Header Logo
Mogo Academy

விளையாட்டு
ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது குஜராத் டைட்டன்ஸ்!

May 30, 2026 - 07:57 AM -

0

ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது குஜராத் டைட்டன்ஸ்!
Mobitel inner

ஐபிஎல் 2026 தொடரின் குவாலிஃபையர் 2 ஆட்டத்தில், ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய குஜராத் டைட்டன்ஸ் அணி, இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. 

சண்டிகர் முல்லன்பூர் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. 

அந்த அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 214 ஓட்டங்களை பெற்றது. 

அணியின்இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி மிரட்டலாக விளையாடி 47 பந்துகளில் 7 சிக்ஸர்கள் மற்றும் 8 பவுண்டரிகளுடன் 96 ஓட்டங்களை குவித்தார். 

இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் மிகக் குறைந்த பந்துகளில் (440 பந்துகள்) 1,000 ஓட்டங்களை கடந்த வீரர் என்ற ஆண்ட்ரே ரஸலின் உலக சாதனையை அவர் முறியடித்தார். 

இறுதி ஓவர்களில் டொனாவன் ஃபெரீரா வெறும் 11 பந்துகளில் 38 ஓட்டங்கள் எடுத்துப் பலம் சேர்த்தார். குஜராத் தரப்பில் ஜேசன் ஹோல்டர் மற்றும் காகிசோ ரபாடா தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். 

தொடர்ந்து 215 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி, ஆரம்பம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 

தலைவர் சுப்மன் கில் பொறுப்புடன் விளையாடி 53 பந்துகளில் தனது 5-வது ஐபிஎல் சதத்தை (104 ஓட்டங்கள்) பதிவு செய்து அணியின் வெற்றியை உறுதி செய்தார். 

அவருக்கு பக்கபலமாக இருந்த தொடக்க வீரர் சாய் சுதர்சன் 32 பந்துகளில் 58 ஓட்டங்களை பெற்றிருந்தார். 

இந்த ஜோடியின் அதிரடியால் குஜராத் அணி 18.4 ஓவர்களிலேயே 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. 

இது ஐபிஎல் பிளே-ஆஃப் வரலாற்றிலேயே வெற்றிகரமாக சேஸ் செய்யப்பட்ட அதிகபட்ச ஓட்ட இலக்காகும். 

இந்த அபார வெற்றியின் மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணி, வரும் நாளை நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் நடப்பு செம்பியனான ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொள்ளவுள்ளது.


MOST READ

காணொளி
செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

Mobitel Upahara