May 30, 2026 - 10:16 PM -
0
பருத்தித்துறையிலிருந்து கடற்றொழிலுக்குச் சென்ற நிலையில் காணாமல் போன கடற்றொழிலாளர்களை, இந்தியக் கடல் எல்லைப் பகுதியை அண்மித்துத் தேடுதல் நடத்த இந்திய அரசின் அனுமதியைப் பெற்று, தேடுதல் நடவடிக்கைகளை விஸ்தரித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் தெரிவித்துள்ளார் .
யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் (30) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார் .
அவர் மேலும் தெரிவிக்கையில் :
"பருத்தித்துறைப் பகுதியிலிருந்து கடற்றொழிலுக்குச் சென்ற கடற்றொழிலாளர்கள் காணாமல் போனமை தொடர்பில், கடற்படையினர் நீண்ட தேடுதல்களை நடத்தி வருகின்றனர் .
தேடுதல் பணிகள் விஸ்தரிக்கப்பட்டு, இந்தியக் கடல் எல்லைப் பகுதியை அண்மித்த இடங்களிலும் தேடுதல் நடத்த இந்திய அரசாங்கத்தின் அனுமதிகளைப் பெற்றுத் தேடுதல் பணிகளை முன்னெடுத்துள்ளோம் .
GPS ஊடாக அவர்களின் படகுகள் இருக்கும் இடத்தை அறிந்துகொள்ளக் கடுமையான முயற்சிகள் எடுத்தபோதிலும், அவை குறித்துக் கண்டறிய முடியவில்லை . அத்துடன், ட்ரோன் மூலமாகக் கடற்பகுதியில் கடற்படையினர் தேடுதல்களை மேற்கொண்டு வருகின்றனர்" எனத் தெரிவித்தார் .
--

