Header Logo
SLIC
வணிகம்
ஜனசக்தி லைஃப், 2026 வருடாந்த விற்பனை விருது விழாவில் விசேடத்துவத்தைக் கொண்டாடுகிறது

May 25, 2026 - 12:23 PM

ஜனசக்தி லைஃப், 2026 வருடாந்த விற்பனை விருது விழாவில் விசேடத்துவத்தைக் கொண்டாடுகிறது
Mobitel Inner 1278
EDEX Inner

JXG (ஜனசக்தி குழுமத்தின்) துணை நிறுவனமான ஜனசக்தி லைஃப், தனது விற்பனை விருதுகள் 2026 ஐ அண்மையில் City of Dreams இல் உள்ள Cinnamon Life இல் நிறைவு செய்தது. இந் நிகழ்வின் போது நிறுவனம், நாடெங்கிலும் சிறப்பாகச் செயல்படும் தனது குழு உறுப்பினர்களின் சிறந்த சாதனைகளையும் அர்ப்பணிப்பையும் அங்கீகரித்தது. 

இந் நிகழ்வு ஜனசக்தி லைஃப் நிறுவனத்தின் வளர்ச்சியைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லும் நிறுவனத்தின் சிறந்த செயற்பாட்டாளர்களை ஒன்றிணைத்ததுடன் அவர்களின் விசேடத்துவம், அர்ப்பணிப்பு மற்றும் கூட்டு முயற்சிகளைக் கொண்டாடியது. ஆலோசகர்கள், குழு முகாமையாளர்கள் (Unit Managers), வாடிக்கையாளர் தொடர்பு அதிகாரிகள், அணித் தலைவர்கள் (Team Leaders), பிராந்திய முகாமையாளர்கள் மற்றும் வலய முகாமையாளர்கள் ஆகியோர் நிறுவனத்திற்கு ஆற்றிய குறிப்பிடத்தக்க பங்களிப்புகளுக்காகவும் வாடிக்கையாளர்களுக்கு மதிப்பை வழங்குவதில் அவர்கள் காட்டிய அசைக்க முடியாத அர்ப்பணிப்பிற்காகவும் கௌரவிக்கப்பட்டனர். 

நிகழ்வில் உரையாற்றிய ஜனசக்தி இன்சூரன்ஸ் பிஎல்சியின் பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி ரவி லியனகே அவர்கள், விருது பெற்றவர்களையும் ஒட்டுமொத்த விற்பனைக் குழுவையும் பாராட்டினார். மேலும் அவர், நிறுவனத்தின் செயல்திறனையும் வாடிக்கையாளர் உறவுகளை வலுப்படுத்துவதில் அவர்களின் முக்கிய பங்கையும் எடுத்துரைத்தார். அத்துடன் அவர்களின் அர்ப்பணிப்பு, மனவுறுதி மற்றும் சிறந்து விளங்குவதற்கான நாட்டம் ஆகியவை வணிகத்திற்கும் தொழில்துறைக்கும் தொடர்ந்து புதிய அளவுகோல்களை அமைத்து வருவதாகவும் குறிப்பிட்டார். 

ஜனசக்தி இன்சூரன்ஸ் பிஎல்சியின் தலைவரான அன்னிகா சேனநாயக்க, வெற்றியாளர்களின் சாதனைகளைப் பாராட்டினார். மேலும் அவர், செயல்திறனை அங்கீகரிக்கும் கலாச்சாரத்தை வளர்ப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியதுடன் நிறுவனத்தின் அனைத்து மட்டங்களிலும் தொடர் வளர்ச்சியை ஊக்குவிக்க வேண்டும் என்றார். 

ஸ்தாபகரும் கௌரவத் தலைவருமான திரு.C.T.A. ஷாஃப்ட்டர் உள்ளிட்ட பணிப்பாளர் சபை உறுப்பினர்கள், சிரேஷ்ட தலைவர்கள் மற்றும் நாடெங்கிலுமிருந்து வந்த சக ஊழியர்கள் இவ் விழாவில் கலந்துகொண்டனர். இது நிறுவனத்திற்குள் இந்நிகழ்வின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தியது. 

ஜனசக்தி லைஃப், தனது ஊழியர்களை அங்கீகரித்து கொண்டாடுவதற்கும், செயல்திறனை மையமாகக் கொண்ட வலுவான கலாச்சாரத்தை வலுப்படுத்துவதற்கும், எதிர்காலத்தில் மேலும் மைல்கற்களை அடைய ஊழியர்களை ஊக்குவிப்பதற்கும் வருடாந்த விற்பனை விருதுகள் ஒரு முக்கிய தளமாகத் தொடர்ந்து விளங்குகின்றது. ஜனசக்தி லைஃப் தனது வளர்ச்சிப் பயணத்தில் முன்னேறிச் செல்லும் வேளையில், அதன் வெற்றியைத் தொடர்ந்து வடிவமைத்து வரும் அதன் ஊழியர்களின் பேரார்வம், அர்ப்பணிப்பு மற்றும் ஒற்றுமையின் வெளிப்பாடாக இவ் விருதுகள் விளங்குகின்றன. 

ஜனசக்தி லைஃப் பற்றி 

1994 ஆம் ஆண்டு ஆயுள் காப்புறுதி நிறுவனமாக ஸ்தாபிக்கப்பட்ட ஜனசக்தி இன்சூரன்ஸ் பிஎல்சி (ஜனசக்தி லைஃப்), துறையில் புத்தாக்கமான செயற்பாட்டாளராக தன்னை அடையாளப்படுத்தியுள்ளதுடன், 30 வருடங்களுக்கு மேலாக அனைவர் மத்தியில் அறியப்படும் நாமமாகவும் திகழ்கின்றது. ஜனசக்தி இன்சூரன்ஸ் பிஎல்சி நிறுவனமானது, இலங்கை காப்புறுதி ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவினால் உரிமம் பெற்றுள்ளது. இது நாடு முழுவதிலும் பரந்த 76 கிளைகளுடன் உறுதியான பிரசன்னத்தை கொண்டுள்ளது. மேலும், “வாழ்க்கையை மேம்படுத்தல் மற்றும் கனவுகளுக்கு வலுவூட்டல்” எனும் நோக்கத்துக்கமைய, ஆயுள் காப்புறுதித் துறையில் முன்னோடியாக திகழ்வதற்காக ஜனசக்தி லைஃப் தன்னை அர்ப்பணித்துள்ளதுடன், அதற்காக தனது வாடிக்கையாளர்கள் மற்றும் பங்காளர்களுக்கு காப்புறுதிக்கு அப்பாலான சேவையை வழங்குகின்றது.


MOST READ

காணொளி
செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

Mobitel 1278