Header Logo
Mogo Academy

விளையாட்டு
அனைத்து லீக் போட்டிகளையும் தவறவிட்ட எம்.எஸ். தோனி!

May 22, 2026 - 12:01 PM -

0

அனைத்து லீக் போட்டிகளையும் தவறவிட்ட எம்.எஸ். தோனி!
Mobitel inner

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற ஐ.பி.எல். 2026 தொடரின் 66 ஆவது போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நாணய சுழற்சியில் வென்று முதலில் பந்துவீச தீர்மானித்தது. 

இதன்போது கருத்து தெரிவித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தலைவர், 

சென்னை அணியில், குர்ஜப்நீத் சிங் மற்றும் மேத்யூ ஷார்ட் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. தங்களின் கடைசி லீக் போட்டியில் தோல்வி அடைந்தால், பிளேஆஃப் சுற்றுக்கான வாய்ப்புகள் பறிபோகும் என்பதை அறிந்து சி.எஸ்.கே. அணி களமிறங்கியது. 

வீரர்களின் காயங்கள் அவர்களின் பயணத்தைப் பாதித்துள்ளதால், அரையிறுதிக்கு முன்னேறுவதற்கான கணிதரீதியான வாய்ப்புகள் மிகவும் குறைந்துள்ளன. ஐ.பி.எல். வரலாற்றில் தோனி அனைத்து லீக் சுற்று போட்டிகளையும் தவறவிடுவது இதுவே முதல் முறையாகும். 

இங்கு பெறும் வெற்றி முதல் நான்கு இடங்களை உறுதி செய்யாது என்றாலும், சி.எஸ்.கே. அணி மற்ற போட்டிகளின் முடிவுகள் தங்களுக்கு சாதகமாக அமைவதையே சார்ந்திருக்க வேண்டும். அகீல் ஹொசைன் மற்றும் பிரசாந்த் வீருக்குப் பதிலாக குர்ஜப்நீத் மற்றும் ஷார்ட் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். 

இந்நிலையில் முதலில் துடுப்பெடுத்தாடிய செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 229 ஓட்டங்களை பெற்றது. 

துடுப்பாட்டத்தில் குஜராத் அணி சார்பில் சாய் சுதர்சன் 84 ஓட்டங்களையும், அணி தலைவர் சுப்மன் 64 ஓட்டங்களையும், ஜாஸ் பட்லர் 57 ஓட்டங்களையும் குவித்தனர். 

பந்து வீச்சில் சென்னை அணி சார்பில் முகேஷ் சௌத்ரி மற்றும் ஸ்பென்சர் ஜான்சன் ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 

230 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 13.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 140 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. இந்நிலையில் குஜராத் டைட்டன்ஸ் அணி 89 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

துடுப்பாட்டத்தில் சென்னை அணி சார்பில் அதிகபட்சமாக ஷிவம் தூபே 47 ஓட்டங்களை பெற்றார். 

பந்து வீச்சில் குஜராத் சார்பில் முகமது சிராஜ், ககிசோ ரபாடா மற்றும் ரஷித் கான் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.


MOST READ

காணொளி
செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

Mobitel Upahara