Header Logo
SLIC
ஜோதிடம்
இன்றைய ராசிபலன் (23.05.2026)

May 23, 2026 - 07:47 AM

இன்றைய ராசிபலன் (23.05.2026)
Mobitel Inner 1278
EDEX Inner

இன்றைய ராசிபலன்:- 

மேஷம் 

வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். வெறுத்துச் சென்றவர்கள் விரும்பி வந்து பேசுவார்கள். உத்யோகஸ்தர்களுக்கு வெளியூர் மாற்றலாவர். பயணங்களின் போது கவனம் தேவை. வியாபாரம் சாதகமாக இருக்கும். உடல் நலம் தேறும். 

அதிர்ஷ்ட நிறம்: பச்சை 

ரிஷபம் 

பிள்ளைகளின் வருங்காலம் குறித்த கவலைகள் நீங்கும். புகழ்பெற்ற புண்ணிய தலங்களுக்குச் சென்று வருவீர்கள். எதிர்பார்த்து ஏமாந்துபோன தொகை கைக்கு வந்து சேரும். தாயாரின் உடல்நிலை பாதிக்கும். கணவருடன் கருத்து மோதல்களும் வரக்கூடும்.அனுசரிப்பது நல்லது. 

அதிர்ஷ்ட நிறம்: நீலம் 

மிதுனம் 

வருமானம் உயரும். வசதி, வாய்ப்புகள் பெருகும். புது ரக ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். மாணவர்களின் அலட்சியபோக்கு நீங்கும். மாணவர்களுக்கு நற்செய்திகள் கிடைக்கும். உறவினர்களில் ஒருசிலர் உங்களுடைய புத்திசாலித்தனத்தை மெச்சுவார்கள். உடல் நலம் தேறும். பணப் புழக்கம் மிகும். 

அதிர்ஷ்ட நிறம்: ரோஸ் 

கடகம் 

உத்யோகஸ்தர்களுக்கு வேலை பளு குறையும். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். கமிஷன், புரோக்கரேஜ் வகைகளால் பணம் வரும். பணவரவு அதிகரிக்கும். புகழ் மற்றும் அதிகார பதவியில் உள்ளவர்கள் நண்பர்களாவர். விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். தடைகளெல்லாம் நீங்கும். 

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு 

சிம்மம் 

மனைவி வழியில் உதவிகள் உண்டு. வாகனம், வீடு பராமரிப்புச் செலவுகள் அதிகமாகும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். உயர் ரக ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். பழைய நண்பர்களிடமிருந்து விடுபடுவீர்கள். புதியவர்கள் நண்பர்களாவார்கள். புதிய முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். 

அதிர்ஷ்ட நிறம்: நீலம் 

கன்னி 

உயர்கல்வியில் ஆர்வம் பிறக்கும். திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு கூடி வரும். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. உத்யோகத்தில் நெருக்கடி தந்த அதிகாரி வேறு இடத்திற்கு மாற்றப்படுவார். மகனுக்கிருந்து வந்த கூடாப்பழக்க வழக்கம் விலகும். உங்கள் உடல் உஷ்ணம் அதிகமாகும். சம்பள பாக்கி கைக்கு வரும். 

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் 

துலாம் 

மகளுக்கு திருமணம் கூடி வரும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். மாணவர்கள் வகுப்பாசிரியரின் அன்பையும், பாராட்டையும் பெறுவீர்கள். அடிவயிற்றில் வலி, சளித் தொந்தரவு வந்து நீங்கும். வெளிபூர் பயணம் வெற்றி தரும். அடுத்தடுத்த செலவுகளால் பணப்பற்றாக்குறை இருந்து கொண்டேயிருக்கும். 

அதிர்ஷ்ட நிறம்: ஊதா 

விருச்சிகம் 

பெண்கள் வேலையை எளிதாக்க புதிய ரக பொருட்களை உபயோகப்படுத்துவர். பொறுப்பான வேலையாட்கள் பணியில் வந்து சேருவார்கள். கணவன்-மனைவிக்குள் ஆரோக்கியமான விவாதங்கள் வரும். தந்தை வழி உறவினர்களால் ஆதாயமடைவீர்கள். வாகனம் ஓட்டும்போது எச்சரிக்கை தேவை. 

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் 

தனுசு 

இன்று சந்திராஷ்டமம் என்பதால் இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. காரணம் இன்று பல காரியதடைகள் இருப்பதால் புதிய முயற்சிகளை எடுக்காமல் இருப்பது நல்லது. யாரிடமும் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம் மனக்குழப்பங்கள் ஏற்படும் என்பதால் மிகவும் கவனம் தேவை. 

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை 

மகரம் 

நட்பு வட்டம் விரிவடையும். செரிமானக் கோளாறு, முதுகு வலி, மூட்டு வலி வந்து நீங்கும். பழைய உறவினர், நண்பர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து விலகும். பழைய பாக்கி வசூலாகும். திருமணம், சீமந்தம் என அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். விருந்தினர்கள், உறவினர்கள் வருகையும் அதிகரிக்கும். 

அதிர்ஷ்ட நிறம்: நீலம் 

கும்பம் 

வீடு, மனை உங்கள் ரசனைக்கேற்ப அமையும். சில நேரங்களில் சோர்வோடும் களைப்போடும் காணப்படுவீர்கள். சுபச் செலவுகள் அதிகமாகு;ம். மகளுக்கு நல்ல வரன் அமையும். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். தியானம் மேற்கொள்வது டென்ஷனை குறைக்க உதவும். 

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் 

மீனம் 

நம்பிக்கைக்குரியவரை சந்தித்து எதிர்காலம் குறித்து சில முடிவுகள் எடுப்பீர்கள். உத்தியோகத்தில் அமைதி நிலவும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். வீடடிற்கு அழகு சேர்க்க கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். திட்டமிடாத செலவுகளை போராடி சமாளிப்பீர்கள். சில சமயம் தங்கள் பேச்சில் முதிர்ச்சி தெரியும். 

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

நாக வாகன உற்சவம்!

நாக வாகன உற்சவம்!

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

Mobitel 1278