Header Logo

விளையாட்டு
சிஎஸ்கே அணியின் தோல்விக்கு இவர் தான் காரணமா?

May 22, 2026 - 05:51 PM -

0

சிஎஸ்கே அணியின் தோல்விக்கு இவர் தான் காரணமா?

இந்தியன் பிரீமியர் லீக் 2026 (ஐபிஎல் 2026) தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியின் ப்ளே ஆஃப் கனவு முடிவுக்கு வந்துள்ளது. பிளேஆஃப் சுற்றுக்குத் தகுதிபெற கட்டாயம் வெல்ல வேண்டிய போட்டியில் அவர்கள் சிஎஸ்கே வழக்கம்போல் படுமோசமாக விளையாடியது. 

அகமதாபாத்தில் நடைபெற்ற போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் 89 ஓட்டங்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்ததை அடுத்து, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளேஆஃப் சுற்றிலிருந்து வெளியேறியது. 

கடைசிப் போட்டியில் தோற்ற சென்னை சூப்பர் கிங்ஸ், ஐபிஎல் 2026 சீசனை 6 வெற்றிகள் மற்றும் 8 தோல்விகளுடன் நிறைவு செய்துள்ளது. சிஎஸ்கே தற்போது 12 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் 7 ஆவது இடத்தில் உள்ளனர். டெல்லி கேப்பிட்டல்ஸ் தங்களது கடைசிப் போட்டியில் வெற்றி பெற்றால், சென்னை சூப்பர் கிங்ஸ் 8 ஆவது இடத்திற்குச் சரிந்துவிடும். 

மும்பை மற்றும் லக்னோ சூப்பர் ஜெட்ஸ் ஆகிய அணிகள்தான் சென்னையை விட முன்னிலையில் உள்ள கடைசி அணிகளாகும். இப்போது, ​​சென்னை சூப்பர் கிங்ஸின் இந்த படுமோசமான செயல்பாட்டிற்கு முக்கிய காரணம் யார் என்று பார்ப்போம். 

காயம் காரணமாக எம்.எஸ். தோனி இந்த சீசனில் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. ருதுராஜ் கெய்க்வாட் தனது மோசமான தலைமைத்துவம் மற்றும் பொறுப்பற்ற துடுப்பாட்டத்தால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியது. 

சென்னை அணிக்காக தனது முதல் சீசனில் விளையாடும் சஞ்சு சாம்சன், சில போட்டிகளில் சிறப்பாகச் செயல்பட்டாலும், மற்ற போட்டிகளில் முற்றிலும் சொதப்பியுள்ளார். 

இருப்பினும், ருதுராஜ் கெய்க்வாட் ஆட்ம் இந்த சீசனில் பெரும் சொதப்பலாக இருந்தது. 2020 முதல் சென்னை அணிக்காக விளையாடி வரும் ருதுராஜ் கெய்க்வாட், 2024 இல் அணி தலைவராக பொறுப்பேற்றார். இருப்பினும், 2025 முதல் அவரது செயல்பாடு மோசமடைந்தது. அவர் 2025 இல் வெறும் 5 போட்டிகளில் மட்டுமே விளையாடி 122 ஓட்டங்களை எடுத்தார். பின்னர், காயம் காரணமாக அவர் அணியிலிருந்து விலகினார். 

2026 சீசனில், ருதுராஜ் கெய்க்வாட் 14 போட்டிகளில் வெறும் 337 ஓட்டங்களை மட்டுமே எடுத்தார். சராசரி 28.08. ஸ்டிரைக் ரேட் 123.44. தொடக்க ஆட்டக்காரராக அவர் ஆடிய 13 போட்டிகளில் மிக மோசமான ஆட்டத்தையே வெளிப்படுத்தினார். அவர் அரைசதம் அடித்த இரண்டு போட்டிகளில் கூட மிகவும் மெதுவாகவே விளையாடினார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 வெற்றிகளைப் பெற்றதற்கு சஞ்சு சாம்சன், ஆயுஷ் மாத்ரே மற்றும் உர்வில் படேல் ஆகியோரே முக்கியக் காரணம். 

இந்த மூவர் விளையாடியபோது மட்டுமே சென்னை சூப்பர் கிங்ஸ் வென்றது. ஆனால், அவர் காயம் காரணமாக லீக்கிலிருந்து பாதியிலேயே விலகிக்கொண்டார். அவர் இருந்திருந்தால், சென்னையின் கதை வேறுவிதமாக இருந்திருக்கும். அடுத்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் தங்கள் தலைவிதியை மாற்ற விரும்பினால், சஞ்சு சாம்சனுக்கு அணி தலைவர் பதவி வழங்கப்பட வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்க்கினறனர். 

ருதுராஜை ஒரு வீரராக மட்டுமே அணியில் தொடர வேண்டும். அடுத்த சீசனில் அவர் சரியான ஃபார்முக்கு திரும்பவில்லை என்றால் அவரை அணியில் இருந்து விடுவிப்பதே நல்லது. ருதுராஜ் கெய்க்வாட் தனது மோசமான தலைமைத்துவம் மற்றும் துடுப்பாட்டத்தால் சென்னை அணிக்கு இந்த சீசனில் பெரும் இழப்பை பெற்று தந்துள்ளார் என்றே சொல்லலாம்.


MOST READ

காணொளி
காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

கொடியேற்றம்!

கொடியேற்றம்!

காணி உரிமைக்கும், வீட்டு உரிமைக்கும் வித்தியாசம் தெரியுமா?

காணி உரிமைக்கும், வீட்டு உரிமைக்கும் வித்தியாசம் தெரியுமா?

மலையக மக்களுக்கு சிறிதும் தீங்கு விளைவிக்காத கட்சி தான் நாங்கள்!

மலையக மக்களுக்கு சிறிதும் தீங்கு விளைவிக்காத கட்சி தான் நாங்கள்!

மலையக அதிகார சபையை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை!

மலையக அதிகார சபையை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை!

காணியுரிமையை மலையக மக்களுக்கு வழங்குங்கள்!

காணியுரிமையை மலையக மக்களுக்கு வழங்குங்கள்!

நவீன உலகத்திலும் கொத்தடிமைகளாக வாழும் மலையக மக்கள்!

நவீன உலகத்திலும் கொத்தடிமைகளாக வாழும் மலையக மக்கள்!

நாட்டில் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு செய்யப்பட வேண்டும்!

நாட்டில் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு செய்யப்பட வேண்டும்!

மக்கள் அச்சமடைய தேவையில்லை!

மக்கள் அச்சமடைய தேவையில்லை!

தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஏன் இந்த நிலை!

தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஏன் இந்த நிலை!

title