May 30, 2026 - 05:41 PM -
0
தையிட்டி விகாரைப் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடி, புகைப்படங்களை எடுத்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இரு இளைஞர்களை பலாலி பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வெசாக் தினத்தினை முன்னிட்டு, விசேட வழிபாடுகள் தையிட்டி விகாரையில் நடைபெற்று வரும் நிலையில், விகாரைக்குச் சற்று தொலைவில் காணி உரிமையாளர்கள் போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.
இந்நிலையில், வடமராட்சி பகுதியைச் சேர்ந்த இரு இளைஞர்கள், விகாரைக்குச் செல்வதாகக் கூறி விகாரைப் பகுதிக்குச் சென்று, அங்கு சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடி புகைப்படங்களையும் எடுத்துள்ளனர்.
அதனை அவதானித்த பொலிஸார் இருவரிடமும் விசாரணைகளை முன்னெடுத்த வேளை, அவர்கள் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை வழங்கியுள்ளனர்.
இதனை அடுத்து, இருவரையும் கைது செய்த பொலிஸார், பலாலி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துத் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
--

