட முதலாவது வங்கியாகவும் உலகின் தலைசிறந்த 1000 வங்கிகளின் பட்டியலில் முதன் முதலாக உள்ளடக்கப்பட்ட இலங்கையின் வங்கியாகவும் திகழ்கின்றது. கொமர்ஷல் வங்கியானது, இலங்கை வங்கித் துறையில் அதிக சந்தை மூலதனத்தைக் கொண்டுள்ளதுடன், மிகப்பெரிய தனியார் துறை கடன் வழங்குநராகவும், SME துறைக்கு மிகப்பெரிய கடன் வழங்குநராகவும் உள்ளது. Business Today வுழனயல இதழின் Top 40 தரவரிசையில் முதலிடம் பெற்றுள்ள கொமர்ஷல் வங்கியானது, இலங்கையில் மிகவும் மதிப்பிற்குரிய வங்கியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதுடன், அதிக விருதுகளை வென்ற வங்கியாகவும் திகழ்கின்றது. மேலும், டிஜிட்டல் புத்தாக்கங்களில் முன்னணியும் வகிக்கும் கொமர்ஷல் வங்கியானது, இலங்கையின் முதலாவது 100% கார்பன்-நடுநிலை பேணும் வங்கியுமாகும். 

கொமர்ஷல் வங்கியானது நாடு முழுவதும் 270ற்கும் மேற்பட்ட தந்திரோபாயரீதியாக அமைக்கப்பட்ட கிளைகள் மற்றும் தானியங்கி இயந்திரங்களின் வலையமைப்பைச் செயற்படுத்திவருகின்றது. மேலும், பங்களாதேஷில் 21 கிளைகள், மாலைதீவில் பெரும்பான்மையான பங்குகளைக் கொண்ட ஒரு முழுமையான Tier I வங்கி, மியான்மாரில் ஒரு நுண்நிதி நிறுவனம் என சர்வதேச ரீதியில் பரந்தளவில் தடம் பதித்த இலங்கையின் வங்கியாகத் தன்னை நிலைநிறுத்தியுள்ளது. துபாய் சர்வதேச நிதியியல் மையத்தில் (DIFC) ஒரு பிரதிநிதி அலுவலகத்தை நிறுவுவதற்கு துபாய் சர்வதேச நிதியியல் சேவைகள் அதிகாரசபையிடமிருந்து அனுமதிபெற்றதுடன் இவ் மைல்கல்லை எட்டிய இலங்கையின் முதல் வங்கியாகத் தன்னைப் பதிவுசெய்துள்ளது. மேலும்,வங்கியின் முழுமையான உரித்துடைய துணை நிறுவனங்களான CBC Finance PLC மற்றும் Commercial Insurance Brokers (Pvt) Limited ஆகியவையும் தங்கள் சொந்த கிளை வலையமைப்புகள் மூலம் பல்வேறு நிதிச் சேவைகளை வழங்குகின்றன.


MOST READ

காணொளி
செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

Mobitel 1278