Header Logo
Mogo Academy

சினிமா
கால்பந்து வீரரா பும்ரா? மன்னிப்புக்கோரிய நடிகர் ராம்சரண்!

May 25, 2026 - 10:39 AM -

0

கால்பந்து வீரரா பும்ரா? மன்னிப்புக்கோரிய நடிகர் ராம்சரண்!
Mobitel inner

புச்சி பாபு சனா இயக்கத்தில், ராம் சரண் மற்றும் ஜான்வி கபூர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பெத்தி’. இப்படம் வரும் ஜூன்.4 ஆம் திகதி வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (23) போபாலில் நடைபெற்றது. 

இதில் ராம்சரண், ஜான்வி கபூர், ஏ.ஆர். ரஹ்மான், மற்றும் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர். 

 

இந்நிகழ்ச்சியில் நடிகர் ராம்சரணிடம், தொகுப்பாளர் இந்திய கிரிக்கெட் வீரர்களைப் பற்றி சில வார்த்தைகளில் விவரிக்குமாறு ஒரு 'ரேபிட் ஃபையர்' கேள்வியைக் கேட்டார். 

அப்போது சச்சின், தோனி, ரோஹித், விராட் குறித்து பேசிய ராம்சரண், இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா குறித்தும் பேசியிருந்தார். 

ஆனால் ஜஸ்ப்ரித் பும்ராவை கால்பந்து வீரர் என தவறாக குறிப்பிட்ட ராம்சரண், ‘பும்ரா சார், நான் உங்களுடைய மிகப்பெரிய ரசிகன். எனக்கு கால்பந்து மிகவும் பிடிக்கும், நீங்கள் அதை இன்னும் பெரிய உயரத்திற்குக் கொண்டு சென்றுள்ளீர்கள். லவ் யூ சார்’ என தெரிவித்தார். 

இதுதொடர்பான வீடியோக்கள் உடனடியாக சமூக வலைதளங்களில் வைரலானது. ராம் சரண், ஜஸ்ப்ரித் பும்ராவை கால்பந்து ஜாம்பவான் சுனில் சேத்ரியுடன் குழப்பிக் கொண்டிருக்கலாம் என்று சமூக ஊடகப் பயனர்கள் விவாதிக்கத் தொடங்கினர். இதனிடையே தனது கருத்து தொடர்பாக மன்னிப்புக் கோரி எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவிட்டிருந்தார் ராம்சரண். 

அப்பதிவில், "அப்பாடா… சில சமயங்களில் பெயர்களை நினைவில் வைத்துக்கொள்வதில் நான் உண்மையிலேயே மிகவும் மறதியாக இருக்கிறேன். 

இந்த குழப்பத்திற்கு ஜஸ்ப்ரித் பும்ரா அவர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். அந்தப் பெரும் உற்சாகத்திற்கும், திரண்டிருந்த கூட்டத்திற்கும் மத்தியில் நிகழ்ந்த ஒரு இயல்பான மனிதத் தவறுதான் இது. 

நான் உங்களை உண்மையிலேயே மதிக்கிறேன் மற்றும் உங்கள் ஆட்டத்தின் தீவிர ரசிகன் நான். எதிரணி பேட்ஸ்மேன்களைத் தொடர்ந்து தடுமாறச் செய்து, அவர்களைப் பின்வாங்கச் செய்யும்போது, ​​ஒவ்வொரு இந்தியனையும் நீங்கள் பெருமை கொள்ளச் செய்கிறீர்கள்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.


MOST READ

காணொளி
மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

பதவி விலகும் கலாசாரம் இல்லை - ப.சத்தியலிங்கம்

பதவி விலகும் கலாசாரம் இல்லை - ப.சத்தியலிங்கம்

மழை அங்கியுடன் சிறுவனின் எலும்புக்கூடு மீட்பு!

மழை அங்கியுடன் சிறுவனின் எலும்புக்கூடு மீட்பு!

யாழ். நூலகத்தை ஏரித்தவர்கள் ஐக்கிய தேசிய கட்சியாகும்!

யாழ். நூலகத்தை ஏரித்தவர்கள் ஐக்கிய தேசிய கட்சியாகும்!

நீதி வழங்கப்பட்டதாக சரித்திரமும் இல்லை, வழங்குவதற்கான அறிகுறியும் இல்லை!

நீதி வழங்கப்பட்டதாக சரித்திரமும் இல்லை, வழங்குவதற்கான அறிகுறியும் இல்லை!

முஸ்லிம் மக்கள் ஜனாதிபதி மீது நம்பிக்கையை இழக்கவில்லை!

முஸ்லிம் மக்கள் ஜனாதிபதி மீது நம்பிக்கையை இழக்கவில்லை!

அடைக்கலநாதன் கோரிக்கை!

அடைக்கலநாதன் கோரிக்கை!

மக்கள் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!

மக்கள் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!

Mobitel Upahara