Header Logo

இந்தியா
சேகர்பாபு மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

May 22, 2026 - 04:14 PM -

0

சேகர்பாபு மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026 இல் 59 இடங்களில் வெற்றி பெற்று திமுக இரண்டாவது இடத்திற்கு சென்றிருக்கிறது. கட்சி ஆரம்பித்து 2 ஆண்டுகள் 3 மாதங்களே ஆன தவெகவின் தலைவர் விஜய் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்றிருக்கிறார். 

சென்னை திமுகவின் கோட்டை என கூறிவந்த நிலையில், அந்த மாவட்டத்தில் மொத்தமுள்ள 16 தொகுதிகளில் 14 இல் தவெக வெற்றி பெற்று ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தது. முன்னாள் துணை முதலமைச்சரின் சேப்பாக்கம் மற்றும் முன்னாள் அமைச்சர் சேகர்பாபுவின் துறைமுகம் ஆகிய தொகுதிகளில் மட்டுமே திமுக வெற்றி பெற்றிருந்ததுடன், முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதியிலேயே திமுக தோல்வியைச் சந்தித்து இருந்தது. 

இந்தசூழலில் தான், சென்னையில் இருந்த சேகர்பாபுவின் அதிகப்படியான ஆதிக்கமே அந்த மண்டலத்தில் திமுகவின் மோசமான தோல்விக்கு காரணம் என திமுகவைச் சேர்ந்த பலரே குற்றம் சாட்டி வருகின்றனர். இதற்கிடையில், தேர்தலின்போது துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் சினோரா அசோக் தரப்புக்கும், அத்தொகுதி திமுக வேட்பாளர் சேகர்பாபு தரப்புக்கும் அடிக்கடி மோதல்கள் நடைபெற்று வந்திருந்தன. குறிப்பாக, வாக்குப்பதிவு நாளன்று துறைமுகம் தவெக வேட்பாளர் சினோரா அசோக் உள்ளிட்ட சிலரை தாக்கியதாக சேகர் பாபு மீது புகார் எழுந்தது தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. 

இந்தசூழலில் தான், முன்னாள் அமைச்சரும் தற்போதைய துறைமுகம் தொகுதி எம்.எல்.ஏ-வுமான சேகர்பாபு மீது தவெக வேட்பாளர் சினோரா அசோக் மற்றும் வழக்கறிஞர் விஜயகுமாரை தாக்கிய விவகாரத்தில் சென்னை வடக்கு கடற்கரை பொலிஸார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்திருக்கின்றனர்.

MOST READ

காணொளி
காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

கொடியேற்றம்!

கொடியேற்றம்!

காணி உரிமைக்கும், வீட்டு உரிமைக்கும் வித்தியாசம் தெரியுமா?

காணி உரிமைக்கும், வீட்டு உரிமைக்கும் வித்தியாசம் தெரியுமா?

மலையக மக்களுக்கு சிறிதும் தீங்கு விளைவிக்காத கட்சி தான் நாங்கள்!

மலையக மக்களுக்கு சிறிதும் தீங்கு விளைவிக்காத கட்சி தான் நாங்கள்!

மலையக அதிகார சபையை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை!

மலையக அதிகார சபையை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை!

காணியுரிமையை மலையக மக்களுக்கு வழங்குங்கள்!

காணியுரிமையை மலையக மக்களுக்கு வழங்குங்கள்!

நவீன உலகத்திலும் கொத்தடிமைகளாக வாழும் மலையக மக்கள்!

நவீன உலகத்திலும் கொத்தடிமைகளாக வாழும் மலையக மக்கள்!

நாட்டில் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு செய்யப்பட வேண்டும்!

நாட்டில் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு செய்யப்பட வேண்டும்!

மக்கள் அச்சமடைய தேவையில்லை!

மக்கள் அச்சமடைய தேவையில்லை!

தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஏன் இந்த நிலை!

தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஏன் இந்த நிலை!

title