Header Logo

மலையகம்
நுவரெலியா தபால் நிலையத்தில் இடிதாங்கி திருட்டு!

May 22, 2026 - 04:28 PM -

0

நுவரெலியா தபால் நிலையத்தில் இடிதாங்கி திருட்டு!

நுவரெலியா பிரதான நகரின் மத்தியில் அமைந்துள்ள விலைமதிப்பற்ற வளமாக கருதப்படும் நுவரெலியா தபால் நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த இடி தாங்கி மற்றும் செப்பிலான இணைப்புத் திருடப்பட்டுள்ளது.

 

நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் கடந்த 10.04.2026 முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தொல்பொருள் திணைக்களத்திற்கு ஒரு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. 

அதன்படி நுவரெலியா மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் கண்காணிப்பாளரின் வழிகாட்டுதலின் கீழ் நுவரெலியா பொலிஸார் மற்றும் தடயவியல் பொலிஸார் இணைந்து இன்று (22) சிறப்பு விசாரணைகளுக்கு நுவரெலியா பிரதான தபால் நிலையத்திற்கு வருகைந்தந்தனர். 

நுவரெலியாவில் பழமையான இவ் கட்டிடத்தில் மின்னல் தாக்குதலில் இருந்து பாதுகாக்கும் ஒரு அறிவியல் கருவியாக காணப்பட்டது. 

இது கட்டிடத்தை விட உயரமாக காணப்பட்ட கடிகார கோபுரத்தின் பொருத்தப்பட்டு, மின்னலின் அதிகப்படியான மின்சாரத்தை ஈர்த்து, பாதுகாப்பாக பூமிக்குள் செலுத்தும் இவ் கருவியே இவ்வாறு திருடப்பட்டுள்ளது. 

இவ்வாறு நுவரெலியா பிரதான நகரில் உள்ள இடிதாங்கி திருடப்பட்டதால் நுவரெலியாவில் காணப்படும், மோசமான காலநிலை போது இடி மின்னல் காலங்களில் இவ் கட்டிடங்கள் மற்றும் நுவரெலியா வாழ். மக்களுக்கு பெரும் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படுகிறது எனவும் பொது மக்கள் தெரிவிக்கின்றன. 

இடிதாங்கி கருவிகளில் பயன்படுத்தப்படும் செம்பு (Copper) போன்ற உலோகங்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதால் இவை சமூக விரோதிகளால் குறிவைக்கப்படுகின்றன எனவும் பொது மக்கள் தெரிவிக்கின்றன. இதனால் உடனடியாக விசாரணைகள் மேற்கொண்டு சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைவரதும் கோரிக்கையாக உள்ளது.

--


MOST READ

காணொளி
காலி முகத்திடலில் அரங்கேறிய கின்னஸ் சாதனை

காலி முகத்திடலில் அரங்கேறிய கின்னஸ் சாதனை

355 மனித என்புத் தொகுதிகள் அடையாளம்!

355 மனித என்புத் தொகுதிகள் அடையாளம்!

கோப்பாய் பொலிஸ் நிலையம் திறந்து வைப்பு!

கோப்பாய் பொலிஸ் நிலையம் திறந்து வைப்பு!

23 ஆம் நாள் அகழ்வில் மேலும் 12 என்புக்கூடுகள் அடையாளம்!

23 ஆம் நாள் அகழ்வில் மேலும் 12 என்புக்கூடுகள் அடையாளம்!

பாராளுமன்றில் அர்ச்சுனா அதிரடி!

பாராளுமன்றில் அர்ச்சுனா அதிரடி!

தமிழ் மக்கள் மத்தியில் நம்பிக்கை கட்டியெழுப்பப்பட வேண்டும்!

தமிழ் மக்கள் மத்தியில் நம்பிக்கை கட்டியெழுப்பப்பட வேண்டும்!

அரசாங்கம் ஓர் அரசியல் நாடகத்தை ஆடுகிறது!

அரசாங்கம் ஓர் அரசியல் நாடகத்தை ஆடுகிறது!

சிறந்த பொருளாதாரக் கொள்கையுடன் பயணித்துக் கொண்டு இருக்கின்றோம்!

சிறந்த பொருளாதாரக் கொள்கையுடன் பயணித்துக் கொண்டு இருக்கின்றோம்!

விவசாயிகள் நஞ்சு குடித்து உயிரை மாய்ப்பதா?

விவசாயிகள் நஞ்சு குடித்து உயிரை மாய்ப்பதா?

ரியாஸ் பாருக் பாராளுமன்றில் அதிரடி!

ரியாஸ் பாருக் பாராளுமன்றில் அதிரடி!

title